Latest Updates
-
தீபாவளி ஸ்பெஷல் பாய்வீட்டு மட்டன் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 07, 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு அதிசயங்கள் நடக்கும் நாளாக இருக்குமாம் -
சுக்கிரன் கன்னி ராசிக்குள் நுழைந்திருப்பதால் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுதாம் - உங்க ராசி என்ன -
தீபாவளிக்கு இந்த பொள்ளாச்சி ஸ்டைல் சிக்கன் பிரியாணியை செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
Skin Care: தக்காளி எப்படி உங்கள் சருமத்தை கண்ணாடி போல ஜொலிக்க வைக்கும் தெரியுமா? -
வார ராசிபலன் (08 November 2026-14 November 2026)- இந்த வாரம் உங்க ராசி எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
தீபாவளி ஸ்பெஷல் கேரளா ஸ்டைல் மனோகரம் முறுக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இனிப்பா சூப்பரா இருக்கும் -
Happy Diwali 2026: இந்தியா தவிர தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் நாடுகள் என்னென்ன தெரியுமா? -
தீபாவளி ஸ்பெஷல் கர்நாடகா ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - செமயா இருக்கும் -
இந்தியாவின் 'மாந்திரீக பூமி' என்று அழைக்கப்படும் கிராமம் எது தெரியுமா? எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா?
குண்டூர் சிக்கன் ரோஸ்ட் ரெசிபி - இந்த மாதிரி சிக்கனை ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும்
Guntur Chicken Roast Recipe in Tamil: தீபாவளிக்கு ஸ்பெஷலாக அனைவரின் வீட்டிலும் அசைவ விருந்து ரெடி தயார் செய்வார்கள். அதில் பெரும்பாலான வீடுகளில் சிக்கன் நிச்சயம் இருக்கும். இந்த வருடமும் நீங்கள் வாங்க போகிறீர்கள் என்றால் அதனை வழக்கமான பிரியாணி அல்லது வறுவல் செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக குண்டூர் ஸ்டைல் சிக்கன் ரோஸ்ட்டை முயற்சி செய்து பாருங்கள்.

இந்த சிக்கன் ரோஸ்ட் தென்னிந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானதாகும். இந்த சிக்கன் ரோஸ்ட் பிரியாணி, சாதம், புரோட்டா என அனைத்திற்கும் பக்காவான சைடிஷாக இருக்கும். இந்த தீபாவளி விருந்தை கூடுதல் ஸ்பெஷலானதாக மாற்ற இந்த குண்டூர் சிக்கனை அவசியம் முயற்சி செய்து பாருங்கள்.
உங்களுக்கு குண்டூர் சிக்கன் ரோஸ்ட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குண்டூர் சிக்கன் ரோஸ்ட்டின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலாப் பொடிக்கு:
- கொத்தமல்லி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
- கிராம்பு - 5-6
- ஏலக்காய் - 4
- மராத்தி மொக்கு - ¼
- நட்சத்திர சோம்பு - ½
- இலவங்கப்பட்டை - 1 இன்ச்
- சீரகம் - ½ டேபிள் ஸ்பூன்
சிக்கனை வேகவைக்க:
- கோழி இறைச்சி - ½ கிலோ
- பச்சை மிளகாய் - 4
- இலவங்கப்பட்டை - சிறிய துண்டு
- கிராம்பு - 3
- இஞ்சி - ஒரு விரல் அளவு
- பூண்டு - 15 அல்லது 20 பல்
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- பிரியாணி இலை - 1
- உப்பு - தேவையான அளவு
சிக்கன் ரோஸ்டுக்கு:
- எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
- வெங்காயம் - 1
- இஞ்சி பூண்டு விழுது - ½ டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - 3 கொத்து
- சிக்கன் ஸ்டாக் - 3-4 டேபிள் ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 ¼ டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை - ½ பழம்
- கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் சிக்கனை இரண்டு முறை தண்ணீரில் சுத்தமாக அலசி, பின் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு கழுவி எடுத்து கொள்ளவும். எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து, விதைகளை நீக்கி தனியே வைக்கவும்.
- பூண்டு மற்றும் வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து மேற்பரப்பில் இருக்கும் கருப்பு நிற புஞ்சையை நீக்க நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- நன்கு பழுத்த தக்காளியை சுத்தமாக கழுவி அதன் பச்சை நிற காம்பு பகுதியை நீக்கி விட்டு பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும். இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் சீவி விட்டு பின் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- மிக்ஸி ஜாரில் பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து பல்ஸ் மோடில் சில சுற்றுகள் சுற்றி, பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- பச்சை மிளகாயை கழுவி காம்புகளை நீக்கி விட்டு இரண்டாக கீறி கொள்ளவும். கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை மண் இல்லாமல் சுத்தமாக தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், கொத்தமல்லி விதைகள், கிராம்பு, ஏலக்காய், மராத்தி மொக்கு, நட்சத்திர சோம்பு, இலவங்கப்பட்டை மற்றும் சீரகம் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுத்து ஆற விடவும்.
- பின் அதை ஈரமில்லாத மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்து வைக்கவும். அடுத்து அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் அலசி சுத்தம் செய்து வைத்த சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்.
- அதனுடன் நறுக்கி வைத்த பச்சை மிளகாய், இலவங்கப்பட்டை,
கிராம்பு,
அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுது 1 டீ ஸ்பூன், மஞ்சள் தூள், மற்றும்
பிரியாணி இலையை சேர்க்கவும்.
- அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சிக்கன் முக்கால் பதம் வேகும் வரை, நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும். பின் தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும்.
- பின் வாணலியை அல்லது கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய விடவும். அதனுடன் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- அதனுடன் ½ டீ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் கருவேப்பிலை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும். பின் வேக வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.
- அதனுடன் மிளகாய் தூள் மற்றும் வறுத்து பொடி செய்து வைத்த மசாலா பொடியை சேர்த்து நன்கு கிளறவும். பின் அடுப்பை முழுமையான தீயில் வைத்து, அதனுடன் வேக வைத்த சிக்கன் தண்ணீரை 3-4 டேபிள் ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி சிக்கனை முழுமையாக வேக விடவும்.
- கடைசியாக பிழிந்து வைத்த எலுமிச்சை சாறு சேர்த்து 2 அல்லது மூன்று நிமிடங்கள் வேக விட்டு, பின் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்தால் சுவையான குண்டூர் சிக்கன் ரோஸ்ட் ரெடி!



Click it and Unblock the Notifications
