Latest Updates
-
செட்டிநாடு வெண்டைக்காய் பச்சடி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
1 கப் தயிரும், 10 வர மிளகாயும் இருந்தா இந்த ராஜஸ்தானி பூண்டு சட்னியை செய்யுங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
மாரடைப்பு வருவதற்கு முன்பே தென்படும் 7 எச்சரிக்கை அறிகுறிகள்! அலட்சியம் வேண்டாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
இந்தியாவின் 'உருளைக்கிழங்கு தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
நவம்பர் 22-ல் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த பருப்பு சட்னி செய்யுங்க.. வழக்கமாக சாப்பிடுறத விட அதிகமா சாப்பிடுவாங்க.. -
நவம்பர் 16, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைச்சதெல்லாம் நடக்கும் அதிர்ஷ்ட நாளாக இருக்குமாம் -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் ஜனவரி மாதம் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
10 வெண்டைக்காயும், 3 தக்காளியும் இருந்தா இப்படி குழம்பு வையுங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
உங்க பிறந்த தேதி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்
உலகின் மிகவும் விலையுயர்ந்த உப்பு எது தெரியுமா? இந்த உப்பின் விலை தெரிஞ்ச மயக்கமே போட்ருவீங்க...
'உப்பில்லா பண்டம் குப்பையில்லே' என்று கூறுவார்கள். ஏனெனில் என்ற உணவாக இருந்தாலும் அதில் உப்பு சேர்க்காமல் அதன் சுவை முழுமையடையாது. அனைத்து சமையலறைகளிலும் நிச்சயம் இருக்கும் ஒரு பொருள் என்றால் அது உப்புதான். நாம் பொதுவாக உப்பை 20 ரூபாய் முதல் 50 ரூபாய் கொடுத்து வாங்குவோம். ஆனால் நம் கற்பனைக்கும் எட்டாத விலையில் ஒரு சாதாரண உப்பு விற்கப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா?

பொதுவாக சமைலயறையில் ஆடம்பர பொருட்கள் என்று வரும்போது, குங்குமப்பூ, விலையுயர்ந்த காளான்கள் அல்லது கேவியர் போன்றவைதான் நம் நினைவுக்கு வரும். அனைத்து சமையலறைகளிலும் பொதுவாக இருக்கும் மிகச் சாதாரணப் பொருளான உப்பு, இந்த ஆடம்பர உணவு பட்டியலில் எப்போதும் இடம்பெறுவதில்லை. ஆனால், கொரியாவில் ஒரு வகை உப்பு உள்ளது. இந்த உப்பு மிகவும் அரிதானது, இதை தயாரிப்பது மிகவும் கடினமானது மற்றும் நீண்ட பாரம்பரியம் கொண்டது. இதன் விலை நம் ஒரு மாத பட்ஜெட்டை விட பலமடங்கு அதிகம். இந்த உப்பு கொரிய மூங்கில் உப்பு அல்லது 'ஜுக்யோம்' (Jukyeom) என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் உலகின் மிக விலையுயர்ந்த உப்பு என்று அழைக்கப்படுகிறது.
