நவம்பர் 25-ல் நடக்கும் புதன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப்போகுது!

Mercury Enters Vishakam Nakshatra On 25 November 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். நவகிரகங்களில் சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் தனது நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துபவர் தான் புதன். இந்த புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

Mercury Enters Vishakam Nakshatra On 25 November 2026 These Zodiac Signs Get More Money Benefits

மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன் தற்போது துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த புதன் நவம்பர் 25 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் இருந்து விசாகம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் புதன் டிசம்பர் 04 ஆம் தேதி வரை இருப்பார். இந்த விசாக நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான் ஆவார்.

புதனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த புதன் நட்சத்திர பெயர்ச்சியால் நேர்மறையான பலன்களைப் பெறவுள்ளனர். அதுவும் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளனர். இப்போது புதன் நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறவுள்ளார்கள் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

புதன் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். அதுவும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான சரியான வாய்ப்புகள் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முதலீடுகள் நல்ல வருமானத்தையும் பெரிய அளவில் லாபத்தைத் தரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்

புதன் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய மற்றும் முக்கியமான பொறுப்புகள் வழங்கப்படலாம். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வணிகர்களுக்கு புதிய நட்புகள் கிடைக்கும். அந்த நட்பால் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நேர்மறையான முடிவுகளைப் பெறுவார்கள். குடும்ப வாழ்வில் சந்தோஷம் பெருகும்.

தனுசு

புதன் நட்சத்திர பெயர்ச்சியானது தனுசு ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக மிகவும் முக்கியமானதாக இருக்கும். நீண்ட கால பண பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வணிகர்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு பெரிய ஆர்டர்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களின் சிறப்பான செயல்திறனை வெளிக்காட்டி உயர் அதிகாரிகளால் பாராட்டைப் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புதிய முதலீடுகளின் மூலம் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, November 9, 2026, 17:42 [IST]
Desktop Bottom Promotion