Hair Care: ஈரமான தலைமுடியுடன் தூக்குவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க

Hair Care: தலைக்குக் குளிப்பது என்பது முடியை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கான ஒரு சிறந்த வழிமுறையாகும். ஆனால் அதிலும் சில பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்கிறது. பெரும்பாலான மக்கள் செய்யும் தவறுகளில் ஒன்று தலைக்கு குளித்தோ அல்லது மழையில் நனைந்தோ ஈரத்தலையுடன் இருக்கும்போதோ அப்படியே தூக்குவது.

Hair Care Side Effects Of Sleeping With Wet Hair

ஈரமான முடியுடன் தூங்குவதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் அல்லது தீய விளைவுகள் மிகக் குறைவுதான். இருப்பினும், உங்கள் முடியின் நிலை மற்றும் தன்மை, அத்துடன் நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய பிற சிக்கல்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, முடி முழுமையாக காய்ந்த பிறகு தூங்குவது நல்லது. இந்த பதிவில் ஈரமான தலையுடன் தூங்குவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

அதிகப்படியான முடி உதிர்தல் மற்றும் முடி உடைதல்

ஈரமாக இருக்கும் போது உங்கள் தலைமுடி மிகவும் பலவீனமாகவும் உடையக்கூடியதாகவும் மாறுகிறது. எனவே தூங்கும் போது தலைமுடியை ஈரமான நிலையிலேயே வைத்திருந்தால், முடி உதிர்தலும் உடைதலும் ஏற்படக்கூடும். நீங்கள் தூக்கத்தில் புரண்டு படுக்கும்போது, ​​ஈரமான தலைமுடிக்கும் தலையணை உறைக்கும் இடையே ஏற்படும் உராய்வினால், முடி எளிதில் உடைய வாய்ப்புள்ளது.

சளி மற்றும் தொண்டை வலி

குளிர்சாதன வசதி கொண்ட அறையில் தூங்கும்போதோ அல்லது கடும் குளிர்காலத்திலோ, தலைமுடி ஈரமாக இருந்தால் அது அதிக குளிரை ஏற்படுத்தக்கூடும். ஈரமான தலைமுடியால் சளி மற்றும் தொண்டை வலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆரோக்கியப் பிரச்சினைகளைத் தவிர்க்க, தூங்குவதற்கு முன் தலைக்கு குளிப்பதைத் தவிர்க்கவும்.

தலைமுடி சீரற்றதாக மாறும்

தலைமுடி ஈரமாக இருக்கும் போது தூங்கியவுடன் தலைமுடி காய்ந்த பிறகு, அது எந்த நிலையில் இருக்கிறதோ, அதே நிலையில் நிலைத்துவிடும். ஈரமான தலைமுடியுடன் தூங்கும்போது, ​​நீங்கள் தூக்கத்தில் புரண்டு படுப்பதால், தலைமுடி காய்ந்து கலைந்த அல்லது ஒழுங்கற்ற நிலையை அடைந்துவிடும். இதனால் தலைமுடியின் நுனிப் பகுதிகளும் உச்சந்தலைப் பகுதியுமே அதிகம் பாதிக்கப்படுகின்றன.

நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கும்

ஈரமான முடியுடன் தூங்குவது கடுமையான நோய்களை ஏற்படுத்தாது என்றாலும், இது மறைமுகமாக உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்தக்கூடும். இரவு நேரத்தில் பொதுவாக உடல் வெப்பநிலை குறைவாக இருக்கும். இந்த நேரத்தில் ஈரமான முடியுடன் தூங்கும்போது, ​​உடல் வெப்பநிலை இன்னும் குறைகிறது. உடல் வெப்பநிலை குறையும்போது, ​​தொண்டை வலி மற்றும் சாதாரண சளி போன்ற பாதிப்புகளுக்கு எதிரான நோய் எதிர்ப்புச் செயல்பாடு குறைந்துவிடுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிக்கிறது

வெப்பமான சூழலும் ஈரப்பதமும் சேரும்போது, ​​பாக்டீரியாக்கள் மிக வேகமாக பரவுகின்றன. ஈரமான தலைமுடியுடன் தூங்கும்போது, ​​உங்கள் தலையணை நனைந்துவிடுகிறது. நனைந்த தலையணையும், உங்கள் தலையிலிருந்து வெளிப்படும் வெப்பமும் இணைந்து, அந்தத் தலையணை பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் வளர்வதற்கு ஏற்ற இடமாக மாற்றுகின்றன.

பொடுகுத் தொல்லையை அதிகரிக்கும்

ஈரமான தலைமுடியுடன் தூங்கும்போது, ​​தலையின் வெப்பமும் ஈரப்பதமும் சேர்ந்து, உங்கள் தலையிலும் தலையணையிலும் பூஞ்சைகளும் பாக்டீரியாக்களும் வளர வழிவகுக்கின்றன. ஈரமான முடியுடன் தூங்கும்போது, ​​உங்கள் முடியில் உள்ள இயற்கையான எண்ணெய்களையும் ஈரப்பதத்தையும் தலையணை உறிஞ்சிக்கொள்கிறது. இவ்வாறு தலைமுடியின் இயற்கையான எண்ணெய்கள் குறைந்து, பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரிப்பதால், உச்சந்தலையில் பொடுகுத் தொல்லையும் அரிப்பும் ஏற்படுகின்றன.

முகப்பருவை ஏற்படுத்தும்

உங்கள் தலையணை பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் வளர்வதற்கான இடமாக மாறும்போது, ​​உங்கள் தோலில் முகப்பருக்கள் தோன்றுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே, தூங்குவதற்கு முன் உங்கள் தலைமுடியை முறையாக உலர்த்துவது அவசியமாகும்.

Story first published: Thursday, November 19, 2026, 22:30 [IST]
Desktop Bottom Promotion