Latest Updates
-
வக்கிர சனியால் டிசம்பர் 11 வரை இந்த 5 ராசிக்கு மிகவும் ஆபத்தான காலகட்டம்.. உஷார்.. -
கோதுமை தோசையும், பூண்டு கார சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 10, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்டசெலவுகள் தேடிவரப் போகுதாம் - பர்ஸ் பத்திரம் -
நவம்பர் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவதால் இந்த 3 ராசிகளை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு இந்த வெஜிடேபிள் வெள்ளை குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க! -
சத்தான உளுந்தோரை ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க - எலும்பு இரும்பு மாதிரி இருக்கும் -
Kandha Sashti Viradham 2026: கந்த சஷ்டி விரதம் இருக்கும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை! -
Hair Care: முடி நரைப்பதை தாமதப்படுத்தணுமா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க -
ஆபீஸில் பிரச்சனை அதிகமா இருக்கா? அப்ப உங்க ஆபீஸ் டேபிளில் இந்த பொருளை வாங்கி வையுங்க..
50 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வைத்திருந்த இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார அரசர் யார் தெரியுமா?
இந்தியா தற்போது உலகின் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இருந்தாலும் கடந்த காலங்களில் இந்தியா உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருந்தது. சில இந்திய அரசர்கள் உலகமே ஆச்சரியப்படும் வகையில் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்தனர். இந்திய வரலாற்றில் பல பணக்கார அரசர்கள் இருந்தாலும் சில அரசர்கள் வரலாற்றையே உருவாக்குபவர்களாக இருந்தனர். அப்படிப்பட்ட ஒரு அரசர்தான் நிஜாம், மிர் உஸ்மான் அலி கான்.

சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தரான நிஜாம், மிர் உஸ்மான் அலி கான், 1937-ஆம் ஆண்டு 'டைம்' இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்றிருந்தார். ஹைதராபாத்தின் ஏழாவது நிஜாமான் இவரை, அந்த இதழ் "உலகின் மிகப்பெரிய செல்வந்தர்" என்று குறிப்பிட்டிருந்தது. தனது 40-களின் தொடக்கத்தில் சுமார் 236 பில்லியன் டாலர் (18 லட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாய்) சொத்து மதிப்பைக் கொண்டிருந்த நிஜாம், மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தார்.
வரலாற்றுத் தகவல்களின் படி, இந்தியாவில் நிஜாம் பட்டத்தை வகித்த கடைசி நபர் இவர்தான். சுதந்திரத்திற்குப் பின் ஹைதராபாத் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1948-ல் அவர் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும், அவர் மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றினார். மிர் உஸ்மான் அலி கான் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கோல்கொண்டா சுரங்கங்கள்
மிர் உஸ்மான் அலி கானின் மிகப்பெரிய செல்வத்திற்கு பிரதான காரணமாக இருந்தது அவரிடமிருந்த கோல்கொண்டா வைரச் சுரங்கங்கள்தான். இவை ஹைதராபாத் நிஜாம்களின் பெரும் செல்வத்திற்கு ஆதாரமாக விளங்கின. 16-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை, உலகின் மிகச்சிறந்த மற்றும் மிகப்பெரிய வைரங்களுக்கான வணிக மையமாக இந்தச் சுரங்கங்கள் செயல்பட்டன. 18-ஆம் நூற்றாண்டில் உலகச் சந்தைக்கு வைரங்களை வழங்கும் ஒரே இடமாக ஹைதராபாத் ராஜ்ஜியம் திகழ்ந்தது. மிர் உஸ்மான் அலி கான், கோஹினூர், ஹோப் டைமண்ட், தர்யா-இ-நூர், நூர்-உல்-ஐன் டைமண்ட், பிரின்சி டைமண்ட், ரீஜென்ட் டைமண்ட் மற்றும் விட்டல்ஸ்பாக் டைமண்ட் போன்ற பல விலைமதிப்பற்ற வைரங்களுக்கு உரிமையாளராக இருந்தார்.
தங்கம் மற்றும் நகைகள்
இந்தியாவின் மற்ற அரச குடும்பங்களை விட ஹைதராபாத் நிஜாம்கள் அதிக நகைகளை வைத்திருந்ததாகக் கூறப்பட்டது. இந்திய அரசாங்கம் நிஜாமிடமிருந்து 173 நகைகளை வாங்கியுள்ளது, அதில் 2,000 காரட் மரகதக் கற்களும் 40,000 முத்துக்களும் அடங்கும். மேலும் அதில் இரத்தினக் கற்கள், பதக்கங்கள், காதணிகள், கழுத்தணிகள், கைப்பட்டைகள், வளையல்கள் மற்றும் பலவற்றின் கலவையும் இருந்தது. உலகின் ஐந்தாவது பெரிய, பட்டை தீட்டப்பட்ட ஒற்றை வைரமான வரலாற்றுச் சிறப்புமிக்க ஜேக்கப் வைரத்தையும் மிர் உஸ்மான் அலி கான் வைத்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.
ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்
ஹைதராபாத்தின் எட்டாவது நிஜாம் ஆன இளவரசர் முகர்ரம் ஜா, கார்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக விளங்கினார். அவர் தனது தாத்தா மிர் உஸ்மான் அலி கானிடமிருந்து ஒரு பழைய இரும்புக் கிடங்கை மரபுரிமையாகப் பெற்றார். 1907 மற்றும் 1947-க்கு இடையில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் உலகளவில் 36,000 சொகுசு கார்களை விற்றது. இவற்றில் 1,000 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை இந்தியா பெற்றது, அதில் மிர் உஸ்மான் அலி கான் மட்டுமே 50 கார்களை வாங்கினார். அவர் 1912-ல் வாங்கிய, பார்க்கர்-கோச் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் கோஸ்ட் காரை வைத்திருந்தார்
நிர்வாகத் திட்டங்கள்
மிர் உஸ்மான் அலிகான் தன்னுடைய பெரும் செல்வத்தைப் பயன்படுத்தி, ஹைதராபாத் மக்களுக்காகப் பல பொது நிறுவனங்களை உருவாக்கினார். அவர் கட்டிய புகழ்பெற்ற உஸ்மானியா பொது மருத்துவமனை, இன்றும் அந்நகரின் முக்கியமான மருத்துவ மையமாகத் திகழ்கிறது. மேலும், அவர் 'ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத்' (State Bank of Hyderabad) மற்றும் உஸ்மானியா பல்கலைக்கழகத்தைத் தொடங்கினார். 1908-ஆம் ஆண்டு மூசி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு, பேகம்பேட் விமான நிலையம், ஹைதராபாத் உயர் நீதிமன்றம் மற்றும் உஸ்மான் சாகர், ஹிமாயத் சாகர் ஆகிய இரண்டு நீர்த்தேக்கங்களைக் கட்டுவதற்கான பணிகளையும் அவர் முன்னெடுத்தார்.



Click it and Unblock the Notifications

