Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க அவங்க செய்த சத்தியத்தை எப்போதும் காப்பாற்ற மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாகர்கோவில் கருப்பட்டி பணியாரம் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க... -
அதிக பனியால் சருமம் சொரசொரன்னு இருக்குதா? அப்ப இந்த ஸ்க்ரப்பை வாரம் 1 முறை யூஸ் பண்ணுங்க.. -
விடாப்பிடியான காபி மற்றும் டீ கறைகளை நீக்க உதவும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க - துணி புதுசு போல மாறிரும் -
இந்த 5 ராசிக்காரங்க பணம் சம்பாதிப்பதில் மட்டுமல்ல... அதை பல மடங்கு பெருக்குவதிலும் வல்லவர்களாம்! -
இந்தியாவின் 'வாழை தலைநகரம்' என்று அழைக்கப்படும் மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கருணைக்கிழங்கை இந்த பக்குவத்தில் வறுவல் செய்யுங்க.. மீன் வறுவல் மாதிரி டேஸ்ட்டா இருக்கும்.. -
2 ஸ்பூன் துவரம்பருப்பும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த கொங்கு காட்டா குழம்பை செய்யுங்க - செமையா இருக்கும் -
புரோஸ்டேட் வீக்கமும்.. புற்றுநோயும்.. ஆண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்! -
முகலாய பேரரசர் அக்பரின் ஒரேயொரு இந்து மருமகன் யார் தெரியுமா? அவர்கள் திருமணம் ஏன் நடந்தது தெரியுமா?
உங்கள் இரத்தப் பிரிவு உங்கள் குணங்களைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?
Japanese Blood Type Personality Test: ஒருவருடைய இரத்தப் பிரிவை வைத்து அவர்களின் குணம், பழக்கவழக்கங்கள், சிந்திக்கும் விதம் போன்றவற்றை கணிக்க முடியுமா? ஜப்பானின் 'கெட்சுஎகி கட்டா' (Ketsueki gata) எனும் பிரபலமான நம்பிக்கையின் படி, ஒருவரது இரத்த பிரிவுகளைக் கொண்டு சுபாவம் மற்றும் பழக்கவழக்கங்கள் முதல் அனைத்தையும் வெளிப்படுத்துவதாக கூறுகிறது. 1930-களில் பேராசிரியர் டோகேஜி ஃபுருகாவா இரத்தப் பிரிவுகளுக்கும், மனிதர்களின் குணநலன்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்தார். அதன்பிறகு இந்த நம்பிக்கை ஜப்பானில் மிகவும் பிரபலமடைந்தது.

இன்றும்கூட ஜப்பானில் சிலர் நட்பு, காதல் உறவு மற்றும் திருமணப் பொருத்தம் போன்றவற்றைப் பற்றிச் சிந்திக்கும் போது இரத்தப் பிரிவுகளையும் கவனத்தில் கொள்கிறார்கள். சிலர் வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்யும்போதுகூட இந்த நம்பிக்கையைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
பொதுவாக மனிதர்களின் ரத்தம் A, B, O மற்றும் AB என நான்கு முக்கியப் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது. சிவப்பு ரத்த அணுக்களின் மேற்பரப்பில் காணப்படும் ஆன்டிஜென்களின் அடிப்படையில் தான் இந்தப் இரத்தப் பிரிவுகள் வேறுபடுகின்றன. இப்போது ஒவ்வொரு இரத்தப் பிரிவினருக்கும் சொல்லப்படும் குணநலன்கள் என்ன என்பதை காண்போம்.
O இரத்தப் பிரிவு
O இரத்தப் பிரிவை சேர்ந்தவர்கள் மற்றவர்களுடன் எளிதில் பழகக்கூடியவர்களாகவும், மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுபவர்களாகவும் இருப்பார்களாம். புதிய விஷயங்களை தொடங்குவதில் அதிக ஆர்வம் காட்டும் இவர்கள், படைப்பாற்றல் மிக்கவர்களாகவும், அனைவரின் கவனத்தையும் ஈர்க்க விரும்புபவர்களாகவும் இருப்பார்கள்.
