Latest Updates
-
முள்ளங்கி கோலா உருண்டை குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
1/4 கிலோ கத்திரிக்காய் இருந்தா இந்த ஆந்திரா கத்திரிக்காய் வறுவலை செஞ்சு பாருங்க - செம டேஸ்ட்டா இருக்கும் -
ஏசி ஜிம்மில் உடற்பயிற்சி செய்தால் கொழுப்பு கரையாதா? டாக்டர் சொல்லும் உண்மை! -
ஒவ்வொரு மனிதருக்கும் ஏன் தனித்துவமான கைரேகை உள்ளது? அது கருவில் எப்படி உருவாகிறது தெரியுமா? -
Karthigai Matha Rasi Palan 2026: கார்த்திகை மாதம் யாருக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாவும் இருக்கும் தெரியுமா? -
உடுப்பி தேங்காய் சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
நவம்பர் 17, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சூரிய கூட்டணி: இன்று முதல் இந்த 3 ராசிகளுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - எந்தெந்த ராசிகள் தெரியுமா? -
குளிர்காலத்தில் சரும வறட்சியை அதிகம் சந்திக்குறீங்களா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க..
100 ஆண்டுக்கு மேல் ஆயுட்காலம் கொண்ட மக்கள் வாழும்பூமியின் 5 'நீல மண்டலங்கள்' - அவங்க ரகசியம் என்ன தெரியுமா?
தற்போதைய வேகமான உலகில் பெரிதும் மாறிவிட்ட வாழ்க்கை முறையாலும், உணவு முறையாலும் மக்களின் சராசரி ஆயுட்காலம் குறைந்து கொண்டே வருகிறது. இருப்பினும், விதிவிலக்காக உலகின் சில பகுதிகளில், மக்கள் மிக நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கின்றனர். இந்த இடங்கள் பூமியின் 'நீல மண்டலங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் துரித உணவுகளைத் தவிர்த்து, பெரும்பாலும் இயற்கையான மற்றும் தாவர அடிப்படையிலான உணவுகளை உண்பது போன்ற பொதுவான ஆரோக்கிய பழங்கள் அவர்களிடம் உள்ளன. மேலும் அங்குள்ள மக்கள் வழக்கமான, எளிதான உடற்பயிற்சிகளையும் செய்கிறார்கள்.

ஆய்வுகளின் படி உலகில் மொத்தம் 5 நீல மண்டலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. நீல மண்டலங்களில் உள்ள மக்கள், ஒன்றோடொன்று தொடர்புடைய பல நல்ல பழக்கங்களைக் கொண்டிருப்பதாலும், கெட்ட பழக்கங்களைத் தவிர்ப்பதாலும் சிறப்பாக வாழ்கிறார்கள். இந்த பதிவில் உலகில் மக்கள் நீண்ட ஆயுளோடு வாழும் நீல மண்டலங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
சார்டினியா, இத்தாலி
இத்தாலியின் சார்டினியாவில் உள்ள மலைப்பகுதிகளில் உள்ள கிராமத்தில் வாழும் ஆண்கள் 100 வயதைக் கடந்தும் ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் வாழ்கிறார்கள். அவர்கள் மலைகளில் தினமும் ஐந்து மைல்களுக்கும் மேலாக நடந்து செல்லும் ஆடு மேய்ப்பவர்கள். இவர்களது உணவில் பெரும்பாலும் தாவர அடிப்படையிலான பொருட்களே இடம்பெறுகின்றன; அதனுடன், உள்ளூர் தயாரிப்பான 'கனோனோ' ரக ஒயினை குறிப்பிட்ட அளவில் அருந்துகிறார்கள். இந்த இடத்தின் தனிச்சிறப்பு, குடும்ப உறவுகளுக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவம்தான். இங்கு முதியவர்கள் வெறும் மரியாதைக்குரியவர்களாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. அவர்கள் கொண்டாட்டத்திற்குரியவர்களாகவும் போற்றப்படுகிறார்கள். இங்குள்ள அன்பான சூழல் அவர்கள் நீண்ட ஆயுளோடு வாழ்வதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.
