Latest Updates
-
நவம்பர் 25-ல் கன்னி ராசிக்குள் நுழையும் செவ்வாய் இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளையும் கொடுக்கப்போகுதாம் -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி ராஜஸ்தான் ஸ்டைலில் வறுவல் செஞ்சு பாருங்க - பைவ் ஸ்டார் ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
1800 கோடிக்கு விற்கப்பட்ட ஹிட்லர் காலத்து அதிசய ஓவியம் - இந்த ஓவியத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
காலையில் இந்த ஒரு குழம்பை செஞ்சா போதும்... 3 வேளையும் வெச்சு சாப்பிடலாம்... -
நவம்பர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
புதாதித்ய ராஜயோகம்: டிசம்பர் மாத தொடக்கமே இந்த 4 ராசிக்காரர்களுக்கு அமோகமா இருக்கும்! -
டிசம்பரில் விருச்சிக ராசியில் நுழையும் புதன் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கார்த்திகை தீபம் ஸ்பெஷல் நெய் அப்பம் - எப்படி 15 நிமிடத்தில் செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சிம்பிளான காலிஃபிளவர் சால்னா ரெசிபி - செஞ்சு பாருங்க - இட்லி, சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் -
வீட்டில் பணம் பெருக வேண்டுமா? அப்ப ஃபெங் சூயி சொல்லும் இந்த 5 அதிர்ஷ்ட பொருட்களை வாங்கி வையுங்க..
தேங்காயில் மூன்று கண்கள் இருப்பதற்கு பின்னால் உள்ள அறிவியல் ரகசியம் என்ன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
தேங்காய் அனைத்து சமையலறைகளிலும் ஒரு அத்தியாவசியமானப் பொருளாகும். எந்தவொரு பூஜையும் தேங்காய் இல்லாமல் முழுமைபெறாது. ஆன்மீகம், சமையல் மற்றும் ஆரோக்கியம் என அனைத்திலும் தேங்காய் முக்கியப்பங்கு வகிக்கிறது. தேங்காயை உற்று நோக்கினால், அதன் மேற்புறத்தில் கண்கள் போன்ற மூன்று அடையாளங்களைக் காணலாம். அனைத்து தேங்காய்க்கு ஏன் மூன்று கண்கள் இருக்கின்றன? அவற்றின் அர்த்தம் என்ன? இத்தகைய சந்தேகம் பலருக்கு எழுவதுண்டு.

தேங்காயின் இந்த மூன்று கண்களுக்கு ஆன்மீகத்தில் பல அர்த்தங்கள் கூறப்பட்டாலும், அறிவியல்ரீதியாகவும் அதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. உண்மையில், அவை கண்கள் அல்ல. தாவரவியலின்படி, விதை உருவாகும்போது இயற்கையாக உருவாகும் மூன்று துளைகளின் அடையாளங்களே இவை. தேங்காய்ப் பூ காயாக மாறத் தொடங்கும் நிலையில், மூன்று சூலகங்கள் (ovules) காணப்படும். காய் தொடர்ந்து வளரும்போது, அவற்றில் ஒன்று மட்டுமே முழுமையாக வளர்ச்சி அடைகிறது. மற்ற இரண்டின் வளர்ச்சியும் நின்றுவிடுகிறது. இந்த அடையாளங்களே தேங்காயின் மேற்புறத்தில் மூன்று சிறிய குழிகளாக அல்லது கண்கள் போல காட்சியளிக்கின்றன.
தேங்காயில் மூன்று துளைகள் இருப்பதற்கான காரணம் என்ன?
