10 வெண்டைக்காயும், 3 தக்காளியும் இருந்தா இப்படி குழம்பு வையுங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்

Posted By:

Vendakkai Thakkali Kuzhambu Recipe in Tamil: தினமும் சாம்பார், ரசம் வைத்து போரடித்து விட்டதா? மதிய நேரத்தில் சிம்பிளாக சமையலை முடிக்க விரும்புகிறீர்களா? அதே சமயம் நல்ல சுவையான மற்றும் வீடே மணக்கும் சுவையான குழம்பை சாதத்திற்கு செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வெண்டைக்காயும், தக்காளியும் உள்ளதா? அப்படியானால் அவற்றை வைத்து ஒரு சுவையான வெண்டைக்காய் தக்காளி குழம்பை செய்யுங்கள்.

Vendakkai Thakkali Kuzhambu Recipe How to Make at Home in Tamil

இந்த வெண்டைக்காய் தக்காளி குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது அதன் சுவை வேற லெவலில் இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். பேச்சுலர்கள் கூட இந்த குழம்பை செய்து சாப்பிடலாம். இந்த குழம்பு சுண்ட சுண்ட அதன் சுவை மேலும் அதிகரிக்கும். எனவே இந்த குழம்பை இரண்டு, மூன்று நாட்கள் வைத்துக் கூட சாப்பிடலாம்.

உங்களுக்கு சுவையான வெண்டைக்காய் தக்காளி குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் தக்காளி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- வெண்டைக்காய் - 10 (நறுக்கியது)
- தக்காளி - 3
- பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது)
- கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மல்லித் தூள் - 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
- சோம்புத் தூள் - 1 ஸ்பூன்

அரைக்கத் தேவையானவை:

- தேங்காய் - அரை கப்
- சின்ன வெங்காயம் - 5
- பூண்டு - 3 பல்

தாளிக்க:

- தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - ½ ஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு

செய்முறை:

- ஒரு மிக்சி ஜாரில் துருவிய தேங்காய், சின்ன வெங்காயம் மற்றும் உரித்த பூண்டை சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

- ஒரு அகலமான பாத்திரத்தில் தக்காளியை எடுத்துக் கொள்ளவும்.

- அதன்பின் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் சோம்புத் தூளை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும்.

- தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். கைகளால் தக்காளிகளை நசுக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

- பின்னர் நறுக்கிய வெண்டைக்காயைச் சேர்த்து, அடுப்பில் வைத்து அது நன்கு வேகும் வரை சமைக்கவும்.

- அதன்பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

- குழம்பு நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

- ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இதை குழம்பின் மேல் ஊற்றி நன்கு கலக்கவும்.

- அவ்வளவுதான் சுவையான வெண்டைக்காய் தக்காளி குழம்பு ரெடி. இதை சூடான சாதத்துடன் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Sunday, November 15, 2026, 21:56 [IST]
Desktop Bottom Promotion