ஒகினாவா, ஜப்பான்
ஜப்பானின் ஒகினாவாவில், நீண்ட ஆயுளின் இரகசியம் பெண்களிடமே உள்ளது. ஒகினாவா மக்கள், டோஃபு, மிசோ மற்றும் கடற்பாசி போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்டு மகிழ்கின்றனர். அவர்களின் நீண்ட ஆயுள் என்பது வெறும் ஆரோக்கியமான உணவின் விளைவு மட்டுமல்ல. அது அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தை அளிக்கும் உந்துசக்தியான 'இகிகாய்' என்ற கருத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. ஒகினாவா மக்கள் 'மோவாய்' என்ற பழக்கத்தையும் கடைப்பிடிக்கின்றனர். இதன் மூலம், குழந்தைப் பருவத்திலிருந்தே நெருங்கிய சமூக வலைப்பின்னல்களை உருவாக்கி, அவை வயது வந்த பிறகும் நீடிக்கின்றன. இந்த அமைப்பு அவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான மற்றும் நிதி ரீதியான ஆதரவை அளிக்கிறது.
லோமா லிண்டா, கலிபோர்னியா, அமெரிக்கா
நகர்ப்புற வாழ்க்கைக்கு பெயர் போன கலிபோர்னியாவின் மத்தியில், லோமா லிண்டாவில் ஒரு சமூகம் உள்ளது. அங்கு வசிப்பவர்கள், தங்கள் சக அமெரிக்கர்களை விட சராசரியாக 10 ஆண்டுகள் கூடுதலாக வாழ்கின்றனர். இந்த நீண்ட ஆயுள், நெருங்கிய பிணைப்புள்ள ஒரு புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவப் பிரிவான செவன்த்-டே அட்வென்டிஸ்டுகளின் வாழ்க்கை முறையுடன் தொடர்புடையது. விவிலியப் போதனைகளால் அவர்கள் தாவர அடிப்படையிலான உணவைப் பின்பற்றி, அவர்கள் புகைபிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கிறார்கள், மேலும் பெரும்பாலும் தங்கள் வாழ்நாளின் பிற்பகுதி வரையிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள்.
நிகோயா, கோஸ்டாரிகா
மத்திய அமெரிக்காவின் மையப்பகுதியில் உள்ள கோஸ்டாரிகாவிற்கு அருகில் உள்ளது நிகோயா. அங்கு மக்களின் வருமானம் குறைவாக இருந்தாலும், அவர்கள் உலகின் மிகவும் அதிகமான ஆயுட்காலங்களில் ஒன்றைக் கொண்டுள்ளனர், அதாவது சராசரியாக 85 ஆண்டுகள் வரை வாழ்கின்றனர். இச்சமூகத்தினர் நம்பிக்கை மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு வாழ்கின்றனர்; முதியவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வசிப்பதோடு, மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள். "பிளான் டி விடா" எனும் வாழ்க்கைத் திட்டம், அவர்களுக்கு ஒரு தெளிவான நோக்கத்தை வழங்குகிறது. இதனுடன், பதப்படுத்தப்படாத உணவுகள், கால்சியம் நிறைந்த கடினமான குடிநீர் மற்றும் வழக்கமான நடைப்பயிற்சி போன்ற ஆரோக்கிய பழக்கங்கள் அவர்களின் ஆயுளை அதிகரிக்கிறது.
இக்காரியா, கிரீஸ்
கிரீஸில் உள்ள இக்காரியாவின் பசுமையான நிலப்பரப்புகளுக்கு மத்தியில், வசிப்பவர்கள் 90 வயதைக் கடந்து வாழ்வதற்கான அதிக வாய்ப்புகளையும், குறைந்த அளவிலான மறதி நோயையும் கொண்டுள்ளனர். மலைப்பாங்கான நிலப்பரப்பின் காரணமாக, இந்த தீவில் வசிப்பவர்கள் இயல்பாகவே சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கின்றனர். காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த அவர்களின் மத்திய தரைக்கடல் உணவுமுறை, அவர்களின் ஆரோக்கியத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இவர்கள் மதியம் தூங்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். மதிய நேர உறக்கம் என்பது ஒரு ஆடம்பரம் மட்டுமல்ல, அது மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும் ஒரு பாரம்பரியமாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

