வார ராசிபலன் (08 November 2026-14 November 2026)- இந்த வாரம் உங்க ராசி எப்படி இருக்கப்போகுது தெரியுமா?

Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

Weekly Horoscope For 08 November 2026 To 14 November 2026 In Tamil

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2026 நவம்பர் 08 ஆம் தேதி முதல் 2026 நவம்பர் 14 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணியிடத்தில் சில புதிய வாய்ப்புகளைக் கொண்டுவரும். ஆனால் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள, உங்கள் வார்த்தைகளிலும் செயல்களிலும் நல்லிணக்கத்தைப் பேண வேண்டும். அலுவலகத்தில் உடன் வேலை செய்வோருடன் தவறான புரிதலை தவிர்க்க வேண்டும். நிதி ரீதியாக செலவுகள் அதிகமாக இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் சண்டைகள் அதிகமாக ஏற்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தலைவலி, கண்களில் எரிச்சல், மன அழுத்தம் போன்றவற்றால் அவதிப்படக்கூடும். ஓய்வு மற்றும் தூக்கத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். எந்த வேலையிலும் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். தொழிலதிபர்கள் எச்சரிக்கையுடன் பணத்தை பரிவர்த்தனை செய்ய வேண்டும். வார தொடக்கத்தில் வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். வாரத்தின் முதல் பாதியில் நீங்கள் வேலையில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். சிறிய வேலைகளை முடிக்க கூட அதிகமாக ஓட வேண்டியிருக்கும். இந்த வாரம், வேலை செய்பவர்கள் தங்கள் பணியிடத்தில் தங்கள் எதிரிகளிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மிதுனம்

இந்த வாரம் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். எந்த வேலையிலும் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் செலுத்தினால், அதில் அதிக வெற்றியும் லாபமும் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பெரிய பொறுப்புகள் அல்லது பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிக்கும். நிதி ரீதியாக இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வணிகம் தொடர்பாக நீங்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். பயணம் இனிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

கடகம்

இந்த வாரம் கலவையாக இருக்கும். ஆரோக்கியம், உறவுகள் இரண்டிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பேசும் போதும், பழகும் போதும், எந்தவிதமான தவறான புரிதல்களும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். யாருக்கும் தவறான உறுதிமொழிகளை வழங்குவதையோ அல்லது யாரையும் புறக்கணிப்பதையோ தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், தொழில்ரீதியாக வாரத்தின் முதல் பாதி சற்று சவாலானதாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கு முன்பு அல்லது எந்தவொரு பெரிய விஷயத்திலும் முதலீடு செய்வதற்கு முன்பு ஒரு அனுபவம் வாய்ந்த நபரின் வழிகாட்டுதலைப் பெறுவது நல்லது.

சிம்மம்

இந்த வாரம் உங்களுக்கு சிறப்பான வாரமாக இருக்கும். வருமானம் அதிகரிப்பதால் உங்களின் பொருளாதார பிரச்சனைகள் தீரும் மற்றும் செலவுகள் குறையும். இதனால் நீங்கள் அதிகமாக சேமிக்க முடியும். வேலையை மாற்ற இந்த வாரம் சாதகமாக இருக்கும். சிலருக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். வீட்டில் யாரேனும் திருமணமானவர்கள் இருந்தால் அவர்களது திருமணம் பற்றி பேசலாம். வாழ்க்கைத் துணையுடன் இந்த வாரம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளைத் தவிர்க்க, ஓய்வின்றி வேலை செய்வதைத் தவிர்க்கவும்.