எங்கு சென்றாலும் தங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்குவார்கள். இயல்பாகவே தலைமைப் பண்பு, தன்னம்பிக்கை, துணிச்சல் மற்றும் சுயமாக முடிவெடுக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இயல்பாகவே தலைமைப் பண்பு, தன்னம்பிக்கை, துணிச்சல் மற்றும் சுயமாக முடிவெடுக்கும் திறன் கொண்டவர்களாகவும் இவர்கள் விவரிக்கப்படுகிறார்கள். சவாலான சூழல்களிலும் மன அழுத்தத்தைச் சமாளிக்கும் திறன் இவர்களுக்கு அதிகம் இருக்குமாம். அமைதியான சூழலை விரும்புவதுடன், உடற்பயிற்சி மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையிலும் ஆர்வம் காட்டுவார்களாம்.
A இரத்தப் பிரிவு
A இரத்தப் பிரிவை சேர்ந்தவர்கள் எதையும் மிகவும் கவனமாகவும், திட்டமிட்டும் செய்யக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். ஒவ்வொரு விஷயத்தையும் துல்லியமாக ஆராய்ந்து, சிறிய குறைகளைக் கூட சரிசெய்ய முயற்சிப்பது இவர்களின் முக்கிய குணமாகச் சொல்லப்படுகிறது.
எந்த வேலையாக இருந்தாலும் முழுமையாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் அதிகமாக இருக்கும். இதனால் பொறுமை, ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சியுடன் செயல்படுவார்கள். இவர்கள் மன அழுத்தத்தை அதிகமாக எடுத்துக்கொண்டால் உடல்நலம் பாதிக்கப்படலாம். எனவே, இவர்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
B இரத்தப் பிரிவு
B இரத்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் A இரத்தப் பிரிவினரைப் போல சிந்தித்துச் செயல்படுபவர்களாகவும், O இரத்தப் பிரிவினரைப் போல லட்சியத்தை நோக்கி முன்னேறுபவர்களாகவும் இருப்பார்கள். எதையும் தொடங்கினாலும் அதை முழுமையாக முடிக்கும் வரை விடாமுயற்சியுடன் செயல்படுவார்கள். தன்னம்பிக்கை, நேர்மறை எண்ணம் மற்றும் சுதந்திரமாகச் செயல்படும் குணம் இவர்களின் தனிச்சிறப்பு.
தங்களுக்கென ஒரு தனி பாதையை உருவாக்கிக் கொள்ள விரும்பும் இவர்கள், மற்றவர்களின் உணர்வுகளையும் கருத்துகளையும் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். சில நேரங்களில் மனநிலை மாறுபட்டாலும், இயல்பான ஈர்ப்பு மற்றும் பழகும் திறனால் மற்றவர்களிடம் எளிதில் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள்.
AB இரத்தப் பிரிவு
AB இரத்த வகை கொண்டவர்கள் பொதுவாக வசீகரமானவர்களாகவும், அனைவரிடமும் எளிதில் பழகக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். இவர்களிடம் நேர்மறையான பல குணங்கள் இருக்கும். சில நேரங்களில் தைரியமாகவும், சில நேரங்களில் கூச்ச சுபாவத்துடனும் இருப்பார்கள்.
புத்திசாலித்தனம், அக்கறை, உதவும் மனப்பான்மை ஆகியவை இவர்களின் சிறப்புகள் ஆகும். இவர்களால் மன அழுத்தத்தை எளிதில் எதிர்கொள்ள முடியாததால், அதைக் கட்டுப்படுத்துவது அவசியம். மற்றவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க விரும்பாமல், தனக்கென ஒரு வழியில் வாழ்வதையே விரும்புவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
