Latest Updates
-
கல்யாண வீட்டு புடலங்காய் பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
சமையலுக்கு எந்த எண்ணெய் பெஸ்ட்? எந்த எண்ணெயைத் தவிர்க்க வேண்டும்? மருத்துவர் தரும் விளக்கம்! -
50 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வைத்திருந்த இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார அரசர் யார் தெரியுமா? -
வக்கிர சனியால் டிசம்பர் 11 வரை இந்த 5 ராசிக்கு மிகவும் ஆபத்தான காலகட்டம்.. உஷார்.. -
கோதுமை தோசையும், பூண்டு கார சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 10, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்டசெலவுகள் தேடிவரப் போகுதாம் - பர்ஸ் பத்திரம் -
நவம்பர் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவதால் இந்த 3 ராசிகளை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு இந்த வெஜிடேபிள் வெள்ளை குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க! -
சத்தான உளுந்தோரை ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க - எலும்பு இரும்பு மாதிரி இருக்கும்
தீபாவளிக்கு சுட்ட முறுக்கு இருந்தா அதை வைச்சு இப்படி கார குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
Murukku Kara Kuzhambu Recipe in Tamil: கொண்டாட்டங்கள் நிறைந்த தீபாவளி பண்டிகை முடிந்து விட்டது. அனைவரின் வீடுகளிலும் தீபாவளிக்கு நிச்சயம் முறுக்கு சுட்டிருப்போம் அல்லது கடைகளிலாவது வாங்கிருப்போம். அந்த முறுக்கை வைத்து ஏதாவது வித்தியாசமாக செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியென்றால் அந்த முறுக்கை வைத்து காரசாரமான முறுக்கு குழம்பை செய்து பாருங்கள்.

முறுக்கை சைடிஷாக அல்லது நொறுக்குத்தீனியாக சாப்பிடுவோம். ஆனால் அதை வைத்து குழம்பு வைக்கலாம் என்பது பலரும் அறியாததாகும். இந்த முறுக்கு காரக் குழம்பு நீங்கள் வழக்கமாக சாப்பிடும் குழம்பு போல அல்லாமல் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும். வழக்கமான சாம்பார் அல்லது புளிக்குழம்பு சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த குழம்பு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும்.
உங்களுக்கு சுவையான முறுக்கு காரக் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முறுக்கு கார குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- முறுக்கு - 2 கப்
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
- சாம்பார் பொடி - ½ டீ ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
- மல்லித்தூள் - ½ டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- வெல்லம் - ½ டீ ஸ்பூன்
- மிளகுத்தூள் - ½ டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு - ½ டீ ஸ்பூன்
- வெந்தயம் - ¼ டீ ஸ்பூன்
- சீரகம் - 1 டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - 1 கொத்து
- பெருங்காயம் - 1 சிட்டிகை
செய்முறை:
- முறுக்கை ஓரளவிற்கு பெரிய துண்டுகளாக உடைத்து தனியே எடுத்து வைக்கவும். புளியை தண்ணீரில் அலசி மேற்பகுதியில் ஓடு மற்றும் தூசியை நீக்கிவிட்டு, நன்கு ஊற வைத்து கரைத்து வடித்து புளிக்கரைசல் எடுத்து கொள்ளவும்.
- வெங்காயத்தை தோல் உரித்து, வெங்காயத்தின் மேற்பரப்பில் இருக்கும் கருப்பு நிற புஞ்சையை தண்ணீரில் சுத்தமாக கழுவி விட்டு, பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும்.
- நன்கு பழுத்த தக்காளியை காம்பு பகுதியை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும். கருவேப்பிலையை மண் இல்லாமல் அலசி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் புளிக்கரைசலுடன் சேர்த்து 3 கப் அளவிற்கு வருமாறு தண்ணீர் சேர்க்கவும். அதனுடன் சாம்பார் தூள், மல்லித்தூள், மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- அதே சமயத்தில், மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய விடவும். பின் கடுகு சேர்த்து பொரிய விடவும். அதனுடன் வெந்தயம், மற்றும் சீரகம் சேர்க்கவும்.
- வெந்தயம் நிறம் மாறியதும், அதனுடன் கருவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். பின் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அதனுடன் நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து நன்கு குழையும் வரை வேக விடவும். பின் இந்த கலவையை கொதிக்கும் புளிக்கரைசல் உடன் சேர்த்து கிளறவும்.
- அதில் உடைத்து வைத்த முறுக்கை சேர்த்து மிக குறைவான தீயில் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். குழம்பு கெட்டியாக துவங்கியதும், வெல்லம் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்தால் சுவையான முறுக்கு குழம்பு ரெடி!



Click it and Unblock the Notifications
