நவம்பர் இறுதியில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும், பணம் குவியும்!

Jupiter Moon Conjunction Forms Gajkesari Rajyog 2026: ஜோதிடத்தில் மனதின் காரணியாக கருதப்படுபவர் சந்திரன். இந்த சந்திரன் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் வரை இருப்பார். கிரகங்களிலேயே குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடிய சந்திரன் கடக ராசியின் அதிபதியாவார்.

இந்நிலையில் இந்த சந்திரன் நவம்பர் 30 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். அப்போது அந்த சிம்ம ராசியில் தேவர்களின் குருவான குரு பகவானும் பயணித்து வருவதால், இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுற்றது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

Jupiter Moon Conjunction Forms Gajkesari Rajyog 2026 These Zodiac Signs Luck Will Shine

ஜோதிடத்தில் கஜகேசரி ராஜயோகம் மிகவும் செல்வாக்குமிக்க மற்றும் மங்களகரமான யோகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கஜகேசரி ராஜயோகம் உருவாவதால், சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் செல்வம், வசதி, கௌரவம் மற்றும் நிதி நிலை உட்பட குறிப்பிடத்தக்க மாற்றங்களை காண்பார்கள். இப்போது குரு சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

சிம்மம்

சிம்ம ராசியின் முதல் வீட்டில் குரு சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும், செயல்திறனும் அதிகரிக்கும். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் அல்லது வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. முக்கியமாக நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடகம்

கடக ராசியின் 2 ஆவது வீட்டில் குரு சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை, தைரியம், வீரம் போன்றவை அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். நிதி ரீதியாக இக்காலம் சாதகமாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம். நீண்ட காலமாக முடிக்கப்படாத வேலைகள் நிறைவடையும் வாய்ப்புள்ளது.

தனுசு

தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் குரு சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தடைபட்ட வேலைகள் அல்லது திட்டங்கள் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய கதவுகள் திறக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகட்ள வழங்கப்படலாம். நிதி நிலைமை வலுவடையும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் எந்த வேலையை செய்தாலும், அதில் வெற்றியும், நிதி நன்மைகளும் கிடைக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Sunday, November 22, 2026, 10:47 [IST]
Desktop Bottom Promotion