Latest Updates
-
2027-க்கு முன் சுக்கிரன் இந்த 3 ராசிக்காரர்களை செல்வந்தராக்க போறாரு.. உங்க ராசி இதுல இருக்கா? -
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பிரைவேட் சேனல் எது? அந்த சேனல் யாருடையது தெரியுமா? -
கல்யாண வீட்டு புடலங்காய் பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
தீபாவளிக்கு சுட்ட முறுக்கு இருந்தா அதை வைச்சு இப்படி கார குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சமையலுக்கு எந்த எண்ணெய் பெஸ்ட்? எந்த எண்ணெயைத் தவிர்க்க வேண்டும்? மருத்துவர் தரும் விளக்கம்! -
50 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வைத்திருந்த இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார அரசர் யார் தெரியுமா? -
வக்கிர சனியால் டிசம்பர் 11 வரை இந்த 5 ராசிக்கு மிகவும் ஆபத்தான காலகட்டம்.. உஷார்.. -
கோதுமை தோசையும், பூண்டு கார சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 10, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்டசெலவுகள் தேடிவரப் போகுதாம் - பர்ஸ் பத்திரம் -
நவம்பர் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க..
Vastu Tips: வாஸ்து படி வீட்டின் இந்த இடத்தில் அல்லது திசையில் செருப்பை வைத்தால் துரதிர்ஷ்டம் விடாம துரத்துமாம
Vastu Tips: வாஸ்து சாஸ்திரம் என்பது நமது வாழ்விடத்தையும், தொழில் செய்யும் இடத்தையும் எப்படி நல்லிணக்கத்துடனும், அதிர்ஷ்டத்துடனும் பராமரிக்க வேண்டும். வாஸ்து நம் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வாஸ்து சாஸ்திரத்தில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விதிகள் கூறப்பட்டுள்ளன.

வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டில் உள்ள பொருட்களை எந்தத் திசையில், எப்படி வைக்க வேண்டும் என்பது குறித்து வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில், பொருட்கள் சரியான திசையில் வைக்கப்படாவிட்டால், அது நம் வாழ்க்கையைப் பாதித்து, பல்வேறு சிக்கல்களை உருவாக்கக்கூடும். இந்த பதிவில் வாஸ்து சாஸ்திரத்தின் படி காலணிகள் மற்றும் செருப்புகளை எப்படி, எந்தத் திசையில் வைக்க வேண்டும் என்பது குறித்துத் தெரிந்துகொள்ளலாம்.
ஷூ மற்றும் செருப்புகளை தலைகீழாக வைக்கக்கூடாது
வாஸ்து சாஸ்திரத்தில், வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருட்களையும் எங்கு வைக்க வேண்டும் என்பது குறித்து பல விதிகள் உள்ளன. காலணிகளையும் செருப்புகளையும் ஒருபோதும் தலைகீழாக வைக்கக்கூடாது. ஒருவேளை அவ்வாறு வைத்தால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். மேலும், இது வீட்டின் மகிழ்ச்சியையும் அமைதியையும் குலைத்துவிடும்.
காலணிகளை அங்கொன்றும், இங்கொன்றுமாய் கழட்டக்கூடாது
பலர் அவசரத்தில் தங்கள் காலணிகளை ஆங்காங்கே கழற்றி எறிந்து விடுகிறார்கள். இவ்வாறு காலணிகளைச் சிதறும் படி வைத்திருப்பது மிகவும் அசுபமாகக் கருதப்படுகிறது. இவ்வாறு செய்வது வீட்டிற்கு வறுமையைக் கொண்டுவரும். இதனால் வீட்டில் உள்ளவர்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாக நேரிடும்.
வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் வைக்கக்கூடாது
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் காலணிகளையும் செருப்புகளையும் வைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வது வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலைக் கொண்டுவரும். மேலும், வாஸ்துவின்படி இந்தத் திசைகள் லட்சுமி தேவிக்கு உரியவை என்று கருதப்படுகிறது. எனவே, இந்தத் திசைகளில் காலணிகளையும் செருப்புகளையும் வைப்பவர்கள் மீது அன்னை லட்சுமி கோபமடைவார்.
காலணிகளை Shoe rack-ல் மட்டும் வைக்க வேண்டும்
வாஸ்து சாஸ்திரத்தின்படி, காலணிகள் மற்றும் செருப்புகளை எப்போதும் ஒரு குறிப்பிட்ட ரேக்கில் அடுக்கி வைக்க வேண்டும். அவை அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறி இருக்கக்கூடாது. இவ்வாறு செய்வதால் வீடு சுத்தமாக இருப்பதுடன், வாஸ்து தோஷங்களும் ஏற்படாது. வாஸ்து முறைப்படி, காலணி அடுக்கை எப்போதும் தெற்கு திசையிலேயே வைக்க வேண்டும்.
வீட்டின் வாசலில் காலணிகளைக் கழற்றாதீர்கள்
வீட்டின் வாசலில் காலணிகளை அடுக்கி வைப்பவர்கள், தாங்கள் செய்வது முற்றிலும் தவறான செயல் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வீட்டின் வாசலில் காலணிகளைக் கழற்றுவது வீட்டிற்குத் துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவருவதுடன், குடும்பத்தினரிடையே கருத்து வேறுபாடுகளையும் மோதல்களையும் உருவாக்கக்கூடும்.
காலணிகளை எந்த திசையில் வைக்க வேண்டும்?
வாஸ்து சாஸ்திரத்தின்படி, காலணிகளையும் செருப்புகளையும் வீட்டின் தெற்கு அல்லது மேற்கு திசையில் வைக்க வேண்டும். இவ்வாறு காலணிகளை வைக்கும் வீடுகளில் அமைதியான சூழல் நிலவுவதுடன், பண வரவுக்கான வாய்ப்புகளும் ஏற்படுகின்றன.
காலணிகள் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்
காலணிகளை கழற்றி விடுவதற்கு முன்பு, அவை சுத்தமாக இருப்பதையும், அவற்றில் உள்ள அழுக்குகள் நீக்கப்பட்டிருப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். காலணி வைக்கும் இடம் எப்போதும் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருக்க வேண்டும். சிறிய அளவிலான இந்த முயற்சி, எதிர்மறை ஆற்றலை விலக்கி வைக்க பெரிதும் உதவும்.



Click it and Unblock the Notifications

