Latest Updates
-
நவம்பர் 19, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்படப்போகுதாம் -
சூரியன்-செவ்வாய் உருவாக்கும் அரிய யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிசயங்கள் நடக்கப்போகுதாம் -
10 சின்ன வெங்காயம் இருந்தா இப்படி கேரளா ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
40 வயதிலும் 20 வயது போல காட்சியளிக்க தவிர்க்க வேண்டிய 5 உணவுகள் - இந்த உணவுகளை அதிகமா சாப்பிடாதீங்க -
3000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் தோன்றிய முதல் ஸ்வீட் எது தெரியுமா? உங்களுக்கு இந்த ஸ்வீட் பிடிக்குமா? -
மதுரை ஸ்பெஷல் தக்காளி பொங்கல் ரெசிபி - இந்த மாதிரி தக்காளி சாதம் செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் இந்த 3 ராசிகளை தோல்விகளும், நஷ்டங்களும் துரத்தப்போகுதாம் -
வழக்கமான சாம்பார் வைக்காம இந்த மங்களூர் ஸ்டைல் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
விமானத்தில் பயணிக்கும் போது போனை ஏன் அவசியம் 'Airplane Mode'-ல் வைக்க சொல்றாங்க தெரியுமா? -
வெங்காயம் சேர்க்காத பூண்டு தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
முடக்கத்தான் கீரை தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க..
Mudakkathan Keerai Dosa With Coconut Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி தோசை செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரி ப்ளைன் தோசை தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை முடக்கத்தான் கீரை தோசையை சுடுங்கள். இந்த தோசை மிகவும் சத்தானது. அதுவும் சளி பிடித்திருப்பவர்கள் இந்த முடக்கத்தான் கீரை தோசையை சாப்பிட்டால், சளி குறையும்.
இந்த தோசையை பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். இந்த தோசைக்கு தேங்காய் சட்னி சூப்பரான சைடு டிஷ்ஷாக இருக்கும். குளிர்காலத்தில் வாரத்திற்கு 2 முறை இந்த தோசையை சுட்டு சாப்பிடும் போது, சளி தொல்லையில் இருந்து விடுபடலாம்.

உங்களுக்கு இந்த முடக்கத்தான் கீரை தோசையும், தேங்காய் சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முடக்கத்தான் கீரை தோசை மற்றும் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
முடக்கத்தான் கீரை தோசைக்கு...
* வரமிளகாய் - 3
* பூண்டு - 10 பல்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* முடக்கத்தான் கீரை - 1 கட்டு
* தண்ணீர் - சிறிது
* இட்லி மாவு - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
தேங்காய் சட்னிக்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4
* இஞ்சி - சிறிய துண்டு
* துருவிய தேங்காய் - 1 கப்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் முடக்கத்தான் கீரையின் இலைகளை மட்டும் எடுத்துக் கொண்டு,
நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வரமிளகாய், பூண்டு, மிளகு, சீரகம்,
முடக்கத்தான் கீரையை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த விழுதை இட்லி மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும்
வேக வைத்து எடுத்தால், சுவையான முடக்கத்தான் கீரை தோசை தயார்.
* அடுத்து சட்னி செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை
சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள்,
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய மிளகாய் மற்றும் இஞ்சியை சேர்த்து,
அத்துடன் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, புளி மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில்
சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்த்து கலந்து கொள்ள
வேண்டும்.
* இறுதியாக சட்னியில் தாளித்து வைத்துள்ளதை சேர்த்து கலந்தால்,
தேங்காய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
