Latest Updates
-
டிசம்பர் மாதத்தில் இந்த 5 ராசிக்கு மகத்தான வெற்றியும், பணமும் குவியப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
பன் தோசையும், பொட்டுக்கடலை சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 20, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு லாபம் கொட்டும் நாளாக இருக்குப்போகுதாம் -
நாளை உருவாகும் விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. அவசரப்படக்கூடாது.. -
சூரியன் தனுசு ராசிக்குள் செல்வதால் கோடிகளில் புரளப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
புடலங்காயும், தயிரும் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
Hair Care: ஈரமான தலைமுடியுடன் தூக்குவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
லன்ச்பாக்ஸிற்கு ஒருடைம் மசாலா தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
உங்க ராசியை சொல்லுங்க.. உங்களோட ரகசிய குணத்தை சொல்றோம்.. -
வாழைப்பழம் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாதா? பால் குடித்தால் சளி பிடிக்குமா? நம்பிக்கைகளும்.. உண்மையும்..
60 லட்சம் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள உடலின் மிகப்பெரிய சுடுகாடு எந்த நாட்டில் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
கல்லறை என்பது இறந்தவர்களின் நினைவாக கட்டப்படும் நினைவுச்சின்னமாகும். உலகில் இறந்த தங்களின் உறவினர்கள் நினைவாக பலரும் பிரம்மாண்டமான கல்லறைகளை கட்டியுள்ளனர். உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹால் கூட முகலாயப் பேரரசர் அவருடைய இறந்த மனைவியான மும்தாஜ் நினைவாக கட்டப்பட்ட கல்லறைதான். ஆனால் உலகின் மிகவும் பிரம்மாண்டமான கல்லறை எதுவென்றால் அது நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத ஒன்றாகும்.

இந்த பிரம்மாண்டமான இடுகாடு என்பது அளவைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுவது அல்ல. மாறாக இங்குள்ள கல்லறைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. ஏனெனில் இங்கு புதைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை என்பதை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாததாகும். இந்த பதிவில் உலகின் மிகப்பெரிய இடுகாடு எது மற்றும் அது எந்த நாட்டில் உள்ளது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உலகின் மிகப்பெரிய கல்லறை
ஈராக்கிலுள்ள புனித நகரமான நஜாஃபில்தான், உலகின் மிகப்பெரிய இடுகாடு அமைந்துள்ளது. இங்கு அறுபது லட்சத்திற்கும் அதிகமான உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. யுனெஸ்கோவின் கூற்றுப்படி, 'வாதி அல்-சலாம்' (இதன் அர்த்தம் 'அமைதிப் பள்ளத்தாக்கு') என்று அழைக்கப்படும் இந்த இடுகாடு, பல இறைத்தூதர்கள், அறிவியலாளர்கள் மற்றும் அரச குடும்பத்தினர் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடமாக விளங்குகிறது. இந்நகரத்தின் மையப்பகுதியிலிருந்து வடமேற்கு திசை வரை பரந்து விரிந்துள்ள இந்த இடுகாடு, நகரத்தின் மொத்தப் பரப்பளவில் 13 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளதுடன், நாளுக்கு நாள் மேலும் விரிவடைந்து வருகிறது.
2021-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 'வாதி அல்-சலாம்' வழக்கத்தை விட இருமடங்கு வேகத்தில் விரிவடைந்து கொண்டிருக்கிறது. கிட்டதட்ட 1500 ஏக்கருக்கு பரவியுள்ள இந்த இடுகாடு, மேலிருந்து பார்க்கும்போது, இது ஒரு பிரம்மாண்ட நகரம் போலத் தோன்றலாம். அங்குள்ள கல்லறைகள் நெருக்கமான கட்டிடங்களைப் போலக் காட்சியளிக்கின்றன. உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் முஸ்லிம்கள் இந்த புனித நகரத்திற்கு வருகை தருகின்றனர்.
யாரெல்லாம் இங்கு அடக்கம் செய்யப்படுகிறார்கள்?
இந்த இடுகாட்டில் அடக்கம் செய்யும் முறை மத்திய காலத்திற்கு முந்தைய, மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இருந்து வருகிறது என்று யுனெஸ்கோவின் அறிக்கை தெரிவித்துள்ளது. இங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களில் அல்-ஹிரா (Al-Hira) பகுதியைச் சேர்ந்த மன்னர்கள் மற்றும் தலைவர்கள், சசானிய காலத்தைச் சேர்ந்தவர்கள், அத்துடன் ஹம்தான், பாத்திமி, புவைஹி, சபாவி, கஜார் மற்றும் ஜலைரிய வம்சங்களைச் சேர்ந்த சுல்தான்கள் மற்றும் இளவரசர்கள் அடங்குவர். இந்த இடுகாட்டில் பலவகையான கல்லறைகள் காணப்படுகின்றன, மேலும் இங்கு வெவ்வேறு வகையான அடக்க முறைகளும் காணப்படுகின்றன. அவற்றில் நிலத்தடி கல்லறைகள் மற்றும் உயரமான கோபுர வடிவிலான கல்லறைகள் ஆகிய இரண்டும் அடங்கும்.
இந்த இடம் ஏன் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது?
இந்த இடம் உலகளவில் புகழ் பெற்றதாக இருப்பதற்கான காரணங்களில் ஒன்று, வாதி அல்-சலாமில் பல புகழ்பெற்ற நபர்களின் கல்லறைகள் இருப்பதுதான். இவர்களில் நபிகள் நாயகத்தின் மருமகனான இமாம் அலி இப்னு அபி தாலிபின் கல்லறை மிகவும் முக்கியமானதாகும். மேலும், இந்த இடுகாடு ஒரு தனித்துவமான கலாச்சார மரபுக்குச் சான்றாக விளங்குகிறது. இது நிலத்தைப் பயன்படுத்தும் ஒரு பாரம்பரிய முறையையும் பிரதிபலிக்கிறது.
இங்கு அடக்கம் செய்வதற்கான கட்டணம் எவ்வளவு?
உலகெங்கிலும் உள்ள ஷியா முஸ்லிம்களுக்கு இது ஒரு முக்கியமான அடக்கஸ்தலமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு 50,000 பேர் அடக்கம் செய்யப்படுகிறார்கள். இங்கு ஒரு கல்லறையைத் தோண்டுவதற்கு 100 டாலர்களும், கல்லறைக் கற்களை அமைப்பதற்கு 170 முதல் 200 டாலர்களும் செலவாகின்றன. யுனெஸ்கோவிற்குச் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், ஈராக் அதன் பரப்பளவை 917 ஹெக்டேர் என மதிப்பிட்டுள்ளது. இது கிட்டதட்ட 1,700 கால்பந்து மைதானங்களுக்கு சமமானதாகும். இங்குள்ள மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் இந்தக் குழப்பமான சிக்கலான பாதை வழியாகப் பார்வையாளர்களை வழிநடத்த எந்த வரைபடங்களும் இல்லை.



Click it and Unblock the Notifications

