Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் சின்ன வெங்காய காரக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
டிசம்பர் மாத புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் வளர்ச்சியுடன், இரட்டிப்பு லாபமும் கிட்டும்! -
இந்தியாவில் கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் 2 நகரங்கள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
மொறுமொறுப்பான தக்காளி தோசை - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பொறுமையை சோதிக்கும் மோசமான நாளாக இருக்குமாம் -
18 ஆண்டுகளுக்கு பின் மகரம் செல்லும் ராகு: டிசம்பர் முதல் இந்த 3 ராசிக்கு வரப்பிரசாதமா இருக்கப்போகுது! -
1 டம்ளர் பச்சரிசி இருந்தா.. கார்த்திகை தீபத்துக்கு இந்த செட்டிநாடு கந்தரப்பம் செய்யுங்க.. -
ஆண்கள் என்னென்ன Skin Care Products யூஸ் பண்ணலாம்? விளக்கும் சரும நிபுணர்! -
பரணி தீபம் 2026 எப்போது? எத்தனை தீபம் ஏற்றணும்? வீட்டின் எந்தெந்த இடங்களில் தீபம் வைக்க வேண்டும்? -
டிசம்பரில் வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: 2027 ஜூன் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்!
இந்த இரத்த வகை உள்ளவர்களுக்கு கல்லீரல் நோய் ஏற்படும் ஆபத்து அதிகமாம் - புதிய ஆய்வில் தகவல்!
Blood Type And Liver Disease: நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இரத்த வகையைக் கொண்டிருப்போம். இரத்த வகை என்பது ஒருவரின் இரத்தத்தில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் மேற்பரப்பில் காணப்படும் குறிப்பிட்ட ஆன்டிஜென்களைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாக ரத்த வகைகள் A, B, AB மற்றும் O என நான்கு முக்கிய பிரிவுகளாகவும், Rh காரணி அடிப்படையில் பாசிட்டிவ் (+), நெகட்டிவ் (-) எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.

ஒருவரின் இரத்த வகைக்கும் சில நோய்கள் ஏற்படும் அபாயத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சில வகை இரத்த வகையைக் கொண்டவர்களுக்கு குறிப்பிட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது அதிகமாக இருக்கலாம். சமீபத்தில் கூட இரத்த வகைக்கும், கல்லீரல் நோயின் அபாயம் குறித்தும் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
அதுவும் Frontiers இதழில் வெளியான சமீபத்திய ஒரு ஆய்வில், இரத்த வகை A உள்ளவர்கள் தன்னுடல் தாக்கு கல்லீரல் நோய்களை (AILD) உருவாக்க அதிகமாக வாய்ப்பு உள்ளது என்று கண்டறிந்துள்ளது. அதாவது இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் தவறுதலாக கல்லீரலை தாக்குவதால் ஏற்படும் ஒரு நாள்பட்ட கல்லீரல் சேதமாகும். மறுபுறம் இரத்த வகை பி உள்ளவர்களுக்கு கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கக்கூடிய முதன்மை பித்த நாள அழற்சி (PBC) ஏற்படுவதற்கான ஆபத்து குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த புதிய ஆய்வின் நோக்கமே ABO இரத்தக் வகைக்கும் AILD-க்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளதா என்பதை ஆராய்வதே ஆகும். இந்த ஆய்வில் பங்கு கொண்ட 114 நோயாளிகளில், 44 பேருக்கு தன்னுடல் தாக்கு கல்லீரல் அழற்சி (AIH) நோயும், 70 பேருக்கு முதன்மை பித்த நாள அழற்சி (PBC) நோயும் கண்டறியப்பட்டது. ABO இரத்தக் குழுக்களுக்கும் AILD நோயாளிகளுக்கும் இடையே ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடு காணப்பட்டது.
கட்டுப்பாட்டுக் குழுவுடன் ஒப்பிடும் போது, AILD குழுவில் 'A' இரத்த வகை அதிகமாகவும், 'B' இரத்த வகை குறைவாகவும் காணப்பட்டது. கூடுதலாக PBC நோயாளிகளிடம் 'A' இரத்த வகை அதிக சதவீதத்திலும், 'B' இரத்த வகை குறைந்த சதவீதத்திலும் காணப்பட்டது. ஆனால் 'O' மற்றும் 'AB' இரத்த வகைகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடு எதுவும் காணப்படவில்லை.
தன்னுடல் தாக்கு கல்லீரல் நோய் என்றால் என்ன?
தன்னுடல் தாக்கு கல்லீரல் நோய் (AILD) என்பது மது அருந்துதல் அல்லது வாழ்க்கை முறை காரணிகளால் ஏற்படும் கல்லீரல் பிரச்சனைகளைப் போல் அல்லாமல், நோயெதிர்ப்பு மண்டலம் கட்டுப்பாடின்றி செயல்படும் போது ஏற்படுகிறது. இந்த நிலையில் இது கல்லீரல் செல்களைத் தாக்குகிறது.
முதன்மை பித்த நாள அழற்சியில்(PBC), இது பித்த நாளங்களைத் தாக்கி, பித்தநீர் தேங்கக் காரணமாகிறது. அதோடு கல்லீரலில் வடுவை ஏற்படுத்தி, இறுதியில் கல்லீரல் இழைநார் வளர்ச்சி அல்லது செயலிழப்புக்கு வழிவகுக்கிறது.
தன்னுடல் தாக்கு கல்லீரல் நோயின் அறிகுறிகள் என்ன?
தன்னுடல் தாக்கு கல்லீரல் நோயின் அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடும் மற்றும் இவை திடீரென்று தோன்றக்கூடும். சிலருக்கு நோயின் ஆரம்பத்தில் பெரிய அளவில் அறிகுறிகள் எதுவும் தெரியாது அல்லது குறைவான அறிகுறிகளே தெரியும். சிலருக்கு பின்வரும் அறிகுறிகள் தெரியலாம்.
* உடல் சோர்வு
* வயிற்று அசௌகரியம்
* சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறுவது
* கல்லீரல் வீக்கம்
* தோலில் சிலந்தி போன்ற வடிவிலான, ஒழுங்கற்ற இரத்த நாளங்கள் காணப்படுவது
* சரும அரிப்பு
* மூட்டு வலி
* மாதவிடாய் சுழற்சி நின்றுவிடுவது
எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை கவனித்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள். இதனால் கல்லீரல் சேதம் தீவிரமடைவதைத் தடுக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
