சிம்ம ராசியில் குரு-செவ்வாய் சேர்க்கை: மார்ச் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழ்வாங்க..

Jupiter-Mars Conjunction In Leo 2026: வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் அறிவு, அதிர்ஷ்டம், செல்வம் ஆகியவற்றின் காரணியாவார். தற்போது குரு பகவான் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். அதே வேளையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார்.

Jupiter-Mars Conjunction In Leo 2026 These Zodiac Signs Life Will Shine Till March 2027

இந்த செவ்வாய் நவம்பர் 12 ஆம் தேதி கடக ராசியில் இருந்து வெளியேறி சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் சிம்ம ராசியில் செவ்வாய் மற்றும் குரு பகவானின் சேர்க்கை நிகழவுள்ளது. ஜோதிட ரீதியாக குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுவும் இவ்விரு கிரகங்களும் 2027 மார்ச் வரை ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர்.

இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த குரு செவ்வாய் சேர்க்கையால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தையும், தொழிலில் நல்ல வளர்ச்சியையும், பல புதிய வாய்ப்புக்களையும் பெற்று, வாழ்வில் உச்சத்தை அடையவுள்ளார்கள். இப்போது சிம்ம ராசியில் ஒன்றிணையும் குரு செவ்வாய் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 5 ஆவது வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலைகளை சுறுசுறுப்பாக செய்வார்கள். எந்த வேலையை கையில் எடுத்தாலும், அதை வெற்றிகரமாக முடிப்பார்கள். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வணிகர்களுக்கு புதிய நட்புகளால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். இருப்பினும் நிதி விஷயங்களில் நன்கு சிந்தித்து முடிவெடுப்பதோடு, தேவையற்ற செலவுகளைத் தவிர்த்தால் நல்ல பலன்களைப் பெறலாம்.

சிம்மம்

சிம்ம ராசியின் முதல் வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். தொழில் ரீதியாக எதிர்பாராத அளவில் வளர்ச்சியைக் காண்பார்கள். இருப்பினும் எந்த ஒரு பெரிய முதலீடுகளையும் ஆராயாமல் அவசரப்பட்டு எடுக்காமல், முழுமையாக யோசித்து ஆராய்ந்து செய்தால், நல்ல லாபத்தைப் பெறலாம்.

கும்பம்

கும்ப ராசியின் 7 ஆவது வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலையில் நிறைய மாற்றங்களைக் காண்பார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரலாம். வேலையை மாற்ற முயற்சித்துக் கொண்டிருந்தால், நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கூட்டு வணிகம் செய்ய நினைத்து முயற்சித்தால் நல்ல லாபத்தைப் பெறலாம். ஆனால் பண விஷயத்தில் அவசரப்படுவதை விட முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, November 6, 2026, 20:14 [IST]
Desktop Bottom Promotion