டிசம்பரில் விருச்சிக ராசியில் நுழையும் புதன் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம்

ஜோதிட சாஸ்திரத்தில் புதன் கிரகங்களின் இளவரசர் என்று கருதப்படுகிறார். வணிகம், பேச்சு, புத்திக்கூர்மை மற்றும் பகுத்தறிவின் அதிபதியாக கருதப்படும் புதனின் ராசி மாற்றம் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. டிசம்பர் மாதம் புதன் விருச்சிக ராசிக்குள் நுழையப்போகிறார். விருச்சிக ராசியில் புதன் பெயர்ச்சி ஆழ்ந்த சிந்தனை, ஆராய்ச்சி மற்றும் தீவிரமான தகவல் பரிமாற்றத்தைக் கொண்டுவருகிறது. இந்த கிரக மாற்றத்தின் விளைவுகள் அனைத்து ராசிகளிலும் பிரதிபலிக்கும். இருப்பினும், சில ராசிக்காரர்கள் இந்த ராசி மாற்றத்தால் சிறப்பான பலன்களை அனுபவிக்கப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Mercury Transit in Scorpio Bring Luck and Prosperity To These Zodiac Signs

புதன் எப்போது விருச்சிக ராசிக்குள் நுழைகிறார்?

டிசம்பர் 02 ஆம் தேதி மாலை 05:20 மணிக்கு இது கிரக மாற்றம் நிகழப்போகிறது. விருச்சிக ராசியில் புதனின் பெயர்ச்சி மனம் மற்றும் பேச்சின் ஆற்றல் மூலம் ஆழமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு காலகட்டமாகும். இது மறைந்திருக்கும் அறிவைப் பெறவும், நுணுக்கமான அல்லது உணர்திறன் மிக்க விஷயங்களைக் கையாளவும், உங்கள் வாழ்க்கைத்தரத்தை செம்மைப்படுத்தவும் உதவும். புதன் விருச்சிக ராசிக்குள் நுழைவதால் அதிர்ஷ்டமடையப் போகும் ராசிகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

மேஷம்

புதன் விருச்சிக ராசியின் 8-வது வீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார். இந்த வீடு மாற்றம், ரகசியங்கள் மற்றும் சொத்துக்களுடன் தொடர்புடையது. இந்தக் காலகட்டத்தில், வாரிசுரிமை மூலம் உங்களுக்குப் பணமோ அல்லது சொத்தோ கிடைக்க வாய்ப்புள்ளது; அல்லது மற்றவர்களுடன் இணைந்து நிதி சார்ந்த ஒப்பந்தங்களில் ஈடுபட நேரிடலாம். உறவுகளில், வழக்கத்தை விட உரையாடல்கள் அதிக ஆழத்துடனும், அர்த்ததுடனும் இருக்கலாம். இதனால் நெருக்கமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கலாம்

அவர்களின் நிதி நிலையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகளை இந்தக் காலகட்டத்தில் முடிக்க முடியும். வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகளை எதிர்பார்க்கலாம். வியாபாரிகள் கடின உழைப்பு மற்றும் முயற்சியால், அவர்களின் தொழிலை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லலாம். இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடலாம். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கு வாய்ப்புகளும் உள்ளன.

கடகம்

கடக ராசியின் 5-வது வீட்டில் புதனின் இந்த ராசி மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஐந்தாம் வீடு என்பது உங்கள் படைப்பாற்றல், காதல் மற்றும் குழந்தைகளுடன் தொடர்புடையது. புதிய வாகனம் வாங்குவதற்கும், புதிய சொத்துக்களை வாங்குவதற்கும் இந்த ராசி மாற்றம் உங்களுக்கு வாய்ப்புகளைக் கொடுக்கும். கடந்த காலத்தில் நிலவி வந்த ஆரோக்கியப் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும்.

வெளிநாட்டுப் பயணத்திற்கான புதிய வாய்ப்புகள் உங்களுக்கு தேடிவரும். உங்கள் வாழ்க்கையில் இதுவரை சந்தித்து வந்த தடங்கல்கள் இப்போது முடிவடையும். தொழில் தொடங்குவதற்கு இது மிகவும் சாதகமான நேரம். வேலை தேடுபவர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சாதகமானதாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில், அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். திருமணமான தம்பதிகள் ஒருவருக்கொருவர் தரமான நேரத்தை செலவிடலாம்.

துலாம்

விருச்சிக ராசியில் புதன் நுழைவது துலாம் ராசியின் இரண்டாம் வீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வீடு செல்வம், குடும்பம் மற்றும் பேச்சு ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த வீட்டில் புதன் அமைந்திருப்பது உங்கள் நினைவாற்றலையும் தகவல் தொடர்புத் திறனையும் மேம்படுத்தும். இதனால் நீங்கள் மற்றவர்களை எளிதில் ஈர்க்கும் வகையில் பேசும் ஆற்றலைப் பெறுவீர்கள்.

இந்த காலகட்டத்தில் அவர்கள் வழக்கத்தை விட எளிதாக அதிக பணம் சம்பாதிக்கலாம் மற்றும் அவர்களின் நிதி நிலையையும், சேமிப்பையும் அதிகரிக்கலாம். இதனுடன், சமூகத்தில் அவர்களின் செல்வாக்கு மற்றும் கௌரவம் அதிகரிக்கும். வர்த்தகர்கள் புதிய ஒப்பந்தங்கள் மூலம் பயனடையலாம். முதலீடுகளுக்கு இது சிறந்த நேரமாக இருக்கலாம், மேலும் அவர்கள் கடனாகக் கொடுத்த பணத்தை எளிதில் திரும்பப் பேரலை. அவர்களின் சக்திவாய்ந்த பேச்சால் அலுவலகத்தில் அவர்களின் அதிகாரத்தை உறுதிசெய்யலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, November 20, 2026, 22:56 [IST]
Desktop Bottom Promotion