முடி கொட்டுதா? முடியின் வளர்ச்சியை அதிகரிக்க.. விளக்கெண்ணெயை வெச்சு இப்படி ஹேர் மாஸ்க் போடுங்க..

Castor Oil Hair Mask In Tamil: ஒவ்வொருவருக்குமே நல்ல அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடி வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் தற்போதைய மன அழுத்தம் நிறைந்த பரபரப்பான வாழ்க்கை, ஊட்டச்சத்துக் குறைபாடு, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற பல காரணங்களால் முடி உதிர்தல், முடி மெலிதல் மற்றும் முடி வறட்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இப்படி சந்திக்கும் முடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண பலரும் விலையுயர்ந்த முடி பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இவ்வளவு பணம் செலவழித்து தான் தலைமுடிக்கு பராமரிப்பு கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம் வீட்டிலேயே கிடைக்கும் இயற்கை பொருட்களைக் கொண்டு தலைமுடியைப் பராமரிக்கலாம்.

Top 5 Castor Oil Hair Mask Recipes For Hair Growth At Home

அதில் பாரம்பரியமாக தலைமுடி பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள் தான் விளக்கெண்ணெய். இந்த எண்ணெயில் உள்ள ரிசினோலிக் அமிலம் மற்றும் கொழுப்பு அமிலங்கள் ஸ்கால்ப்பை ஈரப்பதத்துடனும், தலைமுடியை மென்மையாகவும் வைத்திருக்க உதவுகின்றன. அதுவும் இந்த விளக்கெண்ணெயுடன் ஒருசில பொருட்களை சேர்த்து ஹேர் மாஸ்க்காக பயன்படுத்தும் போது, தலைமுடியின் ஆரோக்கியம் மேம்பட்டு முடி வளர்ச்சிக்கு உதவி புரியும். இப்போது வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கக்கூடிய டாப் 5 விளக்கெண்ணெய் ஹேர் மாஸ்க்குகளைக் காண்போம்.

1. விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் மாஸ்க்

* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, வெதுவெதுப்பாக சூடேற்ற வேண்டும்.
* பின்பு அதை ஸ்கால்ப்பில் படும்படி தடவி நன்கு 5 நிமிடம் மசாஜ் செய்து, 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

2. விளக்கெண்ணெய் மற்றும் கற்றாழை மாஸ்க்

* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயை எடுத்துக் கொண்டு, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

3. விளக்கெண்ணெய் மற்றும் வெங்காய் ஜூஸ் மாஸ்க்

* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து மைல்டு ஷாம்பு கொண்டு தலைமுடியை அலச வேண்டும்.

4. விளக்கெண்ணெய் மற்றும் முட்டை மாஸ்க்

* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை தலைமுடியில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

5. விளக்கெண்ணெய் மற்றும் வெந்தய ஹேர் மாஸ்க்

* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் ஊற வைத்து அரைத்த வெந்தய விழுதை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஸ்கால்ப் மற்றும் முடி முழுவதும் தடவி 40 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* இறுதியாக மைல்டு ஷாம்பு கொண்டு தலைமுடியை அலச வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Thursday, November 12, 2026, 18:50 [IST]
Desktop Bottom Promotion