நெருப்பில் பிறந்த பாரம்பரியம்
இந்த மூங்கில் உப்பு, இமயமலை பிங்க் உப்பைப் போல அறுவடை செய்யப்படுவதோ அல்லது நாம் பயன்படுத்தும் உப்பைப் போல கடல் படுகைகளிலிருந்து எடுக்கப்படுவதோ இல்லை. மாறாக, இது 10 ஆம் நூற்றாண்டு வரை பழமையான, மிகுந்த சிரமத்துடன் செய்யப்படும் ஒரு செயல்முறையின் மூலம் தயாரிக்கப்படுகிறது. தடிமனான மூங்கில் தண்டுகளில் இயற்கையான கடல் உப்பு நிரப்பப்பட்டு, கனிமங்கள் நிறைந்த களிமண்ணால் பூசப்பட்டு, பின்னர் பைன் மர விறகு நெருப்பில் வாட்டப்படுகிறது. இந்த செயல்முறை, சில சமயங்களில் ஒன்பதாவது சுற்று வரை, மீண்டும் மீண்டும் வாட்டும் செயல்முறையுடன் தொடர்கிறது. ஒவ்வொரு சுழற்சியிலும், உப்பு ஒரு புதிய புகை நிறத்தைப் பெறுகிறது, சில நேரங்களில் ஊதா நிறத்தையும் அடைகிறது. ஒவ்வொரு சுழற்சியிலும், சாம்பல் நிற அசுத்தங்கள் நீக்கப்பட்டு, கனிமங்கள் சேர்க்கப்பட்டு, நிறம் மாற்றப்படுகிறது.
இந்த உப்பு ஏன் விலை உயர்ந்ததாக உள்ளது?
சந்தையில் கிடைக்கும் மற்ற உப்பு வகைகளை விட, இதன் விலை பல மடங்கு அதிகமாக இருக்கிறது? இதற்குக் காரணம், இந்த உப்பைத் தயாரிப்பதற்குத் தேவைப்படும் நீண்ட கால அவகாசமும், அதில் அடங்கியுள்ள நுணுக்கமும்தான். ஒன்பது முறை வறுக்கப்பட்டுத் தயாரிக்கப்படும் உப்பு, மிகவும் தூய்மையானதாகவும் மருத்துவக் குணம் கொண்டதாகவும் நம்பப்படுகிறது. இந்த உப்பின் விலை ஒரு கிலோவிற்கு நூற்றுக்கணக்கான டாலர்கள் வரை இருக்கலாம். இந்தியாவில் இந்த உப்பின் விலை ஒரு கிலோவிற்கு சுமார் 30,000 ரூபாயாகவும், சர்வதேச அளவில் ஒரு கிலோவிற்கு சுமார் 347.37 டாலராகவும் உள்ளது. நீண்ட நேரம் வறுக்கப்படுதல், கடினமான செயல்முறை மற்றும் அதிக கால அவகாசம் தேவைப்படுதல் ஆகியவற்றால், வெள்ளை உப்பு அல்லது இமயமலை உப்பைக் காட்டிலும், இதில் அதிக அளவிலான மருத்துவக் குணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மருத்துவ குணங்கள்
கொரிய மருத்துவத்தில் இந்த மூங்கில் உப்பு பல நூற்றாண்டு காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், இதன் பயன்பாட்டிற்குப் போதிய அறிவியல் ஆதாரங்கள் இல்லை. மூங்கில் உப்பு என்பது வெறும் சுவையூட்டி மட்டுமல்ல, அது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு கருவியாகவும் கருதப்படுகிறது. இந்த உப்பு உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுவதாகவும், கல்லீரலின் செயல்பாட்டிற்கு நன்மை பயப்பதாகவும் கருதப்படுகிறது. அது மட்டுமின்றி இந்த உப்பு களிமண் மற்றும் மூங்கிலைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இவற்றில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகிய தாதுக்கள் அதிக அளவில் உள்ளன. இந்த உப்பு செரிமான ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதாகவும் நம்பப்படுகிறது.
இந்த உப்பை எப்படி பயன்படுத்துவது?
பொதுவாகப் பயன்படுத்தப்படும் உப்புகளைப் போல, இந்த மூங்கில் உப்பை அன்றாடச் சமையலில் அதிக அளவில் பயன்படுத்தக்கூடாது. மாறாக, இது மிகச் சிறிய அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது. உணவை சமைத்து முடிக்கும் தருணத்தில் ஒரு சிட்டிகை தூவுவது போலவோ அல்லது சில குறிப்பிட்ட இயற்கை மருத்துவ முறைகளில் மருந்தாகவோ இது பயன்படுத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications

