Latest Updates
-
மயில்கள் விஷப்பாம்புகளை சாப்பிட்டாலும் ஏன் உயிரிழப்பதில்லை? அதில் உள்ள ரகசியம் என்ன தெரியுமா? -
1 கப் கோதுமை ரவை இருந்தா.. இப்படி கிச்சடி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்... -
நவம்பர் 12, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணக்கஷ்டம் தீரும் நாளாக இருக்குமாம் -
சூரியன் அனுஷம் நட்சத்திரத்திற்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
செவ்வாய் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
கத்திரிக்காயை இந்த மாதிரி துவையல் செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
வரகரிசியில் இப்படி தக்காளி சாதம் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பர்ப்யூம் அடிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன தெரியுமா? அடுத்தமுறை இந்த தவறை செய்யாதீங்க -
இந்த 5 ராசிக்காரங்க பிரேக் அப் ஆனாலும் Ex-ஐ விடமாட்டாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
திடீர் அதிர்ஷ்டத்தால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டமுள்ள 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்.. சனியின் மீது விழும் செவ்வாயின் 8-ம் பார்வை.. 12 ராசிக்கும் எப்படி இருக்கும்
Mars Transit In Leo 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல், தன்னம்பிக்கை ஆகியவற்றின் காரணியாவார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய் தற்போது கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் நவம்பர் 12 ஆம் தேதி செவ்வாய் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.
இந்த சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார். இந்த சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்வது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் செவ்வாய் சிம்ம ராசியில் நுழையும் போது, அந்த ராசியில் குரு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் இருக்கும். இதனால் சிம்ம ராசியில் செவ்வாய், குரு மற்றும் கேதுவுடன் சேர்ந்து பயணிப்பார்.

முக்கியமாக செவ்வாயின் 8 ஆம் பார்வை சனியின் மீது விழும். இப்படியான கிரகங்களின் நிலையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கும். இப்போது செவ்வாய் சிம்ம ராசிக்கு செல்வதால் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய விஷயங்களை கற்று கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் முதலீடுகளை செய்யும் போது அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு நிதி முடிவுகளை எடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வீடு, வாகனம் மற்றும் சொத்து தொடர்பான விஷயங்கள் முக்கியமானதாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வீட்டு வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும் வாய்ப்புள்ளது. இருந்தாலும் குடும்பத்தில் பிரச்சனைகள் வரக்கூடாதெனில் உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரகமாக முடிவடையும்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். வருமானம் மற்றும் சேமிப்புக்கு இடையில் சமநிலையை பராமரிக்க வேண்டும். பேசும் போது வார்த்தைகளை பார்த்து பயன்படுத்த வேண்டும். கோபத்தில் எந்த முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உறவில் விரிசல் ஏற்பட்டுவிடும்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தலைமைத்துவ குணமும், நம்பிக்கையும் அதிகரிக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். இருப்பினும் இக்காலத்தில் ஈகோ, கோபம் மற்றும் அவசர முடிவுகளை எடுக்கும் பழக்கம் ஆகியவை சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
கன்னி
கன்னி ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் செலவுகள் அதிகரிக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட தூர பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். இக்காலத்தில் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து நிதி திட்டமிடலில் கவனம் செலுத்தினால் நிதி நிலைமை வலுவடையும்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கலாம். பழைய நட்புகளால் நல்ல நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புகள் இக்காலத்தில் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக முக்கியமானதாக இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இருந்தாலும் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக இக்காலத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்தினால் நல்ல பலனைப் பெறலாம்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சொத்து தொடர்பான தகராறுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. பண பரிவர்த்தனைகளை செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இக்காலத்தில் எந்த ஒரு ஆபத்தான முதலீடுகளையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சிறு சிறு விஷயங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். எந்த ஒரு முக்கியமான முடிவை எடுக்கும் முன்பும், வாழ்க்கைத் துணையுடன் கலந்தாலோசித்து, பின் எடுக்க வேண்டும்.
மீனம்
மீன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் வேலை மற்றும் போட்டி தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக எதிரிகளை வெல்வதற்கான தன்னம்பிக்கையும், தைரியமும் மனதில் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
