புதன் நட்சத்திர பெயர்ச்சியால் டிசம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. உங்க ராசி இதுல இருக்கா?

Mercury Transit In Anusham Nakshatra 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன், குறுகிய நாட்களில் ராசியை மாற்றுவது மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றுவார். தற்போது புதன் துலாம் ராசியில் மற்றும் விசாக நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார்.

Mercury Transit In Anusham Nakshatra 2026 These Zodiac Signs Will Get More Profit

இந்நிலையில் இந்த புதன் டிசம்பர் 02 ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். அதைத் தொடர்ந்து டிசம்பர் 04 ஆம் தேதி அனுசம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த அனுசம் நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் ஆவார். புதன் சனி பகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

முக்கியமாக வியாபாரிகளுக்கு நல்ல லாபம், நிதி நிலையில் முன்னேற்றம் மற்றும் தொழில் வளர்ச்சி போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இப்போது டிசம்பர் மாத தொடக்கத்தில் நடக்கும் புதன் நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

புதன் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய நபர்களுடன் சேர்ந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். கூட்டு தொழில் செய்வதற்கான வாய்ப்புக்களும் தேடி வரலாம். இருந்தாலும் எந்த ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திடும் முன் முழுமையாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். நிதி நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.

கடகம்

புதன் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு வாழ்வில் பலவிதமான நல்ல மாற்றங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் நல்ல வெற்றியைக் காண்பார்கள். அலுவலகத்தில் உங்களின் செயல்திறன் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். மேலும் உங்களின் படைப்பாற்றல் வேலையில் குறிப்பிடத்தக்க சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கன்னி

புதன் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் சிறப்பான செயல்திறன் பாராட்டப்படும். மார்கெட்டிங், மீடியா போன்ற துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். உடன் பிறந்தவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.

மகரம்

புதன் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். முக்கியமாக புதிய வருமான வழிகள் உருவாகலாம். இதன் மூலம் நிதி நிலைமை மேம்படும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு புதிய நட்புகளால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் மீண்டும் நடக்கும். இருந்தாலும் அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, November 19, 2026, 16:45 [IST]
Desktop Bottom Promotion