Latest Updates
-
நவம்பர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
புதாதித்ய ராஜயோகம்: டிசம்பர் மாத தொடக்கமே இந்த 4 ராசிக்காரர்களுக்கு அமோகமா இருக்கும்! -
டிசம்பரில் விருச்சிக ராசியில் நுழையும் புதன் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கார்த்திகை தீபம் ஸ்பெஷல் நெய் அப்பம் - எப்படி 15 நிமிடத்தில் செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சிம்பிளான காலிஃபிளவர் சால்னா ரெசிபி - செஞ்சு பாருங்க - இட்லி, சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் -
வீட்டில் பணம் பெருக வேண்டுமா? அப்ப ஃபெங் சூயி சொல்லும் இந்த 5 அதிர்ஷ்ட பொருட்களை வாங்கி வையுங்க.. -
குளிர்காலத்தில் சருமத்தை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்கும் 5 பழங்கள் - மறக்காம சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் காரணமே இல்லாமல் மிகவும் கோபப்படுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃப்ரிஸி ஹேர் பிரச்சனையா? அப்ப முடியை மென்மையாக வைத்திருக்க டாக்டர் கூறும் டிப்ஸ் இதோ! -
பழங்கள் ப்ரெஷாக இருந்தாலும் அதற்குள் புழுக்கள் இருக்க காரணம் என்ன? அவை எப்படி பழத்திற்குள் செல்கிறது தெரியுமா?
காலையில் இந்த ஒரு குழம்பை செஞ்சா போதும்... 3 வேளையும் வெச்சு சாப்பிடலாம்...
Chow Chow Kuzhambu Recipe In Tamil: தினமும் மூன்று வேளையும் என்ன சமைப்பது என்று யோசித்து முடிவெடுப்பதே ஒரு பெரிய வேலையாக இருக்கும். உங்களுக்கு ஒரு நாளாவது இதிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டுமா? உங்கள் வீட்டில் சௌ சௌ காய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு காலையிலேயே ஒரு குருமா குழம்பை செய்துவிடுங்கள்.
இந்த குழம்பை காலையில் செய்தால், இட்லி, தோசைக்கும், மதியம் சாதத்துக்கும், இரவு சப்பாத்திக்கும் வைத்து சாப்பிடலாம். முக்கியமாக இந்த குருமா குழம்பு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இந்த குழம்பை தெரிந்து வைத்துக் கொண்டால், சமையலுக்கு லீவு விட வேண்டுமென்று நினைக்கும் நாட்களில் இந்த குழம்பை காலையில் செய்துவிட்டால் போதும்.

உங்களுக்கு இந்த சௌசௌ குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சௌசௌ குருமா குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 சிறிய துண்டு
* கல்பாசி - 1 சிறிய துண்டு
* கிராம்பு - 4
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 3/4 டீஸ்பூன்
* பூண்டு - 5-6 பல்
* இஞ்சி - சிறிது
* சின்ன வெங்காயம் - 10-12
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* நறுக்கிய தேங்காய் - 1/4 கப்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* சின்ன சைஸ் பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 2
* சௌ சௌ - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* அரைத்த மசாலா
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சௌ சௌ காயின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கல்பாசி, கிராம்பு, சோம்பு, சீரகம், மிளகு, பூண்டு,
இஞ்சி ஆகியவற்றை சேர்த்து குறைவான தீயில் வைத்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தேங்காயை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
பிரியாணி இலையை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன்
கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் சௌ சௌ காயை சேர்த்து, 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி,
அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, குக்கரை மூடி மிதமான தீயில்
வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி
கிளறினால், சுவையான சௌ சௌ குருமா குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications
