Latest Updates
-
முட்டையும், காளானும் இருந்தால் இந்த மாதிரி வித்தியாசமா ஆம்லெட் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
நவம்பர் 12-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு புதிய வருமான வழிகள் உருவாகும்! -
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிற்குள் இருக்கும் கிராமம் - இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 11, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கேட்ட வரம் கிடைக்கும் அதிர்ஷ்ட நாளாக இருக்குமாம் -
நவம்பர் 13-ல் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
18 மாதங்களுக்கு பின் ராகு மகர ராசிக்கு செல்வது இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்தில் தள்ளப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
1 கப் மீல் மேக்கர் இருந்தா இந்த மாதிரி வித்தியாசமான குருமா செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
உங்கள் முழங்கால் ரொம்ப கருப்பா இருக்கா? அப்ப இந்த பொருட்களில் ஒன்றை வைச்சே வெண்மையாக்கிரலாம் -
பார்லர் போகாமலே பளபளப்பான முகம் வேண்டுமா? இதோ 5 சூப்பரான சந்தன ஃபேஸ் பேக்குகள்!
குளிப்பதற்கு சிறந்தது குளிர்ந்த நீரா? வெந்நீரா? உடலில் முதலில் எந்தப் பகுதியில் தண்ணீர் ஊற்ற வேண்டும்?
Cold Water Vs Hot Water Bath: தினமும் நாம் செய்யும் அத்தியாவசியமான பழக்கங்களில் குளிப்பதும் ஒன்று. ஆனால், குளிக்கும் போது குளிர்ந்த நீரைப் பயன்படுத்துவது நல்லதா அல்லது வெந்நீரில் குளிப்பது சிறந்ததா என்று யோசித்திருக்கிறீர்களா? அதேபோல், முதலில் தலையில் தண்ணீர் ஊற்றலாமா அல்லது காலில் இருந்து தொடங்க வேண்டுமா? காலை நேரத்தில் குளிப்பது சிறந்ததா அல்லது இரவு நேரத்தில் குளிப்பது நல்லதா? இதுப்போன்று பலரது மனதில் உள்ள குளியல் தொடர்பான கேள்விகளுக்கு டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் மிகவும் விரிவாகவும், தெளிவாகவும் பகிர்ந்துள்ளார்.

குளிப்பதற்கு சிறந்தது குளிர்ந்த நீரா? இளஞ்சூடான நீரா?
"குளிப்பதற்கு மிகவும் குளிர்ந்த நீரையோ அல்லது கொதிக்கும் அளவுக்கு சூடான நீரையோ பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, உடலுக்கு இதமாக இருக்கும் இளஞ்சூடான நீரைப் பயன்படுத்துவது சிறந்தது. நம் முன்னோர்கள் கூட இளஞ்சூடான நீரில் குளிப்பதையே பரிந்துரைத்துள்ளனர்.
மிகவும் குளிர்ந்த நீர் திடீரென உடலில் படும்போது, 'Cold Shock Response' எனப்படும் எதிர்வினை ஏற்படலாம். இதனால் மூச்சு வேகமாகுதல், இதயத்துடிப்பு அதிகரித்தல், இரத்த அழுத்தம் உயர்தல் போன்ற மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆரோக்கியமானவர்களுக்கு இந்த மாற்றங்கள் சில நொடிகளில் சீராகலாம். ஆனால், இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது ஆபத்தை ஏற்படுத்தலாம்.
அதேபோல், மிகவும் சூடான நீரில் குளிப்பது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கி, வறட்சி மற்றும் அரிப்பை ஏற்படுத்தலாம். எனவே, உடலுக்கு ஏற்ற மிதமான வெப்பநிலையில் தண்ணீரைப் பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் சர்க்கரை, இரத்த அழுத்தப் பிரச்சனை உள்ளவர்கள் அதிக குளிர்ந்த நீரைத் தவிர்க்க வேண்டும்." என்று டாக்டர் கூறினார்.
குளிக்கும் போது முதலில் எந்தப் பகுதியில் தண்ணீர் ஊற்ற வேண்டும்?
