குளிர்காலத்தில் சரும வறட்சியை அதிகம் சந்திக்குறீங்களா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க..

DIY Face Pack For Winter: குளிர்காலம் வந்துவிட்டாலே சரும வறட்சியால் அதிகம் சிரமப்படக்கூடும். இப்படி சருமம் அதிகம் வறண்டு இருந்தால், அது முகத்தை பொலிவிழக்கச் செய்வதோடு, இந்த வறட்சி தீவிரமாகும் போது அரிப்பை ஏற்படுத்தும். இந்த சரும வறட்சியைப் போக்க பலர் விலையுயர்ந்த மாய்ஸ்சுரைசர்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் சருமத்தில் ஏற்படும் வறட்சியை குறைக்க நம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் பயன்படுத்தி வந்தாலே, வறட்சியைக் கட்டுப்படுத்தி பொலிவை அதிகரிக்கலாம்.

DIY Face Pack For Winter 5 Two Ingredient Face Packs For Dry Dull Skin

அதுவும் வெறும் இரண்டு பொருட்களைக் கொண்டு தயாரிக்கக்கூடிய ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி வந்தாலே, சருமத்தின் ஈரப்பதத்தைப் பராமரிக்கவும், வறட்சியைக் குறைக்கவும் முடியும். முக்கியமாக இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகள் தயாரிப்பதற்கு எளிமையாகவும், அதிக செலவின்றியும் இருக்கும். இப்போது குளிர்காலத்தில் சந்திக்கும் சரும வறட்சியைக் குறைக்க உதவும் இரண்டு பொருட்களைக் கொண்ட 5 எளிய ஃபேஸ் பேக்குகள் குறித்து காண்போம்.

1. தயிர் மற்றும் தேன் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

2. கற்றாழை மற்றும் கிளிசரின் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் கிளிசரினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

3. கடலை மாவு மற்றும் பால் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 3 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பாலை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

4. அரிசி மாவு மற்றும் தயிர் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

5. வாழைப்பழம் மற்றும் தேன் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Monday, November 16, 2026, 22:45 [IST]
Desktop Bottom Promotion