சுக்கிர பெயர்ச்சியால் அடுத்த 40 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! உங்க ராசி இதுல இருக்கா?

Venus Transit In Libra 2026: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இந்த சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் ஒருவரின் நிதி நிலை மற்றும் உறவுகளில் தாக்கம் தெரியும். தற்போது சுக்கிரன் கன்னி ராசியில் உள்ளார். இந்நிலையில் இந்த சுக்கிரன் நவம்பர் 22 ஆம் தேதி துலாம் ராசியில் நுழைந்து பயணிக்கவுள்ளார். துலாம் ராசி சுக்கிரனின் சொந்த ராசி என்பதால், இந்த பெயர்ச்சி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Venus Transit In Libra 2026 These Zodiac Signs Will Be Lucky For The Next 40 Days

சுக்கிரன் நவம்பர் 22 ஆம் தேதி துலாம் ராசியில் நுழைந்து, அந்த ராசியில் 2027 ஜனவரி 01 ஆம் தேதி வரை இருப்பார். சுக்கிரனின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறவுள்ளனர். இப்போது சுக்கிர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

சிம்மம்

சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பல வழிகளில் நன்மைகளைப் பெறுவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடினமான வேலைகளை முடிப்பதற்கான தைரியம் வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

அலுவலகத்தில் உங்களின் திறமைகளை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களின் செயல்திறனைக் கண்டு மகிழ்வார்கள். சமூகத்தில் உங்களின் அந்தஸ்தும், கௌரவமும் அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் நிதி நிலைமை வலுவடையும். உடன்பிறந்தவர்களுடனான உறவு வலுவடையும். பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை மேம்படும். வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வழிகள் திறக்கும். ஆடம்பர வாழ்க்கையை வாழ்வீர்கள். தேவைகளுக்கு ஏற்ப செலவழிக்க வாய்ப்பு கிடைக்கும்.

வியாபாரம் செய்பவர்களுக்கு பொற்காலமாக இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். காதல் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் குறையும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். இக்காலத்தில் அழகான நினைவுகளை உருவாக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

கடகம்

கடக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க வேண்டுமென்ற ஆசை நிறைவேறக்கூடும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோருடனான உறவு மேம்படும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பு பாராட்டப்படலாம். இதன் விளைவாக உங்களின் நிலையும் வலுவடையலாம். தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத அளவில் நிதி நன்மைகள் கிடைக்கும். மொத்தத்தில் குடும்ப வாழ்க்கையும், தொழில் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, November 12, 2026, 23:41 [IST]
Desktop Bottom Promotion