கல்யாண வீட்டு புடலங்காய் பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..

Posted By:

Kalyana Veetu Pudalangai Poriyal Recipe In Tamil: உங்கள் வீட்டில் மதிய வேளைகளில் எப்போதும் ஏதாவது ஒரு பொரியல் செய்வீர்களா? உங்கள் வீட்டில் புடலங்காய் உள்ளதா? அப்படியானால் அந்த புடலங்காயைக் கொண்டு பொரியல் செய்யுங்கள். அதுவும் கல்யாண வீட்டு ஸ்டைலில் புடலங்காய் பொரியலை செய்யுங்கள். இப்படி பொரியல் செய்யும் போது, புடலங்காய் பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த பொரியல் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

Kalyana Veetu Pudalangai Poriyal How To Make Marriage Style Snake Gourd Stir Fry

உங்களுக்கு இந்த கல்யாண வீட்டு புடலங்காய் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கல்யாண வீட்டு புடலங்காய் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* கடலைப் பருப்பு - 1/2 கப் (30 நிமிடம் ஊற வைத்தது)
* புடலங்காய் - 300 கிராம்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2-3 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2-3
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* வேக வைத்த புடலங்காய்
* அரைத்த தேங்காய்

அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 1 மூடி
* பச்சை மிளகாய் - 2
* சீரகம் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் கடலைப் பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் புடலங்காயின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் நறுக்கிய புடலங்காய் மற்றும் ஊற வைத்த கடலைப் பருப்பை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து, நீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்த புடலங்காயை நீருடன் அப்படியே ஊற்றி கிளறி, நீரை ஓரளவு வற்ற விட வேண்டும்.
* இறுதியாக அதில் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து நன்கு கிளறி, 2-3 நிமிடம் வேக வைத்து இறக்கினால், கல்யாண வீட்டு புடலங்காய் பொரியல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, November 10, 2026, 13:10 [IST]
Desktop Bottom Promotion