இளநீரை வெட்டிய பிறகு எவ்வளவு நேரம் கெட்டுப்போகாமல் இருக்கும்? இளநீரை ஃப்ரிட்ஜில் வைத்தால் என்ன நடக்கும்?

இயற்கை நம் ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு பெரும்பாலான தீர்வுகளை இயற்கை உணவுகளிலேயே வைத்துள்ளது. அப்படி கல்லீரல், சிறுநீரகம், செரிமானம் தொடர்பான பல பிரச்சினைகளையும், அசௌகரியங்ளையும் குணப்படுத்தும் ஒரு பொருள்தான் இளநீர். பொதுவாக இளநீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதற்குக் காரணம் அப்போதுதான் அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்களை உடல் நன்றாக உறிஞ்சும்.

How Long Does Coconut Water Stay Fresh After Opening

இளநீர் என்பது எலக்ட்ரோலைட்டுகள், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் இயற்கையான மூலமாகும். இது உடலுக்கு நீரேற்றம் அளிக்கும் மிகவும் ஆரோக்கியமான இயற்கை பானங்களில் ஒன்றாகும். இளநீரில் உள்ள பிரச்சினை என்னவென்றால் அதை திறந்தவுடன் குடித்து விட வேண்டும். இளநீரைத் திறந்த பிறகு, அதன் புத்துணர்ச்சி நீண்ட காலம் நீடிக்காது. இளநீரை எவ்வளவு காலம் பாதுகாப்பாக அருந்தலாம் மற்றும் அதைச் சேமித்து வைப்பதற்கான சிறந்த வழிகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இளநீரை சீவியவுடன் குடித்து விட வேண்டும்

இளநீரிலிருந்து முழுமையான நன்மைகளை பெற இளநியை சீவியவுடன் இளநீரை உடனடியாக அருந்துவதே சிறந்தது. அறை வெப்பநிலையில், குறிப்பாக வெப்பமான காலநிலையில், 2 முதல் 4 மணி நேரத்திற்குள்ளேயே அதன் புத்துணர்ச்சி குறையத் தொடங்கிவிடும். எவ்வளவு சீக்கிரம் அருந்துகிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக அதன் சுவையையும், சத்துக்களையும் பெற முடியும்.

இளநீரை குளிர்சாதன பெட்டியில் விக்கலாமா?

இந்த கேள்விக்கு பதில் தாராளமாக வைக்கலாம், ஆனால் நீண்ட நேரம் வைத்திருக்கக் கூடாது. இளநீரைச் சுத்தமான, காற்று புகாத கொள்கலனுக்கு மாற்றி, இளநீரை சீவியவுடன் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுங்கள். இது குளிர்சாதனப் பெட்டியில் 24 முதல் 48 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும். இருப்பினும், சிறந்த சுவை மற்றும் சத்துக்களைப் பெற, 24 மணி நேரத்திற்குள்ளேயே அருந்துவது நல்லது.

இளநீரை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?

இளநீரை புத்துணர்ச்சியாக வைத்திருக்க சுத்தமான, காற்றுப்புகாத கொள்கலனைப் பயன்படுத்தவும். இளநீரை எடுத்தவுடன் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். வெப்பம் மற்றும் நேரடி சூரிய ஒளி படாதவாறு பார்த்துக்கொள்ளவும். கொள்கலனை அடிக்கடி திறப்பதைத் தவிர்க்கவும். குடிப்பதற்கு முன், அதன் மணம் மற்றும் சுவையைச் சரிபார்த்து விட்டு அதன்பின் குடிக்க வேண்டும்.

இளநீரை நீண்ட காலம் சேமித்து வைக்க என்ன செய்ய வேண்டும்?

இளநீரை உணவுப் பயன்பாட்டிற்கு ஏற்ற கொள்கலனில் அல்லது ஐஸ் கட்டிகள் தயாரிக்கும் தட்டில் ஊற்றி உறைய வைக்கவும். இவ்வாறு உறைய வைக்கப்பட்ட இளநீர், 1 முதல் 2 மாதங்கள் வரை கூட கெடாமல் இருக்கும். குடிப்பதற்கு முன், அதை அறை வெப்பநிலையில் வைத்து உருக்கிக்கொள்ளவும். உறைய வைக்கும்போது அதன் சுவையிலும், அதில் உள்ள சில சத்துக்களிலும் சிறிய மாற்றம் ஏற்படக்கூடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

எப்போது இளநீரை அருந்தக்கூடாது?

இளநீரில் புளித்த சுவை, விரும்பத்தகாத அல்லது வழக்கத்திற்கு மாறான மணம் அல்லது குலுக்காமலேயே நுரை அல்லது குமிழ்கள் தோன்றுதல், நிறம் மாறுதல் அல்லது தெளிவற்ற மங்கலான தோற்றம் இருந்தால் அந்த இளநீரை குடிக்கக்கூடாது. இத்தகைய அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், அந்தத் தேங்காய்த் தண்ணீரை அருந்தாமல் தவிர்ப்பதே நல்லது, ஏனெனில், கெட்டுப்போன தேங்காய்த் தண்ணீர் உணவு மூலம் பரவும் நோய்களை ஏற்படுத்தக்கூடும்.

Story first published: Monday, November 23, 2026, 18:13 [IST]
Desktop Bottom Promotion