Latest Updates
-
கருணைக்கிழங்கை இந்த பக்குவத்தில் வறுவல் செய்யுங்க.. மீன் வறுவல் மாதிரி டேஸ்ட்டா இருக்கும்.. -
2 ஸ்பூன் துவரம்பருப்பும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த கொங்கு காட்டா குழம்பை செய்யுங்க - செமையா இருக்கும் -
புரோஸ்டேட் வீக்கமும்.. புற்றுநோயும்.. ஆண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்! -
முகலாய பேரரசர் அக்பரின் ஒரேயொரு இந்து மருமகன் யார் தெரியுமா? அவர்கள் திருமணம் ஏன் நடந்தது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து ராகுவால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிக்காரர்கள் இவங்க தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
இட்லிக்கு இப்படி ஒருடைம் தண்ணி சட்னி செய்யுங்க.. எல்லாரும் ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
நவம்பர் 13, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் அடுத்த 40 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சனிபகவானின் ஆசியால் டிசம்பர் மாதம் முதல் 2027 வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
முட்டைக்கோஸ் இருந்தா இப்படி குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்..
இந்தியாவின் 'வாழை தலைநகரம்' என்று அழைக்கப்படும் மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா?
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் உலகம் முழுவதும் அதிகளவு நுகரப்படும் பழங்களில் ஒன்றாகும். பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் அனைத்து பருவக்காலங்களிலும் கிடைக்கக்கூடியதாகும். இந்தியா உலகின் மிகப்பெரிய வாழை உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இந்தியாவின் விவசாயப் பொருளாதாரம் மற்றும் உணவு விநியோகத்தில் வாழைபழம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவின் அனைத்து பிராந்தியங்களிலும் வாழை பயிரிடப்பட்டாலும் ஒரு நகரம் மட்டும் இந்தியாவின் 'வாழைத் தலைநகரம்' என்று அழைக்கப்படுகிறது. அது எந்த பகுத்து என்று உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவின் 'வாழை தலைநகரம்'
இந்தியாவின் 'வாழை தலைநகரம்' என்ற பெருமை மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்திற்கு உரியது. இந்த மாவட்டம் மிகச்சிறந்த வாழை உற்பத்தி, சாதகமான தட்பவெப்ப நிலைகள், வளமான மண் மற்றும் நவீன விவசாய முறைகளுக்காக தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. அதிக அளவிலான சாகுபடி மற்றும் இந்தியாவின் வாழை உற்பத்தியில் அதன் பங்களிப்பு ஆகியவற்றால், ஜல்கான் இந்தியாவின் முதன்மையான வாழை சாகுபடி மையமாகத் திகழ்கிறது.
ஜல்கான் ஏன் 'வாழை தலைநகரம்' என்று அழைக்கப்படுகிறது?
ஜல்கான், மிக அதிக அளவிலான வாழை உற்பத்தி மற்றும் வியாபாரரீதியான வாழை சாகுபடியில் அதன் ஆதிக்கம் காரணமாக, 'இந்தியாவின் வாழைத் தலைநகரம்' என்று அழைக்கப்படுகிறது. மகாராஷ்டிராவின் மொத்த வாழை சாகுபடி பரப்பளவில் சுமார் 69 சதவீதத்தையும், இந்தியாவின் ஒட்டுமொத்த வாழை உற்பத்தியில் சுமார் 16 சதவீதத்தையும் இந்த மாவட்டம் அளிக்கிறது. இதுவே, இந்தியாவின் மிக முக்கியமான வாழை உற்பத்திப் பகுதிகளில் ஒன்றாக இதனை மாற்றியுள்ளது. வாழை சாகுபடியே ஜல்கானின் விவசாயப் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக விளங்குகிறது. இது ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கும், போக்குவரத்து, பேக்கேஜிங் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்குகிறது.
அதிகளவு சாகுபடிக்கு என்ன காரணம்?
திசு வளர்ப்பு முறை, சொட்டு நீர் பாசனம் மற்றும் அறிவியல் பூர்வமான பயிர் மேலாண்மை போன்ற நவீன விவசாய நடைமுறைகளை பெருமளவில் பின்பற்றியதே இந்த மாவட்டத்தின் வெற்றிக்குக் காரணமாகும். இத்தகைய முறைகள், விளைச்சலையும் பழங்களின் தரத்தையும் மேம்படுத்தியுள்ளன.
இந்த நகரம் எங்கு அமைந்துள்ளது?
ஜல்கான் மாவட்டம், இந்தியாவின் மேற்குப் பகுதியில், மகாராஷ்டிர மாநிலத்தின் வடக்கே அமைந்துள்ளது. இது வடக்கே சத்புடா மலைத்தொடருக்கும், தெற்கே அஜந்தா மலைத்தொடருக்கும் இடையில் அமைந்துள்ளதால், இந்த மாவட்டம் தனித்துவமான புவியியல் அமைப்பைப் பெற்றுள்ளது. இதன் சுற்றுசூழல், தோட்டக்கலை மற்றும் பெரிய அளவிலான பழச் சாகுபடிக்கு ஏற்ற சூழலை வழங்குகிறது. இம்மாவட்டத்தின் விவசாய நிலப்பரப்பில், வளமான விளைநிலங்கள் முழுவதும் பரந்து விரிந்துள்ள வாழைத் தோட்டங்களே முதன்மையாகக் காணப்படுகின்றன. ஜல்கான் மாவட்டம் சாலை மற்றும் இரயில் வலையமைப்புகள் மூலம் முக்கியச் சந்தைகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இங்கு விளையும் வாழைகளை இந்தியா முழுவதும் விநியோகம் செய்ய உதவுகிறது.
என்னென்ன வகை வாழைகள் சாகுபடி செய்யப்படுகிறது?
ஜல்கான் மாவட்டம், உயர்தரமான பல வாழை ரகங்களை உற்பத்தி செய்வதற்குப் பெயர் பெற்றது. இது அப்பகுதியின் வேளாண் முக்கியத்துவத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்குகிறது. இங்கு அதிகம் பயிரிடப்படும் ரகங்களில் 'பஸ்ராய்' வாழை முதன்மையானது. மார்க்கெட்டில் இந்த வகை வாழைக்கு வரவேற்பு இருப்பதாலும், சுவை, நயமான அமைப்பு மற்றும் நீண்ட காலம் கெடாமல் இருக்கும் தன்மை ஆகியவற்றைக் கொண்டிருப்பதாலும், இது விவசாயிகள் மற்றும் நுகர்வோர் என இரு தரப்பினராலும் பெரிதும் விரும்பப்படுகிறது. மேலும், இம்மாவட்டத்தில் 'ஸ்ரீமந்தி' ரக வாழையும் பயிரிடப்படுகிறது; இது உள்ளூர் வாழை உற்பத்தியை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
புவியியல் குறியீடு (GI Tag)
ஜல்கான் வாழைப்பழங்களுக்கு 2016-ஆம் ஆண்டில் புவியியல் குறியீடு வழங்கப்பட்டது. இது, அந்த வாழைப்பழங்களின் தனித்துவமான தரம், பயிரிடும் முறைகள் மற்றும் அவை விளைந்த புவியியல் இருப்பிடம் ஆகியவற்றை அங்கீகரிக்கிறது. புவியியல் குறியீடு ஒரு சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்குவதோடு, அந்தப் பொருள் தான் உருவான இடத்திற்கே உரிய சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.



Click it and Unblock the Notifications

