Latest Updates
-
தீபாவளி பலகாரங்களை ஒரு பிடி பிடித்துவிட்டீர்களா? தீபாவளிக்குப் பிறகு குடிக்க வேண்டிய 5 பானங்கள் இதோ! -
இந்தியாவின் NRI கிராமம் என்று அழைக்கப்படும் பணக்கார கிராமம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
நவம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 7 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
கையேந்தி பவன் வடகறி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. இட்லிக்கு அள்ளும்.. -
நவம்பர் 09, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கணும் - இல்லனா கஷ்டப்பட வேண்டியிருக்கும் -
Diwali 2026: பட்டாசுப் பொறிகள் கண்களில் பட்டால் இந்தத் தவறுகளைச் செய்யாதீர்கள்! கண் மருத்துவர் எச்சரிக்கை! -
Diwali 2026: தீபாவளி பட்டாசு தீப்பொறி சருமத்தில் பட்டால் என்ன செய்வது? மருத்துவர் கூறும் முதலுதவி வழிகள்! -
குண்டூர் சிக்கன் ரோஸ்ட் ரெசிபி - இந்த மாதிரி சிக்கனை ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
தீபாவளி ஸ்பெஷல் பாய்வீட்டு மட்டன் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 08, 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு அதிசயங்கள் நடக்கும் நாளாக இருக்குமாம்
வெண்டைக்காயுடன் தயிர் சேர்த்து இந்த மாதிரி தாபா ஸ்டைல் மசாலா செய்யுங்க - சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும்
Dhaba Style Vendakkai Thayir Masala Recipe in Tamil: வெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமான காய்கறிளில் ஒன்றாகும். இதுவரை வெண்டைக்காயை பொரியல், சாம்பார் என்று தான் செய்திருப்பீர்கள். ஆனால் இந்த வெண்டைக்காயைக் வைத்து தாபா ஸ்டைலில் ஒரு அட்டகாசமான மசாலா செய்யலாம். அதுவும் தயிர் சேர்த்து செய்யும் வெண்டைக்காய் கிரேவி சாதத்துடன் மட்டுமின்றி சப்பாத்தி, தோசையுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக வெண்டைக்காயை இந்த சுவையில் செய்யும் போது, வெண்டைக்காய் பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த தாபா ஸ்டைல் வெண்டைக்காய் தயிர் கிரேவியை செய்வது மிகவும் எளிதானது. உங்கள் வீட்டு குழந்தைகள் வெண்டைக்காய் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்தால் இதை ஒருமுறை செய்து கொடுங்கள். அதற்குப்பின் வெண்டைக்காயை வேண்டுமென்றே சொல்ல மாட்டார்கள்.
உங்களுக்கு தாபா ஸ்டைல் வெண்டைக்காய் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தாபா ஸ்டைல் வெண்டைக்காய் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 கப் நறுக்கிய வெண்டைக்காய்
- 1 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
- 3 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள்
- ½ ஸ்பூன் கரம் மசாலா தூள்
- தேவையான அளவு உப்பு
- ¾ கப் தயிர்
- 1 ஸ்பூன் கொத்தமல்லி தூள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
- ¼ ஸ்பூன் பெருஞ்சீரகத் தூள்
- 1 ஸ்பூன் கசூரி மேத்தி
தாளிக்க:
- 3 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 வர மிளகாய்
- 2 ஸ்பூன்இஞ்சி
- 1 பச்சை மிளகாய்
செய்முறை:
- ஒரு கிண்ணத்தில் ¾ கப் தயிர், 1 ஸ்பூன் மிளகாய்த்தூள், 1 ஸ்பூன் மல்லித்தூள், ¼ ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ¼ ஸ்பூன் சோம்புத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும்.
- ஒரு கரண்டியைப் பயன்படுத்தி நன்றாகக் கலக்கவும்.
- ஒரு வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, அதில் நறுக்கிய வெண்டைக்காயைச் சேர்க்கவும்.
- இதனுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- வெண்டைக்காயின் பிசுபிசுப்புத்தன்மை நீங்கும் வரை வதக்கவும்.
- ஒரு வாணலியில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் 1 ஸ்பூன் சீரகம் மற்றும் 1 வர மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் 2 ஸ்பூன் இஞ்சி மற்றும் 1 பச்சை மிளகாயைச் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய 1 வெங்காயத்தைச் சேர்த்து, அது பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அதன் பிறகு, நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் அடித்து வைத்த தயிர் கலவையை சேர்த்து மிதமான தீயில் வைக்கவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- இப்போது வறுத்த வெண்டைக்காயைச் சேர்த்து நன்கு கிளறவும்.
- மிதமான தீயில் மூடி வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- பின்னர் மூடியைத் திறந்து கரம் மசாலா தூவி கிளறி அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான தாபா ஸ்டைல் வெண்டைக்காய் மசாலா ரெடி!



Click it and Unblock the Notifications
