Latest Updates
-
1.11 லட்சத்திற்கு விற்கப்படும் இந்தியாவின் காஸ்ட்லியான தீபாவளி ஸ்வீட் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
தீபாவளிக்கு 15 நிமிடத்தில் அதிரசம் செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சிம்ம ராசியில் குரு-செவ்வாய் சேர்க்கை: மார்ச் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழ்வாங்க.. -
தீபாவளிக்கு இந்த அவல் முறுக்கை செஞ்சு பாருங்க - வாரக்கணக்கில் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
புதன்-சுக்கிரனால் உருவாக்கப்படும் லட்சுமி நாராயண யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
எம தீபத்தை எப்போது ஏற்ற வேண்டும்? எந்த இடத்தில் மற்றும் திசையில் ஏற்றி வைக்க வேண்டும்? -
இந்தியாவின் 'ஐஸ்க்ரீம் தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? இங்க தினமும் ஐஸ்க்ரீம் சாப்பிடணுமாம் -
தீபாவளி ஸ்பெஷல் பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
தீபாவளி ஸ்பெஷல் காரசாரமான மட்டன் குழம்பு ரெசிபி - இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - தீபாவளியே ஸ்பெஷலாகிரும் -
தீபாவளி பலகாரங்களால் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த வழிகளை ஃபாலோ பண்ணுங்க..
200 கிராம் பன்னீர் இருந்தா இந்த தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி கிரேவியை செய்யுங்க - டக்கரா இருக்கும்
Paneer Bhurji Masala Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி, பூரி செய்வீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் என்ன சைடிஷ் செய்வதென்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பன்னீர் என்றால் பிடிக்குமா? அப்படியானால் அந்த பன்னீரை வைத்து தாபா ஈஸியான முறையில் பன்னீர் புர்ஜி மசாலா செய்து கொடுங்கள். இந்த பன்னீர் புர்ஜி மசாலா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரி, நாண் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் சூப்பராக இருக்கும்.

முக்கியமாக இந்த சிம்பிளான பன்னீர் புர்ஜி மசாலா குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். ஒருமுறை இந்த பன்னீர் புர்ஜி மசாலாவை செய்து விட்டால் அதன்பின் உங்களுக்கு சப்பாத்தி என்றாலே இந்த பன்னீர் புர்ஜிதான் நினைவிற்கு வரும்.
உங்களுக்கு சுவையான் பன்னீர் புர்ஜி கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் புர்ஜி மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் வெண்ணெய்
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கியது
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
- ½ ஸ்பூன் சீரகத்தூள்
- 1 ஸ்பூன் கொத்தமல்லித்தூள்
- தேவையான அளவு உப்பு
- 1 ஸ்பூன் கடலை மாவு
- 3 தக்காளி, பொடியாக நறுக்கியது
- ½ குடைமிளகாய், பொடியாக நறுக்கியது
- 1 கப் தண்ணீர்
- 200 கிராம் பனீர், உதிர்த்தது
- ½ ஸ்பூன் கரம் மசாலா
- 1 ஸ்பூன் கசூரி மேத்தி, பொடியாக நறுக்கியது
- 2 ஸ்பூன் கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது
செய்முறை:
- முதலில், ஒரு பெரிய வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய், 1 ஸ்பூன் வெண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து சூடாக்கவும். சீரகம் வாசனை வரும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து, ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் மிளகாய் தூள், ½ ஸ்பூன் சீரகத் தூள், 1 ஸ்பூன் மல்லித் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் 1 ஸ்பூன் கடலை மாவு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- மசாலாப் பொருட்களிலிருந்து வாசனை வரும் வரை வதக்கவும். கடலை மாவைச் சேர்ப்பதால் இந்த மசாலா கெட்டியாக இருக்கும்.
- அதன்பிறகு, நறுக்கிய 3 தக்காளிகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- தக்காளி மென்மையாகி, குழைந்து வரும் வரை வதக்கவும். பின்னர் ½ குடைமிளகாயைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- பின்னர் 1 கப் தண்ணீர் சேர்த்து, தேவைக்கேற்ப பதத்தை சரிசெய்து கலந்து கொள்ளவும்.
- அதனுடன், 200 கிராம் பன்னீரை நன்கு உதிர்த்து சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- மூடி வைத்து, மிதமான தீயில் 2 நிமிடங்கள் வேகவிடவும்.
- இப்போது ½ டீஸ்பூன் கரம் மசாலா, 1 டீஸ்பூன் கசூரி மேத்தி மற்றும் 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- அவ்வளவுதான் பன்னீர் புர்ஜி கிரேவி ரெடி. இதை சூடான சப்பாத்தி அல்லது பூரியுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
