நவம்பர் 22-ல் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது!

Venus Make Malavya Rajyog 2026: வேத ஜோதிடத்தில் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். தற்போது சுக்கிரன் நீச்சமடையும் ராசியான கன்னி ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து பயணித்து வருகிறார். இந்நிலையில் நவம்பர் 22 ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் மீண்டும் நுழையவுள்ளார்.

Venus Make Malavya Rajyog 2026 These Zodiac Signs Income Will Increase

சொந்த ராசிக்குள் சுக்கிரன் செல்வதால், மிகவும் மங்களகரமான மற்றும் பஞ்ச மகாபுருஷ ராஜயோகங்களுள் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. அதே வேளையில் புதனும் துலாம் ராசியில் இருப்பதால், இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகமும் உருவாகவுள்ளது. இப்படி உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அதில் சில ராசிக்காரர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு, புதிய வேலை வாய்ப்புகள், தொழில் விரிவாக்கம் போன்றவற்றை பெறுவதற்கான வாய்ப்புள்ளது. அதுவும் இந்த ராஜயோகத்தின் தாக்கம் புத்தாண்டு முதல் இருப்பதால், 2027 புத்தாண்டிற்குள் சில ராசிக்காரர்களின் வாழ்க்கை செழிப்படைய போகிறது. இப்போது துலாம் ராசிக்கு சுக்கிரன் செல்வதால் உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். சிலருக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்களும் தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். நீண்ட காலமாக வேலை கிடைக்காமல் இருப்பவர்களுக்கு சுக்கிரனின் அருளால் நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்புக்கள் கிடைக்கலாம். முக்கியமாக திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி

கன்னி ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை செழிப்பாக இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாக சேமித்து வைத்து சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். சிலருக்கு புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட கால இலக்குகளை சுக்கிரனின் அருளால் இக்காலத்தில் அடைவீர்கள். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். இப்படி அதிகரிக்கும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

துலாம்

துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாகவும், சாதகமாகவும் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் அரியாதையும் அதிகரிக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைக்ள வெற்றிகரமாக முடிவடையும். முக்கியமாக பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, November 16, 2026, 10:10 [IST]
Desktop Bottom Promotion