கண்ணாடி போன்று பளபளப்பான முகம் வேண்டுமா? அப்ப கேரட்டை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..

DIY Carrot Face Packs: முகத்தை இயற்கையான முறையில் பொலிவாக்க நினைப்பவர்களுக்கு கேரட் மிகச்சிறந்த தேர்வாகும். பொதுவாக கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் கேரட்டில், பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் சருமத்தையும் அழகாக வைத்துக் கொள்ள உதவி புரிகின்றன. முக்கியமாக சருமத்தின் இயற்கையான பொலிவைப் பராமரிப்பதில் கேரட் முக்கியப் பங்கை வகிக்கிறது.

Top 5 DIY Carrot Face Packs For Healthy And Glowing Skin

அதற்கு கேரட்டை தினமும் சாப்பிடுவது மட்டுமின்றி, அவற்றைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். அதுவும் தேன், தயிர், கற்றாழை, கடலை மாவு மற்றும் பால் போன்ற பொருட்களைச் சேர்த்துப் பயன்படுத்தும் போது சருமம் ஈரப்பதமாகவும், பொலிவோடும் இருக்கும். இப்போது ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற உதவும் கேரட் ஃபேஸ் பேக்குகள் குறித்து காண்போம்.

1. கேரட் மற்றும் தேன் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் கேரட் விழுதை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

2. கேரட் மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் கேரட் விழுதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது கடலை மாவை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

3. கேரட் மற்றும் வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு கேரட் மற்றும் வெள்ளரிக்காயை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

4. கேரட் மற்றும் முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பாலை எடுத்துக் கொண்டு, அத்துடன் கேரட் விழுது மற்றும் முல்தானி மெட்டியை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

5. கேரட் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்

* இந்த ஃபேஸ் பேக்கிற்கு கேரட்டை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் தயிரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் சில துளிகள் கிளிசரினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Saturday, November 14, 2026, 23:16 [IST]
Desktop Bottom Promotion