சுரைக்காய் இருந்தா இப்படி ஒரு பொடி அரைச்சு கூட்டு செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்..

Posted By:

Suraikkai Paruppu Kootu Recipe In Tamil: உங்கள் வீட்டில் சுரைக்காய் உள்ளதா? ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிடமாட்டர்களா? அப்படியானால் அவர்களுக்கு சுரைக்காயைக் கொண்டு பருப்பு கூட்டு செய்து கொடுங்கள். இப்படி பருப்பு கூட்டு செய்தால், அது சாதத்துக்கு மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். அதுவும் இந்த கூட்டில் ஒரு பொடியை தயாரித்து அரைத்து சேர்ப்பதால், கூட்டின் சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும்.

Suraikkai Paruppu Kootu How To Make Bottle Gourd Dal Kootu

உங்களுக்கு இந்த சுரைக்காய் பருப்பு கூட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் பருப்பு கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
* பூண்டு - 2 பல்
* பாசிப்பருப்பு - 50 கிராம் (நீரில் ஊற வைத்தது)
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சுரைக்காய் - 1 (தோல் நீக்கி பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
* பொடித்த பொருட்கள்
* கொத்தமல்லி - சிறிது
* நெய் - 1 ஸ்பூன்

வறுத்து பொடிப்பதற்கு...

* சீரகம் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - 3 இலைகள்
* வரமிளகாய் - 3
* வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் பாசிப்பருப்பை நீரில் 2-3 முறை கழுவிவிட்டு, பின் நீரை ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்த பாசிப்பருப்பை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய சுரைக்காயை சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய், வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியின் சூட்டில் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி, அதையும் வறுத்த பொருட்களுடன் சேர்த்து குளிர வைத்து, மிக்சர் ஜாரில் அனைத்தையும் போட்டு கொரகொரவென்று அரைத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.'
* பின்னர் குக்கரைத் திறந்து, பருப்பையும், காயையும் நன்கு மசித்து விட்டு கிளறி, மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்டிபத்ததும், அதில் பொடித்த வேர்க்கடலை பொடி மற்றும் நறுக்கிய கொத்தமல்லி , இதோடு 1 ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான சுரைக்காய் பருப்பு கூட்டு தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, November 14, 2026, 14:25 [IST]
Desktop Bottom Promotion