Latest Updates
-
நவம்பர் 10, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்டசெலவுகள் தேடிவரப் போகுதாம் - பர்ஸ் பத்திரம் -
நவம்பர் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவதால் இந்த 3 ராசிகளை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு இந்த வெஜிடேபிள் வெள்ளை குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க! -
சத்தான உளுந்தோரை ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க - எலும்பு இரும்பு மாதிரி இருக்கும் -
Kandha Sashti Viradham 2026: கந்த சஷ்டி விரதம் இருக்கும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை! -
Hair Care: முடி நரைப்பதை தாமதப்படுத்தணுமா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க -
ஆபீஸில் பிரச்சனை அதிகமா இருக்கா? அப்ப உங்க ஆபீஸ் டேபிளில் இந்த பொருளை வாங்கி வையுங்க.. -
சூடான உணவை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும்? அப்படி வைப்பது பாதுகாப்பானதா? -
2027 ஆம் ஆண்டு பிறப்பதற்கு முன் இந்த 3 ராசிக்காரர்களின் பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகுதாம்
கோதுமை தோசையும், பூண்டு கார சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Gothumai Dosa With Poondu Kara Chutney Recipe In Tamil: காலையில் என்ன டிபன் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வீட்டில் இட்லி, தோசை சுட மாவு வேறு இல்லையா? வீட்டில் கோதுமை மாவு உள்ளதா? அப்படியானால் அந்த கோதுமை மாவைக் கொண்டு கோதுமை தோசை செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக பூண்டு கார சட்னியை செய்யுங்கள். இந்த டிபன் காம்போ 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும். வேலைக்கு செல்பவர்களும், பேச்சுலர்களும் இந்த டிபன் காம்போவை தெரிந்து வைத்துக் கொண்டால், அவசரத்திற்கு கைகொடுக்கும்.

உங்களுக்கு இந்த கோதுமை தோசையும், பூண்டு கார சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை தோசை, பூண்டு கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பூண்டு கார சட்னிக்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 10
* காஷ்மீரி வரமிளகாய் - 4
* பூண்டு - 1 கைப்பிடி
* சின்ன வெங்காயம் - 10
* சின்ன தக்காளி - 1
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
கோதுமை தோசைக்கு...
* கோதுமை மாவு - 1 கப்
* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 கப்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் கோதுமை மாவு, கடலை மாவு, அரிசி மாவு,
தயிர், சுவைக்கேற்ப உப்பு மற்றும் நீரை ஊற்றி கட்டிகளின்றி நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை எடுத்துக் கொண்டு, தோசை மாவு
பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும்
வேக வைத்து எடுத்தால், கோதுமை தோசை தயார்.
* அடுத்து சட்னி செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய் மற்றும் காஷ்மீரி மிளகாயை
சேர்த்து நன்கு வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதே எண்ணெயில் பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை எடுத்துக் கொண்டு, நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில்
சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்க்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை,
பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கலந்தால்,
பூண்டு கார சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
