Latest Updates
-
கோதுமை தோசையும், பூண்டு கார சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 10, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்டசெலவுகள் தேடிவரப் போகுதாம் - பர்ஸ் பத்திரம் -
நவம்பர் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவதால் இந்த 3 ராசிகளை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு இந்த வெஜிடேபிள் வெள்ளை குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க! -
சத்தான உளுந்தோரை ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க - எலும்பு இரும்பு மாதிரி இருக்கும் -
Kandha Sashti Viradham 2026: கந்த சஷ்டி விரதம் இருக்கும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை! -
Hair Care: முடி நரைப்பதை தாமதப்படுத்தணுமா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க -
ஆபீஸில் பிரச்சனை அதிகமா இருக்கா? அப்ப உங்க ஆபீஸ் டேபிளில் இந்த பொருளை வாங்கி வையுங்க.. -
சூடான உணவை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும்? அப்படி வைப்பது பாதுகாப்பானதா?
வக்கிர சனியால் டிசம்பர் 11 வரை இந்த 5 ராசிக்கு மிகவும் ஆபத்தான காலகட்டம்.. உஷார்..
Saturn Retrograde 2026: ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியான சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். கிரகங்களிலேயே ஒரு ராசியில் நீண்ட காலமாக பயணிக்கக்கூடியவர் சனி பகவான் ஆவார். இதனால் சனி பகவானின் தாக்கம் ஒருவரது வாழ்வில் ஆழமாக இருக்கும். அதுவும் சனி பகவானின் நிலையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும் அது அனைத்து ராசிகளிலுமே ஏதாவது ஒரு வகையில் காணப்படும்.

தற்போது சனி பகவான் வக்ர நிலையில் பின்னோக்கி மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த நவம்பர் மாதம் முழுவதும் சனி பகவான் வக்ர நிலையில் இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு இந்த மாதமானது சற்று கடினமாக இருக்கக்கூடும். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் வேலை, தொழில், பணம், உறவுகள் விஷயங்களில் வழக்கத்தை விட மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இக்காலத்தில் எந்த ஒரு அவசர முடிவுகள் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். சனி பகவானின் இந்த வக்ர நிலை டிசம்பர் 11 ஆம் தேதி வரை நீடித்திருப்பதால், 5 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இப்போது வக்கிர சனியால் டிசம்பர் 11 வரை எந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் சனி வக்கிரத்தால் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகள் அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் சிறு விஷயங்களுக்காக வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சனி வக்கிரத்தால் பணியிடத்தில் பல சவால்களை சந்திக்க நேரிடும். பொறுப்புகள் அதிகரிப்பதால், வேலைப்பளு அதிகரிக்கும். பொறுமை மிகவும் அவசியம். வேலையை மாற்ற நினைத்தால் அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். தொழிலதிபர்கள் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் கவனமாக பரிசீலிக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் சனி வக்கிரத்தால் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் மற்றவர்களின் பேச்சை கேட்டு எந்த ஒரு முடிவுகளையும் எடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும். பட்ஜெட் போட்டு செலவழிக்க முயற்சிக்க வேண்டும். திடீரென்று செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் பண பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. சட்ட விஷயங்கள் சிரமங்களை தரும். இருந்தாலும் இந்த சூழ்நிலைகளை புத்திசாலித்தனமாக செயல்பட்டால் எளிதில் கையாளலாம்.
மகரம்
சனி வக்கிரமாக இருப்பதால் மகர ராசிக்காரர்கள் வேலையையும், பொறுப்புகளையும் சமநிலையில் பராமரிக்க வேண்டியிருக்கும். வேலையில் கடினமாக உழைக்க வேண்டும். இந்த கடின உழைப்புக்கான பலனைப் பெற சிறிது காலம் காத்திருக்க வேண்டும். எந்த வேலையை கையில் எடுத்தாலும், அதை முடிக்காமல் விட்டுவிடாதீர்கள். பண பரிவர்த்தனைகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முயற்சிக்க வேண்டும். சிறு விஷயங்களுக்காக மன அழுத்தத்திற்கு ஆளாவதை தவிர்க்க வேண்டும்.
கும்பம்
வக்கிர சனியால் கும்ப ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். முதலீடுகள் தொடர்பாக எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



