Latest Updates
-
இந்த படத்தில் உங்க கண்ணுக்கு முதலில் என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவர்ன்னு சொல்றோம்.. -
Vastu Tips: வாஸ்து படி வீட்டின் இந்த இடத்தில் அல்லது திசையில் செருப்பை வைத்தால் துரதிர்ஷ்டம் விடாம துரத்துமாம -
2027-க்கு முன் சுக்கிரன் இந்த 3 ராசிக்காரர்களை செல்வந்தராக்க போறாரு.. உங்க ராசி இதுல இருக்கா? -
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பிரைவேட் சேனல் எது? அந்த சேனல் யாருடையது தெரியுமா? -
கல்யாண வீட்டு புடலங்காய் பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
தீபாவளிக்கு சுட்ட முறுக்கு இருந்தா அதை வைச்சு இப்படி கார குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சமையலுக்கு எந்த எண்ணெய் பெஸ்ட்? எந்த எண்ணெயைத் தவிர்க்க வேண்டும்? மருத்துவர் தரும் விளக்கம்! -
50 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வைத்திருந்த இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார அரசர் யார் தெரியுமா? -
வக்கிர சனியால் டிசம்பர் 11 வரை இந்த 5 ராசிக்கு மிகவும் ஆபத்தான காலகட்டம்.. உஷார்.. -
கோதுமை தோசையும், பூண்டு கார சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
டீக்கடை மெது பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஈவ்னிங் டைம்-ல ட்ரை பண்ணுங்க..
Tea Kadai Methu Pakoda Recipe In Tamil: மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது, உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? அதுவும் நன்கு மொறுமொறுவென்று சாப்பிட கேட்கிறார்களா? அப்படியானால் எப்போதும் போன்று ஒரே மாதிரியான பஜ்ஜி, போண்டா செய்து கொடுப்பதற்கு பதிலாக, டீக்கடை மெது பக்கோடாவை செய்து கொடுங்கள். இந்த பக்கோடா 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு மிகவும் சுலபமாக இருக்கும். முக்கியமாக இந்த பக்கோடாவை ஒருமுறை செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு இந்த டீக்கடை மெது பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே டீக்கடை மெது பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சோடா உப்பு - 2 சிட்டிகை
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + பொரிப்பதற்கு தேவையான அளவு
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 7 பல்
* இஞ்சி - 2 இன்ச்
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - 3 கொத்து
* பச்சரிசி மாவு - 50 கிராம்
* கடலை மாவு - 200 கிராம்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், உப்பு, சோம்பு,
பெருங்காயத் தூள், மிளகாய் தூள், சோடா உப்பு ஆகியவற்றை சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி, நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அத்துடன் பொடியாக
நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு மற்றும் இஞ்சியை நன்கு இடித்து சேர்க்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலையை
சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் பச்சரிசி மாவு மற்றும் கடலை மாவு சேர்த்து கைகளால்
கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, நன்கு பக்கோடா மாவு
பதத்திற்கு சற்று தளர்வாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம்
கொஞ்சமாக எண்ணெயில் கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால்,
சுவையான டீக்கடை மெது பக்கோடா தயார்.



Click it and Unblock the Notifications
