Latest Updates
-
2027 ஆம் ஆண்டு பிறப்பதற்கு முன் இந்த 3 ராசிக்காரர்களின் பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகுதாம் -
நவம்பர் 25-ல் நடக்கும் புதன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப்போகுது! -
25 லட்சத்துக்கு விற்கப்படும் ஒரு வீட்டுச்செடி - இந்த செடியில் அப்படி என்ன அதிசயம் இருக்கு தெரியுமா? -
மதியம் சிம்பிளா சமையலை முடிக்கணுமா? அப்ப இந்த சாம்பாரும், உருளைக்கிழங்கு ப்ரையும் செய்யுங்க.. -
வெண்டைக்காயுடன் தயிர் சேர்த்து இந்த மாதிரி தாபா ஸ்டைல் மசாலா செய்யுங்க - சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் -
தீபாவளி பலகாரங்களை ஒரு பிடி பிடித்துவிட்டீர்களா? தீபாவளிக்குப் பிறகு குடிக்க வேண்டிய 5 பானங்கள் இதோ! -
இந்தியாவின் NRI கிராமம் என்று அழைக்கப்படும் பணக்கார கிராமம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
நவம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 7 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
கையேந்தி பவன் வடகறி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. இட்லிக்கு அள்ளும்.. -
நவம்பர் 09, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கணும் - இல்லனா கஷ்டப்பட வேண்டியிருக்கும்
சூடான உணவை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும்? அப்படி வைப்பது பாதுகாப்பானதா?
குளிர்சாதனப்பெட்டி என்பது பெரும்பாலான வீடுகளில் இருக்கும் ஒரு அத்தியாவசிய சாதனமாகும். காய்கறிகள் முதல் சமைத்த உணவுகள் வரை அனைத்தையும் கெட்டுப்போகாமல் வைத்திருக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எந்தவொரு உணவையும் சூடாக இருக்கும்போது குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது என்பது நாம் செய்யும் தவறான விஷயங்களில் ஒன்றாகும்.

உணவுப் பாதுகாப்பு நிபுணர்களும், ஃப்ரிட்ஜ் உற்பத்தியாளர்களும் சூடாக இருக்கும் எந்த உணவையும் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது என்று அறிவுறுத்துகின்றனர். சூடான உணவை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது, அதன் உள்ளக வெப்பநிலையை உயர்த்தி, நீர்க்கசிவை உருவாக்கி, கம்ப்ரஸருக்கு அதிகப்படியான வேலையைக் கொடுத்து, சேமித்து வைக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களில் பாக்டீரியா வளர்ச்சி ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும். சூடான உணவை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கு முன், அதை ஏன் அறை வெப்பநிலைக்குக் குளிர விட வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஃபிரிட்ஜின் உட்புறத்தை சூடாக்குகிறது
சூடான உணவை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கும்போது, அது ஃபிரிட்ஜின் உட்புற வெப்பநிலையை அதிகரிக்கிறது. அப்போது, அனைத்தையும் மீண்டும் குளிர்விக்க குளிர்சாதனப் பெட்டி கூடுதல் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மேலும், இந்த திடீர் வெப்பமானது அருகில் ஏற்கனவே வைக்கப்பட்டிருக்கும் உணவுகளையும் சூடாக்கக்கூடும். இது குளிர்சாதனப் பெட்டிக்கும், உள்ளே இருக்கும் உணவுகளுக்கும் பாதுகாப்பானது அல்ல.
மற்ற உணவுகளையும் கெடுத்துவிடும்
சூடான உணவுகளை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கும்போது, அதன் உட்புற வெப்பநிலை அதிகரிக்கிறது. இதனால் பால், முட்டை, இறைச்சி மற்றும் மீதமான உணவுகள் போன்ற பிற பொருட்களும் சூடாகக்கூடும். வெப்பநிலையில் ஏற்படும் சிறிய உயர்வு கூட, தீங்கு விளைவிக்கும் கிருமிகள் வளர்வதற்கு வழிவகுக்கும். இத்தகைய உணவுகளை நாம் உட்கொள்ளும்போது, அவை உங்களை உடல்நலக்குறைவுக்கு உள்ளாக்கலாம்.
நீர்த்துளிகளை உருவாக்கி பொருட்களை ஈரமாக்குகிறது
சூடான உணவு குளிர்ச்சியான இடத்தில் வைக்கும்போது அது அதிகளவு நீராவியை வெளியிடுகிறது. இந்த நீராவி குளிர்சாதனப் பெட்டியில் உள்ள அலமாரிகள், சுவர்கள் மற்றும் பிற கொள்கலன்களில் நீர்த்துளிகளாக மாறுகிறது. குளிர்சாதனப் பெட்டிக்குள் அதிகப்படியான நீர் இருப்பது, பூஞ்சை வளரவும், பேக்கேஜிங் ஈரமாகவோ அல்லது குழைந்துபோகவோ வழிவகுக்கலாம்.
மின்சாரத்தின் பயன்பாடு அதிகரிக்கலாம்
சூடான உணவைக் குளிர்விப்பதற்கு உங்கள் குளிர்சாதனப் பெட்டி வழக்கத்தை விட மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இதனால் அது அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது, இது உங்கள் மின்சாரக் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தும். காலப்போக்கில், இந்த கூடுதல் சுமை குளிர்சாதனப் பெட்டியின் மோட்டாருக்குப் பாதிப்பை ஏற்படுத்தி, அது சரியாகச் செயல்படாத நிலையை உருவாக்கக்கூடும்.
உணவு சீராகக் குளிர்ச்சியடையாமல் போகலாம்
சூடான சாதம், குழம்பு அல்லது பால் நிரம்பிய பெரிய பாத்திரத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், அதன் வெளிப்புறம் விரைவாகக் குளிர்ந்தாலும், உட்புறம் நீண்ட நேரம் சூடாகவே இருக்கும். இவ்வாறு மெதுவாகக் குளிர்வதால், உணவின் உட்புறப் பகுதியில் கிருமிகள் வளர்வதற்கு வாய்ப்பு அதிகரிக்கிறது. குறிப்பாக அடர்த்தியான அல்லது கனமான உணவுகளில் இத்தகைய சூழல் உருவாகி, அந்த உணவு உண்பதற்குப் பாதுகாப்பற்றதாக மாறக்கூடும்.
குளிர்சாதனப் பெட்டியை பழுதாக்கலாம்
சூடான உணவுகளைத் தொடர்ந்து குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கும்போது, அதிலுள்ள மோட்டார் இடைவிடாமல் இயங்க வேண்டிய சூழல் ஏற்படும். இது தேய்மானத்தை அதிகரிப்பதோடு, குளிர்சாதனப் பெட்டி விரைவில் பழுதடைய காரணமாகலாம். உணவுகளை முதலில் ஆறவைப்பது, உங்கள் குளிர்சாதனப் பெட்டி நீண்ட காலம் நனறாகச் செயல்பட உதவும்.



Click it and Unblock the Notifications

