சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் இந்த 3 ராசிகளை தோல்விகளும், நஷ்டங்களும் துரத்தப்போகுதாம்

ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவான் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மெதுவாக நகரும் கிரகமாகக் கருதப்படுகிறார். சனிபகவான் ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு தண்டனை அல்லது நற்பலன்களை அளிப்பதாக ஜோதிடம் கூறுகிறது. சனிபகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் நிலைபெற்றிருப்பார்.

Saturn Direct Transit in Pisces Bring Troubles To These Zodiac Signs

ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவானின் இயக்கம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. டிசம்பர் 11 அன்று, மீன ராசியில் சனி பகவான் வக்ர நிலையிலிருந்து நேரடி இயக்கத்தை தொடங்கப் போகிறார். சனிபகவான் ஜூன் 2027 வரை இதே நிலையில் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக சனிபகவானின் நகர்வு சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான பலன்களையும் அளிப்பார். சனிபகவானின் இந்த கிரக மாற்றத்தின் போது சில ராசிக்காரர்கள் தடைகளையும், சவால்களையும் சந்திக்கப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சனிபகவான் சோதனையான காலத்தைக் கொடுக்கப்போகிறார். இந்த நேரத்தில் அவர்கள் அனைத்து விவகாரங்களிலும் தாமதங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அவர்களுக்கு ஒதுக்கப்படும் வேலைகளை முடிக்க அதிகமாகப் போராட வேண்டியிருக்கும். அலுவலகத்தில் அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் வீண் பழிகளை சுமக்க நேரிடும். நிதி இழப்புகள் அவர்களின் சேமிப்பை கடுமையாகப் பாதிக்கும்.

தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர்கள் பல சவால்களை ஏற்படுத்தும். வேலையில் மட்டுமல்ல, சமூக வாழ்க்கையிலும் அவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. வணிக விஷயங்களில் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். எதிர்பார்த்த லாபங்கள் நஷ்டமாக மாற வாய்ப்புள்ளது.

கடகம்

சனிபகவானின் நேரடி நேரடி இயக்கம் கடக ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கப்போவதில்லை. அவர்கள் இந்த காலகட்டத்தில் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம். அவர்கள் நினைத்த விஷயங்கள் எதுவும் இப்போதும் சாதகமாக முடிவடையாது. திருமண வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அலுவலகத்தில் அவர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும், இல்லையெனில் அது உங்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம், இல்லையெனில் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டம் நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த கிரக மாற்றம் எதிர்மறையான பலன்களை அளிக்கப்போகிறது. இந்த நேரத்தில் அவர்களின் தொழில் வாழ்க்கையில் எந்த வளர்ச்சியும் இருக்காது, தற்போதைய வேலையை மாற்றும் முடிவை கைவிடுங்கள். ஒரு சிறந்த வேலைக்கு உங்களை தயார்படுத்திக் கொள்வதும், புதிய வேலைக்கு விண்ணப்பிக்க சரியான நேரத்திற்காக காத்திருப்பதும் நல்லது. இந்த காலகட்டத்தில் முதலீடுகளைத் தவிர்க்கவும், ஏனெனில் இது பெரிய அளவிலான இழப்புகளை ஏற்படுத்தும்.

உங்கள் திருமணம் அல்லது காதல் வாழ்க்கையில் பிரச்சனைகளைத் தவிர்க்க உங்கள் நடத்தையில் கூடுதல் கவனம் அவசியம். உங்களின் வெளிப்படைத்தன்மை உங்கள் உறவுகளில் நம்பிக்கையைக் காப்பாற்ற உதவும். உங்கள் வணிக ஒப்பந்தங்கள் இழப்புகளை ஏற்படுத்தக்கூடும், எனவே எந்த ரிஸ்க்கும் எடுக்க வேண்டாம். இந்த காலகட்டத்தில் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன, எனவே கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, November 18, 2026, 14:29 [IST]
Desktop Bottom Promotion