ஆண்கள் என்னென்ன Skin Care Products யூஸ் பண்ணலாம்? விளக்கும் சரும நிபுணர்!

Men's Skin Care In Tamil: பெண்கள் மட்டும்தான் சருமப் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதில்லை. ஆண்களுக்கும் சருமப் பராமரிப்பு மிகவும் அவசியம். ஆனால், பல ஆண்கள் முகத்தைக் கழுவுவதற்கு குளியல் சோப்பைப் பயன்படுத்துவது, மாய்ஸ்சரைசர் தவிர்ப்பது, சன்ஸ்கிரீன் பயன்படுத்தாமல் இருப்பது எனப் பல தவறுகளைச் செய்கின்றனர். உண்மையில் ஆண்களின் சருமம் பெண்களின் சருமத்திலிருந்து சில வகைகளில் வேறுபடுகிறது.

Men s Skin Care What Kind Of Skin Care Products Can Men Use Dermatologist Explains

அதிக எண்ணெய் சுரப்பு, பெரிய துளைகள், கரடுமுரடான சரும அமைப்பு, சீரற்ற சரும நிறம் போன்ற பிரச்சனைகள் ஆண்களிடம் காணப்படலாம். அப்படியானால் ஆண்கள் தங்களுடைய சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? இதுகுறித்து சரும நிபுணர் டாக்டர் ராதா சுப்பிரமணியன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சில முக்கியமான ஆலோசனைகளைப் பகிர்ந்துள்ளார். அதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1. சோப்புக்குப் பதிலாக ஃபேஸ் வாஷ் பயன்படுத்தவும்

ஆண்கள் முகத்தைக் கழுவுவதற்கு குளியல் சோப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சருமத்தின் தன்மைக்கு ஏற்ற ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது நல்லது. அதிக எண்ணெய் பசை மற்றும் பெரிய துளைகள் உள்ளவர்கள் சாலிசிலிக் அமிலம் கலந்த ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை முகத்தைக் கழுவுவது அவசியம்.

2. சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்சரைசர் அவசியம்!

ஆண்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தாலும் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவதைத் தவிர்க்கக்கூடாது. எண்ணெய் சருமம் உள்ளவர்கள் வாட்டர் பேஸ்டு அல்லது ஜெல் பேஸ்டு மாய்ஸ்சரைசர்களைத் தேர்வு செய்யலாம். வறண்ட சருமம் உள்ளவர்கள் சற்று அடர்த்தியான மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்தலாம். சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது நிறமாற்றப் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

3. டோனர் பயன்படுத்துவது கட்டாயமில்லை!

ஸ்கின் கேர் ரொட்டினில் டோனர் பயன்படுத்துவது கட்டாயமில்லை. பெரிய சருமத் துளைகள் உள்ளவர்கள் சாலிசிலிக் அமிலம் அல்லது கிளைகாலிக் அமிலம் கொண்ட டோனர்களைத் தேர்வு செய்யலாம். இது சருமத்துளைகளின் அளவை சற்று குறைக்கும். இல்லையெனில் இதைத் தவிர்க்கலாம்.

4. சன்ஸ்கிரீன் பயன்படுத்த மறக்காதீர்!

ஆண்கள் தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது மிகவும் அவசியம். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் ஜெல் அல்லது மேட் ஃபினிஷ் சன்ஸ்கிரீனையும், வறண்ட சருமம் உள்ளவர்கள் மாய்ஸ்சுரைசிங் தன்மை கொண்ட சன்ஸ்கிரீனையும் தேர்வு செய்யலாம். வெளியில் செல்லும் போது மட்டுமல்லாமல் வீட்டில் இருந்தாலும் சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். வெளியே செல்லும் 15 நிமிடங்களுக்கு முன்பு பயன்படுத்துவதும், தேவைக்கேற்ப மீண்டும் பயன்படுத்துவதும் அவசியம்.

5. இரவு நேர சருமப் பராமரிப்பு

இரவு தூங்குவதற்கு முன்பு முகத்தைக் கழுவி மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் முகத்தைக் கழுவிய பிறகு சருமப் பிரச்சனைக்கு ஏற்ற நைட் கிரீம் அல்லது மருத்துவர் பரிந்துரைத்த சிகிச்சைக்கான கிரீம்களைப் பயன்படுத்தலாம்.

உதாரணமாக:

* முகப்பரு பிரச்சனை: முகப்பருவைக் கட்டுப்படுத்த டெர்மட்டாலஜிஸ்ட் பரிந்துரைத்த சாலிசிலிக் ஆசிட் அல்லது ரெட்டினாய்டு தயாரிப்புகளைப் பயன்படுத்தலாம்.
* பிக்மெண்டேஷன்: கரும்புள்ளிகள் மற்றும் சரும நிறமாற்றத்தைக் குறைக்க சரும மருத்துவர் பரிந்துரைக்கும் பிரத்யேக கிரீம்களைப் பயன்படுத்தலாம்.
* வயதான தோற்றம்: சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ரெட்டினால் போன்ற பொருட்கள் அடங்கிய தயாரிப்புகளைப் பயன்படுத்தலாம்.

குறிப்பாக, ரெட்டினால் போன்ற சரும சிகிச்சைப் பொருட்களை இரவு நேரத்தில் பயன்படுத்துவது வழக்கம். இருப்பினும், இவை அனைவருக்கும் பொருந்தாது. சருமத்தின் தன்மை மற்றும் பிரச்சனைக்கு ஏற்ப சரியான தயாரிப்பைத் தேர்ந்தெடுக்க டெர்மட்டாலஜிஸ்ட்டின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

மொத்தத்தில் ஆண்கள் சருமப் பராமரிப்பிற்காக அதிக நேரம் செலவிட வேண்டிய அவசியமில்லை. ஆனால், முகம், தாடி மற்றும் தலைமுடிக்கான பராமரிப்பைத் தனித்தனியாகக் கவனிப்பதும், உடலுக்குப் பயன்படுத்தும் சோப்பை முகத்திற்குப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதும் அவசியம். சரியான ஸ்கின் கேர் பழக்கங்களை இன்றே தொடங்கினால் சருமத்தை ஆரோக்கியமாகப் பராமரிக்க முடியும்.

Story first published: Sunday, November 22, 2026, 19:53 [IST]
Desktop Bottom Promotion