Latest Updates
-
வேர்க்கடலை வைச்சு வெங்காயம், தக்காளி இல்லாம இப்படி கார குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
ஒல்லியாக இருந்தாலும் கொழுப்புக் கல்லீரல் பாதிப்பு ஏற்படுமா? டாக்டர் என்ன சொல்றாருன்னு பாருங்க.. -
60 லட்சம் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள உடலின் மிகப்பெரிய சுடுகாடு எந்த நாட்டில் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
டிசம்பர் மாதத்தில் இந்த 5 ராசிக்கு மகத்தான வெற்றியும், பணமும் குவியப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
பன் தோசையும், பொட்டுக்கடலை சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 20, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு லாபம் கொட்டும் நாளாக இருக்குப்போகுதாம் -
நாளை உருவாகும் விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. அவசரப்படக்கூடாது.. -
சூரியன் தனுசு ராசிக்குள் செல்வதால் கோடிகளில் புரளப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
புடலங்காயும், தயிரும் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
Hair Care: ஈரமான தலைமுடியுடன் தூக்குவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
மதியம் 10 நிமிடத்தில் சமையலை முடிக்கணுமா? அப்ப இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் மசாலா செய்யுங்க..
Kathirikkai Murungakkai Masala Recipe In Tamil: மதிய வேளையில் சாம்பார், குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? சட்டென்று மதிய சமையலை முடிக்க வேண்டுமா? உங்கள் வீட்டில் கத்திரிக்காயும், முருங்கைக்காயும் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டு காய்கறிகளையும் கொண்டு வாய்க்கு ருசியாக மசாலா செய்து சாப்பிடுங்கள்.
இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் மசாலாவை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், சுவை பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த மசாலா 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இந்த மசாலாவை ஒருமுறை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், வாரம் ஒருமுறை இந்த மசாலாவை செய்யுமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் முருங்கைக்காய் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* சோம்புத் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* முருங்கைக்காய் - 1 (நறுக்கியது)
* கத்திரிக்காய் - 1/4 கிலோ (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து,
நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சோம்புத் தூள்,
மிளகுத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, நன்கு எண்ணெய் பிரியும் வரை
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய முருங்கைக்காய், கத்திரிக்காயை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, சிறிது நீரை ஊற்றி நன்கு
கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான
கத்திரிக்காய் முருங்கைக்காய் மசாலா தயார்.



Click it and Unblock the Notifications
