Latest Updates
-
வீட்டில் டீ போடும்போது இந்த தவறுகளை தெரியமா கூட செஞ்சுராதீங்க - இல்லனா உங்க டீ வாயிலேயே வைக்கமுடியாது -
Karthigai Matha Rasi Palan 2026: கார்த்திகை மாதத்தின் ஆசீர்வதிக்கப்பட்ட 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
கடன் கொடுத்தப்பணம் திரும்ப கிடைக்கவே மாட்டேங்கிதா? இந்த வாஸ்து டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க -
எந்த கிழமையில் பிறந்தவர்கள் அதிக அதிர்ஷ்டசாலிகள்? யார் புத்திசாலி, யார் தைரியசாலி? -
சனி-ராகு-கேது அடுத்த 24 நாட்களுக்கு இந்த 4 ராசிக்காரர்களை சோதிப்பார்.. உஷாரா இருங்க.. -
100 ஆண்டுக்கு மேல் ஆயுட்காலம் கொண்ட மக்கள் வாழும்பூமியின் 5 'நீல மண்டலங்கள்' - அவங்க ரகசியம் என்ன தெரியுமா? -
முள்ளங்கி கோலா உருண்டை குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
1/4 கிலோ கத்திரிக்காய் இருந்தா இந்த ஆந்திரா கத்திரிக்காய் வறுவலை செஞ்சு பாருங்க - செம டேஸ்ட்டா இருக்கும் -
ஏசி ஜிம்மில் உடற்பயிற்சி செய்தால் கொழுப்பு கரையாதா? டாக்டர் சொல்லும் உண்மை! -
ஒவ்வொரு மனிதருக்கும் ஏன் தனித்துவமான கைரேகை உள்ளது? அது கருவில் எப்படி உருவாகிறது தெரியுமா?
பனியால் உதடு வெடிப்பை சந்திக்குறீங்களா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க..
Winter Lip Care Tips In Tamil: தற்போது பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக சருமம் வறண்டு போவது, உதடுகளில் வெடிப்பு ஏற்படுவது போன்ற பிரச்சனைகளால் நிறைய பேர் அவதிப்படுவார்கள். குறிப்பாக குளிர்ச்சியான காற்று மற்றும் குறைவான ஈரப்பதம் காரணமாக உதடுகளில் உள்ள ஈரப்பதம் குறைந்து, உதடுகள் வறண்டு, வெடித்து, சில நேரங்களில் வலியையும் ஏற்படுத்தும். இப்படி உதடுகள் வறண்டு போதும் போது நிறைய பேர் நாக்கால் ஈரப்படுத்துவார்கள். ஆனால் இப்படி எச்சிலால் உதடுகளை ஈரப்படுத்தும் போது பிரச்சனை மேலும் தான் அதிகரிக்கும் என்பது தெரியுமா?

எப்படி இந்த பனிக்காலத்தில் முகத்திற்கு பராமரிப்பு கொடுக்கிறோமோ, அதேப் போல் உதடுகளுக்கும் கூடுதல் பராமரிப்பை கொடுக்க வேண்டும். உதடுகளும் மிகவும் மென்மையானது என்பதால் ஈரப்பதம் குறையும் போது சீக்கிரம் வறட்சியும், வெடிப்புகளும் ஏற்படும். இதற்கு விலையுயர்ந்த லிப் பாம்கள் அல்லது அழகு சாதனப் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டும் உதடுகளை பராமரிக்கலாம். நீங்கள் உதடு வறட்சியால் வெடிப்புகள் ஏற்பட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் அதை சரிசெய்ய உதவும் சில இயற்கை வழிகளை இப்போது காண்போம்.
1. தேங்காய் எண்ணெய்
உதடுகளில் வெடிப்புக்களை அதிகம் சந்தித்தால், உதடுகளுக்கு தேங்காய் எண்ணெயை தடவுங்கள். இது உதடுகளுக்கு ஈரப்பதமூட்டி வறட்சியை தடுப்பதோடு, அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளானது காயங்களை குணப்படுத்த உதவுகிறது.
2. தேன்
தேன் மருத்துவ குணம் வாய்ந்த பொருள் மட்டுமின்றி, சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கவும் உதவிபுரிகிறது. அதற்கு உதடுகளில் வெடிப்புக்களை அதிகம் சந்திப்பவர்கள், தேனை உதடுகளில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் கழுவுங்கள்.
3. கற்றாழை
நற்பதமான கற்றாழை ஜெல் வறட்சியை போக்கி, உதடு வெடிப்பை சரிசெய்ய உதவுகிறது. அதற்கு குளிர்காலத்தில் அடிக்கடி கற்றாழை ஜெல்லை உதடுகளில் தடவுங்கள். இப்படி அடிக்கடி செய்யும் போது, உதடுகள் ஈரப்பதத்துடனும், மென்மையாகவும் இருக்கும்.
4. நெய்
நெய்யில் கொழுப்புக்கள் அதிகம் உள்ளன. எனவே இந்த நெய்யை உதடு வெடிப்பின் போது உதடுகளில் தடவும் போது, அது ஈரப்பதமூட்டுவதோடு, உதடுகளை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும். அதற்கு நெய்யை உதடுகளில் தடவினால் போதும்.
5. ரோஜாப்பூ பேஸ்ட்
ரோஜாப்பூக்களின் இதழ்களை அரைத்து, பால் அல்லது தேன் சேர்த்து கலந்து, அதை உதடுகளில் தடவும் போது, உதடுகளில் ஏற்படும் வறட்சி தடுக்கப்படுவதோடு, வெடிப்புக்களும் விரைவில் குணமாகும். முக்கியமாக இந்த லிப் பேக்கை பயன்படுத்தும் போது உதடுகள் பட்டுப்போன்று மென்மையாகும்.
6. ஆலிவ் ஆயில்
ஆயில் ஆயில் உதட்டு வறட்சியைப் போக்க பெரிதும் உதவக்கூடிய பொருள். இதை தினமும் ஒருவர் உதடுகளில் தடவி மசாஜ் செய்யும் போது, உதடுகள் ஈரப்பதமடைவதோடு, நன்கு மென்மையாகவும், அழகாகவும் இருக்கும். உங்கள் உதடுகளின் அழகை இயற்கை வழியில் மேம்படுத்த நினைத்தால், இந்த எண்ணெயை தினமும் இரவு உதடுகளில் தடவி மசாஜ் செய்யுங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
