Latest Updates
-
நியூமராலஜி படி இந்த 5 எண்கள் கோடீஸ்வரராக்கும் ஆற்றலும், சக்தியும் கொண்டவையாம் - எந்தெந்த எண்கள் தெரியுமா? -
டீக்கடை மெது பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஈவ்னிங் டைம்-ல ட்ரை பண்ணுங்க.. -
இந்த படத்தில் உங்க கண்ணுக்கு முதலில் என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவர்ன்னு சொல்றோம்.. -
Vastu Tips: வாஸ்து படி வீட்டின் இந்த இடத்தில் அல்லது திசையில் செருப்பை வைத்தால் துரதிர்ஷ்டம் விடாம துரத்துமாம -
2027-க்கு முன் சுக்கிரன் இந்த 3 ராசிக்காரர்களை செல்வந்தராக்க போறாரு.. உங்க ராசி இதுல இருக்கா? -
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பிரைவேட் சேனல் எது? அந்த சேனல் யாருடையது தெரியுமா? -
கல்யாண வீட்டு புடலங்காய் பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
தீபாவளிக்கு சுட்ட முறுக்கு இருந்தா அதை வைச்சு இப்படி கார குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சமையலுக்கு எந்த எண்ணெய் பெஸ்ட்? எந்த எண்ணெயைத் தவிர்க்க வேண்டும்? மருத்துவர் தரும் விளக்கம்! -
50 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வைத்திருந்த இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார அரசர் யார் தெரியுமா?
பார்லர் போகாமலே பளபளப்பான முகம் வேண்டுமா? இதோ 5 சூப்பரான சந்தன ஃபேஸ் பேக்குகள்!
Sandalwood Face Packs In Tamil: இயற்கை வழியில் சருமத்தை அழகாகவும், பொலிவாகவும் வைத்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு ஏற்ற ஒரு அற்புதமான பொருள் என்றால் அது சந்தனம் தான். பாரம்பரியமாக சருமப் பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வரும் சந்தனம், அதன் குளிர்ச்சியான தன்மை மற்றும் நறுமணத்திற்காகப் பிரபலமானது. முக்கியமாக பொலிவிழந்து கருமையாக காணப்படும் வேளைகளில் இந்த சந்தனத்தைக் கொண்டு ஃபேஸ் பேக் தயாரித்து போடும் போது, முகம் பளிச்சென்று பிரகாசமாக மின்னும்.

அதுவும் இந்த சந்தனத்துடன் ரோஸ் வாட்டர், தேன், கற்றாழை ஜெல் போன்ற பொருட்களை சேர்த்து ஃபேஸ் பேக் தயாரித்து பயன்படுத்தும் போது, சருமத்திற்கு கூடுதல் ஈரப்பதமும், மென்மையும், புத்துணர்ச்சியான தோற்றமும் கிடைக்கலாம். இருப்பினும், ஒவ்வொருவரின் சரும வகையும் வித்தியாசமாக இருப்பதால், பொருட்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.
இப்போது சரும பொலிவை மேம்படுத்த உதவும் சில சந்தன ஃபேஸ் பேக்குகள் குறித்து காண்போம். முக்கியமாக ஒவ்வொரு ஃபேஸ் பேக்கையும் பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டும். எரிச்சல் அல்லது அழற்சி ஏற்பட்டால் அவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
1. சந்தனம் மற்றும் பால் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடரை எடுத்துக் கொண்டு, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* அதன் பின் முகத்தை துணியால் துடைத்துவிட்டு, மறக்காமல் மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும்.
2. சந்தனம் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடரை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது நீரை ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. சந்தனம் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடரை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து, சிறிது ரோஸ் வாட்டரையும் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. சந்தனம் மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து, வேண்டுமானால் சிறிது நீரையும் ஊற்றி நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
5. சந்தனம் மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அத்துடன் 1 டீஸ்பூன் சந்தன பவுடரை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
