ஆபீஸில் பிரச்சனை அதிகமா இருக்கா? அப்ப உங்க ஆபீஸ் டேபிளிள் இந்த பொருளை வாங்கி வையுங்க..

Office Table Vastu Tips: ஒவ்வொருவருக்குமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண வேண்டுமென்ற ஆசை இருக்கும். கடின உழைப்பு, திறமை மற்றும் அனுபவத்துடன் சேர்த்து, வேலை செய்யும் இடத்தின் சூழலும் நமது சிந்தனை மற்றும் செயல்திறனில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதனால் தான் வேலை செய்யும் இடம் அல்லது அலுவலகத்தைச் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்திருக்க வேண்டும். அதுவும் அலுவலகத்தில் நாம் அதிக நேரம் செலவிடும் டேபிளை வாஸ்துப்படி அமைப்பதும் நல்ல பலன்களைத் தரும் என்று நம்பப்படுகிறது.

Office Table Vastu Tips Keep These Things On Your Work Table For Career Growth amp amp Promotion

வாஸ்துப்படி, ஆபீஸ் டேபிளில் வைக்கும் சில பொருட்கள் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், பதவி உயர்வு, பண வரவுக்கான வாய்ப்புக்களை ஈர்க்க உதவுவதாக கூறப்படுகிறது. அதுவும் இந்த பொருட்கள் பணியிடத்தை அழகாகவும், புத்துணர்ச்சியாகவும் மாற்றுவதுடன், வேலை செய்வதற்கான ஆர்வத்தையும் அதிகரிக்கலாம். இப்போது வாஸ்து சாஸ்திரத்தின் படி, தொழில் வளர்ச்சிக்கு ஆபீஸ் டேபிளில் வைக்க வேண்டிய பொருட்கள் எவையென்பதைக் காண்போம்.

1. பசுமையான செடி

ஆபீஸ் டேபிளில் மணி பிளாண்ட் அல்லது மூங்கில் போன்ற பசுமையான செடிகளை வைப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த செடிகளானது நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிப்பதோடு, பணியிடத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

2. படிகார கல்

வாஸ்துப்படி, படிகார கல் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் பொருட்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த படிகார கல்லை ஆபீஸ் டேபிளின் வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் வைப்பது மன அமைதியையும், கவனத்தையும் அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. எனவே வேலையில் நிறைய பிரச்சனைகளை சந்தித்தால் படிகார கல்லை வாங்கி வையுங்கள்.

3. சுத்தமான மற்றும் ஒழுங்கான டேபிள்

வாஸ்துப்படி பணியிடத்தில் உள்ள டேபிள் சுத்தமாகவும், ஒழுங்காகவும் இருந்தாலே, அவ்விடத்தில் நேர்மறை ஆற்றல் அதிகம் நிரம்பியிருக்கும். எனவே ஆபீஸ் டேபிளின் மேல் பைல்கள், லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களை ஒழுங்காக வைத்திருங்கள். இது வேலையில் கவனத்தை நிலைநிறுத்த உதவும்.

4. ஊட்டமளிக்கும்படியான படங்கள்

வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஆபீஸ் டேபிளில் ஊட்டமளிக்கும் படியான வாக்கியங்களையோ அல்லது இலக்கு தொடர்பான போட்டோக்களையோ வைத்திருப்பது மிகவும் நல்லது. இது மன உறுதியை வலுவாக வைத்திருப்பதோடு, வேலையின் மீது நேர்மறையான அணுகுமுறையை அதிகரித்து, வேலையில் இலக்குகளை அடைய உதவும்.

5. நீர் நிரப்பப்பட்ட கண்ணாடி டம்ளர்

வாஸ்துப்படி ஆபீஸ் டேபிளில் சுத்தமான நீர் நிரப்பிய ஒரு கண்ணாடி டம்ளரை வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. முக்கியமாக இப்படி வைக்கும் நீரை தினமும் மாற்ற வேண்டும். இதன் மூலம் பணியிடத்தில் நேர்மறை ஆற்றல் நிரம்பியிருக்கும் மற்றும் வேலையில் முழு கவனத்தை செலுத்தி இலக்குகளை அடையலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Monday, November 9, 2026, 20:33 [IST]
Desktop Bottom Promotion