Latest Updates
-
சப்பாத்திக்கு இந்த வெஜிடேபிள் வெள்ளை குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க! -
சத்தான உளுந்தோரை ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க - எலும்பு இரும்பு மாதிரி இருக்கும் -
Kandha Sashti Viradham 2026: கந்த சஷ்டி விரதம் இருக்கும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை! -
Hair Care: முடி நரைப்பதை தாமதப்படுத்தணுமா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க -
ஆபீஸில் பிரச்சனை அதிகமா இருக்கா? அப்ப உங்க ஆபீஸ் டேபிளில் இந்த பொருளை வாங்கி வையுங்க.. -
சூடான உணவை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும்? அப்படி வைப்பது பாதுகாப்பானதா? -
2027 ஆம் ஆண்டு பிறப்பதற்கு முன் இந்த 3 ராசிக்காரர்களின் பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகுதாம் -
நவம்பர் 25-ல் நடக்கும் புதன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப்போகுது! -
25 லட்சத்துக்கு விற்கப்படும் ஒரு வீட்டுச்செடி - இந்த செடியில் அப்படி என்ன அதிசயம் இருக்கு தெரியுமா? -
மதியம் சிம்பிளா சமையலை முடிக்கணுமா? அப்ப இந்த சாம்பாரும், உருளைக்கிழங்கு ப்ரையும் செய்யுங்க..
புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவதால் இந்த 3 ராசிகளை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா?
நவகிரகங்களில் புதன் கிரகமானது அறிவு, வணிகம், பேச்சு மற்றும் தகவல் தொடர்பின் அதிபதியாகக் கருதப்படுகிறது. புதன் ஒரு கிரகத்தை விட்டு மற்றொரு கிரகத்திற்கு நகரும் போது, அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நம்பப்படுகிறது. தற்போது, புதன் துலாம் ராசியில், சுவாதி நட்சத்திரத்தில் நிலைபெற்றிருக்கிறார். நவம்பர் 25 அன்று, அவர் விசாக நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இது ஒரு முக்கியமான ஜோதிட நகர்வாகக் கருதப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, புதன் கிரகம் விசாக நட்சத்திரத்திற்குள் பிரவேசிப்பது சில ராசிக்காரர்களுக்குச் சாதகமான மாற்றங்களையும், சில ராசிக்காரர்களுக்கு பாதகமான மாற்றங்களையும் கொண்டுவரக்கூடும். இந்த காலகட்டத்தில் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலுமே தடைகள் மற்றும் சவால்களை சந்திக்க நேரிடும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் புதனின் நட்சத்திர மாற்றத்தால் துன்பங்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர மாற்றத்தால் பல சவால்களை எதிர்கொள்ளப் போகிறார்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்கள் ஏற்படும். நீங்கள் ஏதேனும் பயணத்திற்கு திட்டமிட்டிருந்தால் அதை ஒத்தி வைப்பது நல்லது, இல்லையெனில் நீங்கள் நஷ்டமடையக்கூடும். உங்கள் வேலையில் தாமதம் ஏற்படலாம், மேலும் கடந்த காலத்தில் நீங்கள் கடனாக கொடுத்தப் பணத்தைத் திரும்பப் பெறுவதில் தடைகள் ஏற்படலாம்.
நீங்கள் வேலை தேடிக்கொண்டிருந்தால், புதனின் இந்த நட்சத்திர மாற்றம் காரணமாக தாமதம் ஏற்படலாம். உங்கள் வேலையிலும் பிற தொழில் முயற்சிகளிலும் நீங்கள் சவால்களை சந்திக்க நேரிடும். உங்களின் அனைத்து திட்டங்களிலும் ஏதாவது தடைகள் இருக்கும். வேலைப்பளு அதிகரிப்பதால் நீங்கள் மிகவும் சோர்வாகவும், அழுத்தமாகவும் உணர்வீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர மாற்றம் எதிர்மறையான பலன்களை அளிக்கப்போகிறது. இது பெரும்பாலும் திருமண விஷயத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது. இந்த காலகட்டத்தில் உங்கள் திருமண வாழ்க்கையில் நீங்கள் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். விவாதங்கள் பெரும்பாலும் அதிக பிரச்சனைகள் மற்றும் பிரிவுக்கு வழிவகுக்கும்.
உங்களுக்குப் பிடிக்காத விஷயங்களைச் செய்ய நீங்கள் கட்டாயப்படுத்தப்படுவீர்கள். ஆனால் உங்கள் சூழலால் நீங்கள் அவற்றை செய்ய வேண்டியிருக்கும். நிதிரீதியாகவும் இது சாதகமான காலகட்டமாக இருக்காது. நீங்கள் செய்யும் அனைத்து முயற்சிகளிலும் தடைகளை சந்திப்பீர்கள். பல்வேறு குழப்பங்களால் உங்களின் மன ஆரோக்கியம் பாதிக்கப்படும். இந்த நேரத்தில் உறுதியாகவும், அமைதியாகவும் இருங்க வேண்டியது அவசியம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர மாற்றத்தால் சோதனையான காலகட்டத்தை அனுபவிக்கப்போகிறார்கள். இந்த நிலை கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமானதாக கருதப்படவில்லை. எனவே இந்த நேரத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கவும். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது நிதி நெருக்கடி அதிகரிக்கக்கூடும்.
இந்த காலத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகலாம். உங்கள் திருமணம் அல்லது காதல் வாழ்க்கையில் பிரச்சனைகளைத் தவிர்க்க உங்கள் நடத்தையில் கூடுதல் கவனம் அவசியம். உங்களின் வெளிப்படைத்தன்மை உங்கள் உறவுகளில் நம்பிக்கையைக் காப்பாற்ற உதவும். உங்கள் வணிக ஒப்பந்தங்கள் இழப்புகளை ஏற்படுத்தக்கூடும், எனவே எந்த ரிஸ்க்கும் எடுக்க வேண்டாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

