சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 14 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..

Sun Transit In Vishakam Nakshatra 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதந்தோறும் ராசியை மாற்றுவது மட்டுமின்றி, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அந்த வகையில் தற்போது சூரியன் துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் நவம்பர் 06 ஆம் தேதி சூரியன் சுவாதி நட்சத்திரத்தில் இருந்து விசாகம் நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ளார். சூரியனின் இந்த நட்சத்திர மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறவுள்ளனர்.

Sun Transit In Vishakam Nakshatra 2026 These Zodiac Signs Will Be Lucky

பஞ்சாங்கத்தின் படி, சூரியன் நவம்பர் 06 ஆம் தேதி இரவு 09.08 மணிக்கு விசாகம் நட்சத்திரத்திற்குள் நுழைந்து, அந்த நட்சத்திரத்தில் நவம்பர் 20 ஆம் தேதி வரை இருக்கப் போகிறார். இதற்கிடையில் சூரியன் நவம்பர் 16 ஆம் தேதி சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். சூரியன் நுழைந்துள்ள விசாகம் நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான் ஆவார். இப்போது விசாகம் நட்சத்திரத்திற்குள் சூரியன் செல்வதால் அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்

சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெறுவார்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்தி உங்களை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு புதிய நட்புகளால் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத அளவில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். இருந்தாலும் இக்காலத்தில் நிதி தொடர்பான எந்த ஒரு பெரிய முடிவையும் அவசரப்பட்டு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

தனுசு

சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதவைப் பெறுவார்கள். எந்த ஒரு வேலையையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வேலையை மாற்ற நினைத்தால், இக்காலத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வணிகர்கள் புதிய திட்டங்களால் நல்ல முன்னேற்றத்துடன், லாபத்தையும் காண்பார்கள். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். முக்கியமாக இக்காலத்தில் அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பாமல், கடினமாக உழைக்கவும் செய்தால் நல்ல பலனைப் பெறலாம்.

மீனம்

சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு தங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வணிகர்கள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். தடைபட்டு வந்த முக்கியமான வேலைகள் தடையின்றி நடக்கும். மொத்தத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் எதிலும் வெற்றி கிட்டும். இருப்பினும், இக்காலத்தில் அதிக வேலைப்பளு காரணமாக ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால், உடல்நலத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, November 6, 2026, 23:51 [IST]
Desktop Bottom Promotion