கன்னி

இந்த வாரம் உங்களுக்கு சவாலான வாரமாக இருக்கும். உடல்நல பிரச்சினைகள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதிக்கும். அதிக செலவுகளைத் தவிர்க்கவும், பட்ஜெட்டை திட்டமிட்டு உருவாக்கவும். குடும்பத்தில் நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை கொடுங்கள், ஏனெனில் மனக்கசப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வேலையில் இடையூறு ஏற்படாமல் இருக்க உங்கள் வார்த்தைகளைக் கவனியுங்கள். நிதி நிலையற்ற தன்மை மற்றும் வணிக போட்டியாளர்கள் உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கலாம். தோல்விகளைத் தவிர்க்க திட்டங்களை ரகசியமாக வைத்திருங்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இது ஒரு நம்பிக்கைக்குரிய வாரமாக இருக்கும். சவால்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு வெற்றி பெறலாம். இழப்புகளைத் தடுக்க விழிப்புடன் செயல்படுங்கள் மற்றும் முட்டாள்தனமான நம்பிக்கையைத் தவிர்க்கவும். வியாபாரிகள் மிகவு கவனத்துடன் இருக்க வேண்டும். சமூக மரியாதையை பராமரிக்க கவனமாக நடந்து கொள்ளுங்கள். வியாபாரம் செழிக்கும், சொத்து முயற்சிகளில் லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகள் முடிவுக்கு வருவது மன நிம்மதியைத் தரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வாரம் மற்றவர்களை கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் உங்களுக்கு நிதி இழப்பு மற்றும் அவமானம் ஏற்படக்கூடும். சில பெரிய பொறுப்புகள் திடீரென்று உங்கள் மீது விழும். இதை நிறைவேற்ற நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாதகமற்றதாக இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தால், வாரத்தின் நடுப்பகுதியில் பணத்தை பரிவர்த்தனை செய்யும்போது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வேலை செய்பவர்கள் பணியிடத்தில் எந்தவிதமான அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியும், துக்கமும் நிறைந்த கலவையான வாரமாக இருக்கும். தொழிலில் ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடும். பணம் வந்த வேகத்தில் செலவாகும். வாரத்தின் தொடக்கத்தில், வேலை தொடர்பாக நீங்கள் நீண்ட அல்லது குறுகிய தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். வேலையில் இருப்பவர்கள், பணியிடத்தில் தாங்கள் செய்யும் கடின உழைப்புக்கு அதிக பாராட்டு கிடைக்கவில்லை என்பதை உணரலாம். காதல் உறவில் எழும் தவறான புரிதல்களை நீக்க, மனம் விட்டு பேசுங்கள். கோபத்தில் எந்த பெரிய முடிவையும் எடுக்காதீர்கள். இல்லையெனில் நீங்கள் வருத்தப்பட வேண்டியிருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் முதல் பாதியில் சில தடைகளை சந்தித்தாலும், இறுதியில் எதிர்பார்த்த வெற்றியையும் லாபத்தையும் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சிறப்பு ஆதரவைப் பெறுவீர்கள், இது உங்கள் துணிச்சலையும் தைரியத்தையும் அதிகரிக்கும். வாரத்தின் நடுப்பகுதி தொழில் ரீதியாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வணிகத் திறன்கள் மேம்படும். தொழிலில் முதலீடு செய்ய திட்டமிடலாம். இருப்பினும், ஆபத்தான முதலீடுகளைத் தவிர்க்கவும்.

கும்பம்

இந்த வார தொடக்கத்தில் பெரிய கவலையில் இருந்து விடுபடுவீர்கள். பணியிடத்தில் இந்த சிரமங்கள் நீங்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். உங்களின் சிறப்பான செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்படும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். வணிகர்களுக்கு வாரத்தின் கடைசி சில நாட்கள் லாபகரமாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கடந்த வாரத்தை விட சற்று சிறப்பாக இருக்கும். திட்டமிட்ட பணிகளை சரியான நேரத்தில் முடிப்பதால் உங்கள் உற்சாகமும் தைரியமும் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளும் கடின உழைப்பும் பணியிடத்தில் அங்கீகரிக்கப்படும். வாரத்தின் நடுப்பகுதியில் உயர் அதிகாரிகளின் உதவியுடன் லாபம் ஈட்ட வாய்ப்புகள் இருக்கும். இந்த வாரம் உங்கள் விருப்பம் நிறைவேறக்கூடும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். காதல் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, November 7, 2026, 18:32 [IST]
Desktop Bottom Promotion