இந்த 5 ராசிக்காரங்க பிரேக் அப் ஆனாலும் Ex-ஐ விடமாட்டாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா?

Zodiac Signs After Breakup: ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணாதிசயங்கள், காதல் அணுகுமுறைகள் மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதங்கள் உள்ளன. குறிப்பாக, சில ராசிக்காரர்கள் காதலில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும், பழைய நினைவுகளை எளிதில் மறக்க முடியாதவர்களாகவும் இருப்பார்கள். இதனால், காதல் முறிந்த பிறகும் தங்களின் முன்னாள் காதலரைப் பற்றிய ஆர்வம் அவர்களுக்கு தொடர்ந்து இருக்கலாம்.

5 Zodiac Signs Who Can t Stop Checking On Their Ex Even After Breakup

இதன் விளைவாக அந்த ராசிக்காரர்கள் காதல் முறிவு ஏற்பட்டாலும், முன்னாள் காதலரின் நினைவுகளை மற்ற முடியாமல், அவர்களின் சமூக வலைத்தளப் பக்கங்களை அடிக்கடி பார்ப்பது, புதிய புகைப்படங்கள் மற்றும் ஸ்டேட்டஸ்களைச் சரிபார்ப்பது, தற்போது யாருடன் பழகுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவார்கள். முக்கியமாக அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை ரகசியமாக கவனித்து வருவார்கள். இப்போது அப்படி காதல் பிரிவுக்குப் பிறகும் தங்களின் முன்னாள் காதலரை ரகசியமாகக் கண்காணிக்கும் 5 ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பளிக்கும் குணம் கொண்டவர்கள். இதனால் முன்னாள் காதலரைப் பற்றித் தொடர்ந்து தெரிந்துகொள்ள முயற்சி செய்வார்கள். மீண்டும் இணைந்து, முன்பு நடந்த தவறுகளைச் சரிசெய்து உறவைத் தொடர வேண்டும் என்ற எண்ணமும் இவர்களுக்கு இருக்கலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களால் பழைய நினைவுகளையும் உணர்ச்சிப்பூர்வமான பிணைப்புகளையும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. காதல் உறவு முடிந்த பிறகும் முன்னாள் காதலர் மீதான பாசம் அவர்களுக்குள் நீடிக்கலாம். இதனால் முன்னாள் காதலரின் நண்பர்களிடம் அவர்களைப் பற்றிக் கேட்பது, அவர்கள் அடிக்கடி செல்லும் இடங்களுக்குச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் கனவுலகில் வாழ்பவர்கள் என்றும், காதலில் அதிக ரொமான்டிக் குணம் கொண்டவர்கள். சிறிய விஷயங்களைக்கூட மனதில் வைத்துக்கொண்டு நினைவுகூரும் பழக்கம் இவர்களுக்கு உண்டு. மீன ராசிக்காரர்களின் கற்பனை உலகில் காதல் உறவு இன்னும் முடிவடையாமல்கூட இருக்கலாம். பிரிவு ஏற்பட்டுவிட்டது என்பதை மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியாமல், முன்னாள் காதலரின் புகைப்படங்கள் மற்றும் சமூக வலைத்தளப் பதிவுகளை அடிக்கடி பார்ப்பார்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் ஒருவருடனான தொடர்பை இழப்பதை விரும்ப மாட்டார்கள். எனவே, காதல் உறவு முடிந்த பிறகும் நண்பர்களாகத் தொடர விரும்புவார்கள். அடிக்கடி போன் செய்வது, மெசேஜ் அனுப்புவது, முன்னாள் காதலரின் நண்பர்கள் வட்டத்திலும் தொடர்ந்து பழகுவது என அவர்களைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவார்கள். சில நேரங்களில் இது அக்கறையால் மட்டுமல்லாமல், இயல்பான ஆர்வம் அல்லது பொழுதுபோக்கு காரணமாகவும் இருக்கலாம்.

விருச்சிகம்

உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிகமாக இருக்கும். இதனால் முன்னாள் காதலர் தற்போது என்ன செய்கிறார், யாருடன் பழகுகிறார், வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை ரகசியமாகக் கவனிக்க விரும்புவார்கள். இது அவர்களைப் பிரிந்த ஏக்கத்தால் மட்டுமல்ல; அவர்களைப் பற்றிய அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தாலும் இருக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, November 11, 2026, 21:10 [IST]
Desktop Bottom Promotion