இந்த மூன்று துளைகளில் ஒன்று மட்டும் மிகவும் மென்மையாக இருக்கும். மற்ற இரண்டு துளைகளுடன் ஒப்பிடும்போது, இந்தப் பகுதியில் ஓடு மெல்லியதாக இருக்கும். இதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. இந்த மென்மையான பகுதிக்கு அடியில் தான் தேங்காயின் கரு உள்ளது. இதுவே பிற்காலத்தில் புதிய தென்னங்கன்றாக வளர்கிறது. தேங்காய் முளைக்கும்போது, இந்த மென்மையான பகுதியின் வழியாகவே ஒரு சிறிய முளை வெளிவருகிறது. இதனால்தான் இதை 'முளை துளை' என்று அழைக்கப்படுகிறது. மற்ற இரண்டு துளைகளுக்கு அருகில் ஓடு கடினமாக இருக்கும். எனவேதான், தேங்காயைத் துளையிட்டு இளநீர் அருந்துவதற்கு மக்கள் இந்த மென்மையான பகுதியில் துளையிடுகிறார்கள். பொதுவாக இந்த மூன்று துளைகளின் வழியாக மழைநீர் தேங்காய்க்குள் நுழைகிறது என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அது முற்றிலும் தவறானதாகும்.
தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி நுழைகிறது?
தேங்காய்க்குள் தண்ணீர் நுழைவதற்கான மொத்த பொறுப்பும் தென்னை மரத்தின் வேர்களுக்குத்தான் உள்ளது. தென்னை மரம் தனது வேர்கள் வழியாக மண்ணிலிருந்து நீரை உறிஞ்சுகிறது. அந்த நீர் மரத்திலுள்ள பிரத்யேகக் குழாய்கள் வழியாக மேலே பயணித்து, காயைச் சென்றடைகிறது. காய் கொஞ்சம் கொஞ்சமாக வளரும்போது, இந்த நீர் சத்துக்கள் கலந்த திரவமாக மாறுகிறது. விஞ்ஞானிகள் இந்தத் திரவத்தை 'எண்டோஸ்பெர்ம்' என்று அழைக்கிறார்கள். இதுவே நாம் பருகும் சுவையான இளநீர் ஆகும். காய் பெரிதாக வளர வளர, இந்தத் திரவத்தின் ஒரு பகுதி வெண்மையான தேங்காய்ப் பருப்பாக மாறுகிறது; மீதமுள்ள பகுதி நீராகவே நீடிக்கிறது. தேங்காயின் மீது காணப்படும் மூன்று அடையாளங்களுக்குப் பின்னாலும், அந்தத் தண்ணீர் உருவாகும் விதத்திலும் ஒரு அற்புதமான இயற்கை ரகசியம் மறைந்துள்ளது.
ஆன்மீகக் காரணங்கள்
சமஸ்கிருத மொழியில் தேங்காயை 'ஸ்ரீபலம்' என்று அழைக்கப்படுகிறது. 'ஸ்ரீபலம்' என்றால் 'இறைவனின் கனி' என்று பொருள். எனவே தேங்காய் இறைவனின் கனி என்று அழைக்கபடுகிறது. தேங்காயை உடைப்பது என்பது, ஒருவரின் அகங்காரத்தை அழித்து, இறைவனின் முன்னால் பணிவுடன் தலைவணங்குவதைக் குறிக்கிறது. தேங்காயில் உள்ள இந்த மூன்று அடையாளங்களும் சிவபெருமானின் மூன்று கண்களாகக் கருதப்படுகின்றன. சிலர் இவற்றை பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவபெருமான் ஆகிய மும்மூர்த்திகளைக் குறிப்பதாகவும் கருதுகின்றனர். தேங்காயின் கருநிற ஓடு முருகப்பெருமானையும், உள்ளே இருக்கும் வெண்மையான பகுதி பார்வதி தேவியையும், அதனுள் இருக்கும் நீர் கங்கை நதியையும் குறிப்பதாகக் கூறப்படுகிறது.
தேங்காயின் வெளிப்புறத்தில் உள்ள சொரசொரப்பான நார்கள் தலைமுடியைப் போலவும், அதன் உருண்டையான வடிவம் மற்றும் மூன்று துளைகள் ஒரு முகத்தைப் போலவும் தோற்றமளிக்கின்றன. இதனால்தான், சிவபெருமானின் மூன்று கண்களைக் குறிக்கும் அடையாளமாகத் தேங்காய் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications

