Latest Updates
-
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்..
Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
Mango Benefits In Tamil: கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் மாம்பழ சீசனும் தொடங்கிவிட்டது. இந்நிலையில் மார்கெட் சென்றால் பல வெரைட்டியான மாம்பழங்கள் நாள்தோறும் வந்து குவிவதைக் காணலாம். இந்த மாம்பழங்கள் எப்படி ஆளை மயக்கும் நல்ல மணத்தைக் கொண்டுள்ளதோ, அதேப் போல் நல்ல சுவையையும் கொண்டிருக்கும்.
பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழத்தை பிடிக்காதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். ஆனால் மாம்பழம் சாப்பிட்டால் உடல் சூடு பிடித்துவிடும் என்று பலரும் தவறாக நினைத்து சாப்பிட மறுக்கிறார்கள். ஆனால் உண்மையில் மாம்பழத்தை அளவாக சாப்பிட்டால் எந்த ஒரு பிரச்சனையையும் சந்திக்க வாய்ப்பில்லை.

சொல்லப்போனால் கோடையில் மாம்பழத்தை சாப்பிட்டால் எண்ணற்ற நன்மைகள் தான் உடலுக்கு கிடைக்கும். முக்கியமாக ஆண்கள் மாம்பழத்தை சாப்பிடுவதால் சில பாலியல் நன்மைகள் கிடைக்கும். இப்போது ஆண்கள் மாம்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
1. கொலஸ்ட்ரால் குறையும்
மாம்பழத்தை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும். இதற்கு மாம்பழத்தில் உள்ள பெக்டின், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து போன்றவை தான் முக்கிய காரணம். இவை தான் உடலில் அதிகமாக தேங்கியிருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றன. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், மாம்பழத்தை தவறாமல் சாப்பிடுங்கள்.
2. செரிமானம் சீராகும்
மாம்பழம் அஜீரண கோளாறு மற்றும் அசிடிட்டி பிரச்சனையை சரிசெய்ய பெரிதும் உதவி புரிகிறது. ஏனெனில் மாம்பழத்தில் செரிமான நொதிகள் உள்ளன. இவை செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள பயோஆக்டிவ் கலவைகள் பசியை அதிகரிக்கின்றன மற்றும் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.
3. ஸ்டாமினா மற்றும் ஆற்றலை அதிகரிக்கும்
மாம்பழத்தில் புருக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் நிறைந்துள்ளதால், இப்பழத்தை உட்கொள்ளும் போது உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கின்றன. முக்கியமாக திருமணமான ஆண்கள் தனது துணையை படுக்கையில் நீண்ட நேரம் திருப்திப்படுத்த விரும்பினால், மாம்பழத்தை சாப்பிடுவது நல்லது.
4. இரத்த ஓட்டம் மேம்படும்
ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்பட மோசமான இரத்த ஓட்டம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. மாம்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளன. இந்த பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை ஆரோக்கியமான அளவில் பராமரிக்கவும், இரத்த நாளங்களை விரிவுபடுத்தி இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே படுக்கையில் சிறப்பாக செயல்பட முடியாத ஆண்கள் மாம்பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் நல்ல பலனைக் காணலாம்.
5. டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்
மாம்பழத்தில் ஜிங்க் சத்து உள்ளது. இது ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாத கனிமமாகும். இது தான் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி மற்றும் விந்தணுக்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிகிறது. மாம்பழத்தில் மிக அதிக அளவில் ஜிங்க் சத்து இல்லாவிட்டாலும், தினமும் மாம்பழத்தை உட்கொண்டு வந்தால், டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி அதிகரித்து, பாலியல் வாழ்க்கை சிறக்கும்.
6. மன அழுத்தம் குறையும்
நாள்பட்ட மன அழுத்தமானது பாலுணர்ச்சி மற்றம் பாலியல் செயல்பாட்டை மோசமாக பாதிக்கும். இப்படிப்பட்ட மன அழுத்தத்தால் ஆண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் நிறைய ஆண்களுக்கு இது தெரிவதில்லை. இருப்பினும், மாம்பழத்தில் உள்ள மக்னீசியம் என்னும் கனிமச்சத்து, சாந்தப்படுத்தும் பண்புகளைக் கொண்டது. எனவே ஆண்கள் மாம்பழத்தை உட்கொண்டு வரும் போது, அது மன அழுத்தம், மனக்கவலை போன்றவற்றை குறைக்க உதவுகிறது. அதோடு துணையுடன் ரிலாக்ஸாக உறவில் ஈடுபட உதவுகிறது.
Image Courtesy: Pixabay
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications