சுக்கிரதாதித்ய யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?

தீபாவளி கொண்டாட்டங்கள் நிறைந்த பண்டிகை மட்டுமல்ல ஜோதிடரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் தன்தேரஸ் செல்வம், செழிப்பு மற்றும் பணத்திற்கு மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டு, சுக்ராதித்ய ராஜயோகம் நவம்பர் 6, 2026 அன்று உருவாகி, அதிகாலை 1:04 மணி வரை நீடிக்கும் என்றும், அதன் பிறகு சுக்கிரன் வக்ரமடைந்து கன்னி ராசியில் பிரவேசிப்பார் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Dhanteras 2026 Shukraditya Rajayoga Bring Big Success To These Zodiac Signs

சுக்கிரனும் சூரியனும் இணைவதால் உருவாகும் 'சுக்கிராதித்ய ராஜயோகம்', செல்வம், தொழில், சமூக அந்தஸ்து மற்றும் பொருள் சார்ந்த வசதிகளை மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்தச் சேர்க்கையினால் சில ராசிக்காரர்கள் நேர்மறையான பலன்களை அனுபவிக்கப்போகிறார்கள். இதனால் அவர்களுக்கு நிதி வளர்ச்சிக்கும், நீண்டகாலமாகத் தேங்கிக் கிடந்த பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் வாய்ப்புகள் அமையும். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

சுக்ராதித்ய ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமானதாகக் கருதப்படுகிறது. இந்த யோகத்தால் அவர்களின் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், மேலும் அவர்கள் அனைத்து வகையான ஆடபம்பர இன்பங்களையும் பெறலாம். புதனின் அஸ்தமனம் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் பெரும் பணம் சம்பாதிக்க சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது.

உங்களின் பழைய முதலீடுகள் சிறந்த பலன்களைத் தரும், மேலும் உங்கள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சனைகள் இப்போது தீர்க்கப்படும். நிதி நிலை அதிகரிப்பதால் சேமிப்பும் உயரும். அலுவலகத்தில் சம்பளம் மற்றும் பதவியில் உயர்வு இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு 'சுக்ராதித்ய ராஜயோகம்' காரணமாக நிதி விவகாரங்களில் சாதகமான முன்னேற்றங்கள் ஏற்படக்கூடும். புதிய வருமான வாய்ப்புகள், பணியிடத்தில் அங்கீகாரம் மற்றும் லாபகரமான வணிக ஒப்பந்தங்கள் போன்றவை இந்த யோகத்தினால் கிடைக்கக்கூடும். இந்த நேரத்தில் வியாபாரத்தில் எதிர்பார்த்த நிதிநன்மைகள் கிடைக்கும். வணிக முயற்சிகள் லாபகரமாக இருக்கும், இது அதிக லாபம் மற்றும் சேமிப்புக்கு வழிவகுக்கும்.

இந்த நேரத்தில் புத்திசாலித்தனமான முதலீடுகள் செய்யப்படலாம், இது எதிர்காலத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும். ரிஷப ராசிக்காரர்கள் தனிப்பட்ட உறவுகளில், குறிப்பாக வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை எதிர்பார்க்கலாம். இந்த மாற்றம் அவர்களின் முன்னேற்றத்திற்கான கதவுகளை திறக்கப்போகிறது.

துலாம்

சுக்கிராதித்ய ராஜயோகம், துலாம் ராசியினருக்குத் தொழில் மற்றும் நிதி சார்ந்த வாய்ப்புகளைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. பணியில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம் அல்லது பதவி உயர்வு ஏற்படலாம். இந்த நேரத்தில் அவர்கள் புதிய வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்க வாய்ப்புகள் உருவாகலாம். பொருளாதாரநிலை கடந்த காலத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்கள் விரும்பும் பல விஷயங்களை அடைய முடியும். உங்களைப் பற்றி பலருக்கு இருந்த தவறான எண்ணங்கள் முடிவுக்கு வரும்.

திருமணமான தமபதிகளிடையே நெருக்கமும், ஒற்றுமையும் அதிகரிக்கும். வீட்டிற்காக சில ஆடம்பர பொருட்களை வாங்கலாம். வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய திட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

கும்பம்

கும்ப ராசியினருக்கு 'சுக்ராதித்ய ராஜயோகம்' தொழில் வளர்ச்சி மற்றும் நிதி முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட சிறப்பான நன்மைகளை அடையலாம், மேலும் கடந்த கால முதலீடுகள் சிறந்த பலன்களைத் தரும். திருமணமானவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

வேலையில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் கிடைக்கும். அவர்களின் வெற்றியாலும், பொருளாதார நிலையாலும் சமூகத்தில் அவர்களின் மரியாதை அதிகரிக்கும். கடந்த காலத்தில் நிலுவையில் உள்ள பணிகளைத் சரியாக முடிக்க முடியும். ஆரோக்கியம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, November 6, 2026, 23:27 [IST]
Desktop Bottom Promotion