"நம் முன்னோர்கள் குளிக்கும் போது முதலில் கால்களில் தண்ணீர் ஊற்றிவிட்டு, படிப்படியாக உடலின் மற்ற பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இதற்குப் பின்னாலும் அறிவியல் காரணம் இருக்கிறது.
குளிர்ந்த நீரைத் திடீரென மார்பு அல்லது தலைப்பகுதியில் ஊற்றும் போது உடலுக்கு ஏற்படும் வெப்பநிலை மாற்றம் அதிகமாக இருக்கலாம். இதைத் தவிர்க்க முதலில் பாதங்கள், முழங்கால்கள், தொடைகள், வயிறு, மார்பு எனப் படிப்படியாகத் தண்ணீர் ஊற்ற வேண்டும். கடைசியாக கழுத்தின் பின்பகுதி மற்றும் தலைக்குத் தண்ணீர் ஊற்றலாம். இதனால் உடல் தண்ணீரின் வெப்பநிலைக்கு மெல்ல பழகுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்." என்று டாக்டர் கூறினார்.
குளிக்கும் போது பாதங்களைச் சுத்தம் செய்வது ஏன் முக்கியம்?
"குளிக்கும் போது உடலில் வழியும் தண்ணீர் மட்டுமே பாதங்களைச் சுத்தப்படுத்திவிடாது. பாதங்களுக்கும் விரல்களுக்கு இடையிலான பகுதிகளுக்கும் சோப்பு போட்டு நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும்.
குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாதங்களை மிகவும் கவனமாகப் பராமரிக்க வேண்டும். சுத்தம் செய்த பிறகு விரல்களுக்கு இடையில் ஈரப்பதம் இல்லாதவாறு துணியால் நன்றாகத் துடைக்க வேண்டும். இல்லையெனில் பூஞ்சைத் தொற்று, அரிப்பு, புண்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும், பாதங்களை நீண்ட நேரம் தண்ணீரில் ஊற வைப்பதையும், தடிமனான சருமத்தை பிளேடு அல்லது கத்தியால் அகற்றுவதையும் தவிர்க்க வேண்டும்." என்று டாக்டர் கார்த்திகேயன் கூறினார்.
காலை குளியலா? இரவு குளியலா? எது சிறந்தது?
"காலை மற்றும் இரவு என இரண்டு நேரங்களிலும் குளிப்பதால் வெவ்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. காலையில் இளஞ்சூடான நீரில் குளிப்பது உடலுக்குப் புத்துணர்ச்சியையும் சுறுசுறுப்பையும் கொடுக்க உதவும்.
அதேபோல், இரவில் தூங்குவதற்கு ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு இளஞ்சூடான நீரில் குளிப்பது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவலாம். வெதுவெதுப்பான நீரில் குளித்த பிறகு உடலின் உட்புற வெப்பநிலை இயல்பாகக் குறைவது தூக்கத்திற்குத் தயாராக உதவுகிறது. இருப்பினும், அதிக சூடான நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதேப் போல் சாப்பிட்ட உடனேயே குளிப்பதையும் தவிர்ப்பது நல்லது." என்று டாக்டர் கூறினார்.
தலையில் முதலில் தண்ணீர் ஊற்றலாமா?
"பலரும் குளிக்கும் போது முதலில் தலையில் தண்ணீர் ஊற்றும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். குறிப்பாகக் குளிர்ந்த நீரில் குளிக்கும் போது இவ்வாறு திடீரெனத் தலையில் தண்ணீர் ஊற்றுவதைத் தவிர்க்க வேண்டும். முதலில் கால்களில் தொடங்கி, உடல் முழுவதும் படிப்படியாகத் தண்ணீர் ஊற்றிய பிறகு கடைசியாகத் தலைக்குக் குளிக்கலாம்" என்று டாக்டர் கூறினார்.
மொத்தத்தில், குளிக்கும் போது தண்ணீரின் வெப்பநிலை, ஊற்றும் முறை மற்றும் பாதங்களின் சுகாதாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது அவசியம். உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் தங்களுக்கு ஏற்ற குளியல் முறையை மருத்துவரிடம் ஆலோசித்துப் பின்பற்றுவது சிறந்தது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
