Latest Updates
-
உடுப்பி தேங்காய் சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
நவம்பர் 17, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சூரிய கூட்டணி: இன்று முதல் இந்த 3 ராசிகளுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - எந்தெந்த ராசிகள் தெரியுமா? -
குளிர்காலத்தில் சரும வறட்சியை அதிகம் சந்திக்குறீங்களா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க.. -
சேமியாவை வைச்சு உப்புமா செய்யாம இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
Hair Care: உங்க முடியை பளபளப்பாக, ஆரோக்கியமாக மாற்றும் வெந்தய மாஸ்க்கை எப்படி வீட்டிலேயே செய்யலாம் தெரியுமா? -
இந்த 4 ராசி குழந்தைகள் ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க குழந்தை ராசி இதுல இருக்கா? -
1 கைப்பிடி முருங்கைக்கீரையும், சீஸும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இதுல உங்களுக்குப் பிடித்த ஒரு கண்ணைத் தேர்வு செய்யுங்க.. உங்கள் ஆளுமையின் ரகசியத்தை சொல்றோம்..
Karthigai Matha Rasi Palan 2026: கார்த்திகை மாதம் யாருக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாவும் இருக்கும் தெரியுமா?
Karthigai Matha Rasi Palan 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். ஆத்ம காரகனான சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார். நவகிரகங்களில் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர் தான் சூரியன். சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழைந்துள்ளார். இதனால் தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான கார்த்திகை மாதம் பிறந்துள்ளது.

கார்த்திகை மாதத்தில் சூரியன் நீச்ச நிலையில் இருந்து விடுபட்டு விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த கார்த்திகை மாதம் தீப வழிபாட்டிற்கு உரிய மாதம். இந்த மாதத்தில் யாருக்கு பணவரவு வரும், யாருக்கு செலவு அதிகரிக்கும். யாரெல்லாம் புதிய பொருட்களை வாங்குவார்கள் கடவுள் அருள் நிறைந்த கார்த்திகை மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து ஜோதிடர் ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட் ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
மேஷம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பணவரவு அற்புதமாக உள்ளது. திருமணம் கை கூடி வரும். தடைகள் நீங்கும். ஐந்தாம் வீட்டில் குரு அமர்ந்து உங்கள் ராசியை பார்ப்பதால் நன்மைகள் நடக்கும், முயற்சி பலன் கொடுக்கும். நல்ல வேலைகள் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம். சூரியன் எட்டாம் வீட்டில் பயணிப்பதால் வேலையில் கவனம் தேவை. அரசு வேலை செய்பவர்களுக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். புதிதாக தொழில் ஆரம்பிக்கலாம். கணவன் மனைவி உறவில் நெருக்கம் அதிகமாகும். புதிய வேலைக்கு முயற்சி செய்யுங்கள் குரு பகவானை வணங்குங்கள் நல்லதே நடக்கும்.
ரிஷபம்
சுக்கிர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே! நான்காம் வீட்டில் கேது, கூடவே குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சூரியன் ஏழாம் வீட்டில் பயணிப்பதால் உடலில் சூடு அதிகரிக்கும். பண விசயத்தில் கவனமாக இருக்கவும். இருக்கிறதை விட்டுட்டு பறப்பதற்கு ஆசைப்படாதீங்க. வேலையை விட வேண்டாம். புதிய வேலை மாற இது சரியான நேரமில்லை. நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்
புத்திநாதன் புதனை ராசி நாதனாகக் கொண்டவர்களே! சூரியன் ஆறாம் வீட்டில் பயணம் செய்வதால் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். குரு பகவானின் பயணம் மற்றும் பார்வையால், கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். திருமணமான தம்பதியருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். புதிய பிரச்சினைகள் வந்தாலும் அதை சமாளித்து விடுவீர்கள். வேலையில் இடமாறுதல் வரும். நல்லதாகவும் நடக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும், காதல் உங்களுக்கு ஒத்து வராது. காதல் வலையில் விழ வேண்டாம். படிப்பில் கவனம் செலுத்துங்கள். இல்லாவிட்டால் கஷ்டப்பட வேண்டியிருக்கும். பள்ளி கொண்ட பெருமாளை வணங்க ராகு,கேதுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
கடகம்
சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்கவும். குடும்ப குரு குதூகலத்தை ஏற்படுத்துவார். வேலையில் எந்த பிரச்சினையும் இல்லை உங்களுக்கு மாற்றமும் இல்லை. நிம்மதியாக இருக்கவும். குரு பார்வையால் நன்மைகள் நடைபெறும். திருமணமான தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். படித்து விட்டு வேலைக்காக வெளிநாடு செய்வதற்கு முயற்சி செய்பவர்களுக்கு வெற்றிகள் தேடி வரும். சந்திர பகவான் ஆலயமான திருப்பதி ஏழுமலையானை வணங்க பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடக்கும்.
சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு கார்த்திகை மாதம் யோகமான மாதம். உங்களுக்கு அதிர்ஷ்டங்கள் தேடி வரும். பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் விடிவு காலம் பிறக்கப்போகிறது. ராசி அதிபதி சூரியன் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நன்மைகள் தேடி வரும். ஜென்ம குருவின் பார்வையும் பயணமும் உங்களுக்கு சாதகமாக உள்ளது. கல்வி பயிலும் மாணவர்களுக்கு இருந்த இடைஞ்சல்கள் தீரும். கல்விக்கடன் கிடைக்கும். பிடித்த படிப்பு படிக்க நல்ல நேரம் கூடி வருது. சுப செலவுகள் செய்வீர்கள். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு கார்த்திகையில் கெட்டிமேளம் சத்தம் கேட்கும். காதல் கை கூடி வரும் காலம் கனிந்துள்ளது. சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்லதே நடக்கும்.
கன்னி
புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே! கார்த்திகை மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். திருமண தடைகள் நீங்கும். முயற்சி திருவினையாக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய வேலைகள் கிடைக்கும். அரசு தேர்வு எழுதுபவர்களுக்கு வெற்றிகள் தேடி வரும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். யாரையும் நம்பி முதலீடு செய்து மாட்டிக் கொள்ளாதீர்கள். இந்த மாதம் வீட்டில் விளக்கேற்றி வழிபட தீவினைகள் அகலும்.
துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே! உங்கள் ராசியில் நீசம் பெற்றிருந்த சூரியன், கார்த்திகை மாதத்தில் குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் கஷ்டங்கள் விலகும் காலம் வந்து விட்டது. லாப குருவினால் துலாம் ராசிக்கு இப்போது ராஜயோக காலம் வந்து விட்டது. வேலைக்காக வெளிநாடு செல்லும் யோகம் கை கூடி வரப்போகிறது. தேவையற்ற கடன் வாங்கி கடனில் சிக்கி தத்தளிக்க வேண்டாம். செய்யும் தொழிலில் லாபம் வரும் அதுதான் இந்த மாதத்தில் உங்களுக்கு ஆறுதலான விசயம். குழந்தைகளுக்காக காத்திருக்கும் தம்பதியருக்கு புத்திர பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த மாதம் பத்ரகாளியை வணங்க நன்மைகள் அதிகரிக்கும்.
விருச்சிகம்
சூரியன் உங்களுடைய ஜென்ம ராசியில் இருக்கிறார். தேவையற்ற பிரச்சினையில் தலையிட்டு மாட்டிக்கொள்ளாதீர்கள். பத்தாம் வீட்டில் பயணிக்கும் குருவினால் பதவியோகம் வரும். பயணங்கள் சந்தோஷத்தை கொடுக்கும். வேலையில் உற்சாகம் ஏற்படும். பதவி உயர்வு வருமான உயர்வு ஏற்படும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். புதிய வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவீர்கள். லாபமாக முடியும். அரசு தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். திடீர் திருமண வாய்ப்புகள் கைகூடி வரும். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைய திருச்செந்தூர் முருகனை வணங்க நன்மைகள் நடைபெறும்.
தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாக கொண்ட தனுசு ராசிக்காரர்களே! விரைய ஸ்தானத்தில் பயணிக்கும் சூரியனால் சுப விரைய செலவுகள் வரும். குருவின் பார்வை உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். உங்களுக்கு திருமணத்திற்கு உண்டான யோகம் வந்து விட்டது. வரன் பார்க்கத் தொடங்குங்கள். காதல் திருமணம் என அவசரப்பட வேண்டாம். ராசிநாதன் குரு உங்க ராசியை பார்ப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். பிரிந்தவர்கள் கூட ஒன்று சேருவார்கள். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருங்கள். நல்ல செய்தி தேடி வரும். சங்கடங்கள் நீங்க கார்த்திகை சோமவார நாளில் சிவ தரிசனம் செய்தால் குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் நீங்கும்.
மகரம்
உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன் பயணம் செய்வதால் அரசு தொடர்பான லாபம் கிடைக்கும் உயரதிகாரிகளின் உதவி கிடைக்கும். பணம் வரவு செலவில் கவனமாக இருங்கள். உங்களுக்கு தேவையற்ற பொருட்களை வாங்கி விரைய செலவு பண்ணாதீங்க. அவசியம் ஏற்பட்டால் மட்டுமே எதையும் வாங்குங்கள் இல்லாவிட்டால் கடனாளி ஆகி விடுவீர்கள். தங்க நகைகளை இரவல் கொடுக்காதீர்கள், விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக பாதுகாக்கவும். வண்டி வாகனத்தில் போகும் போது பத்திரமாக இருங்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். யாரைப் பற்றியும் வம்பு பேசாதீர்கள் அது நல்லதில்லை. உங்களுக்கே வம்பாக முடியும். இந்த மாதம் பாதிப்புகள் குறைந்து நல்லது நடக்க சனிபகவானை விளக்கேற்றி வணங்குங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தொழில் ஸ்தானத்தில் சூரியன் பயணிப்பதால் பதவி யோகம் தேடி வரும். புதிய வேலையும், புரமோசனும் கிடைக்கும். குரு பகவானின் நேரடி பார்வையால், சிலருக்கு திடீர் திருமணங்கள் நடைபெற வாய்ப்பு வரும். கஷ்டங்கள் காணாமல் போகும் காலம் வந்து விட்டது. இந்த மாதம் மட்டுமல்ல இனிவரும் மாதங்களும் நல்லதாகவே நடக்கும். வீடு மனை வாங்குவீர்கள். கடன் வாங்கியாவது வீடு கட்டுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த மாதம் வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் விளக்கேற்றி வழிபடுங்கள் நல்லதே நடக்கும்.
மீனம்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே! சூரியன் உங்க ராசிக்கு 9 ஆம் வீட்டில் பயணம் செய்வதால் புது வீடு கட்டும் யோகம் வருகிறது. பெண்களுக்கு தங்க நகை வாங்கும் யோகம் வந்து விட்டது. கஷ்டங்கள் விலகும் காலம் என்றாலும் ஜென்ம சனி காலம் என்பதால், வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வியாபாரம் சின்ன சிக்கலோடு போகும். பிசினஸ் சுமார்தான். சிலர் வேறு பிசினஸ் செய்வீர்கள். உங்க படிப்புக்கு தகுந்த புதிய வேலைகள் கிடைக்கும். புதிய நட்புகள் உறவுகள் மூலம் நல்லது நடக்கும். கடன் வாங்காதீங்க கேட்டாலும் கிடைக்காது. கவலைகள் தீர திங்கட்கிழமைகளில் சிவபெருமானை வணங்குங்கள் நல்லதே நடக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




