Latest Updates
-
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பிரைவேட் சேனல் எது? அந்த சேனல் யாருடையது தெரியுமா? -
கல்யாண வீட்டு புடலங்காய் பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
தீபாவளிக்கு சுட்ட முறுக்கு இருந்தா அதை வைச்சு இப்படி கார குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சமையலுக்கு எந்த எண்ணெய் பெஸ்ட்? எந்த எண்ணெயைத் தவிர்க்க வேண்டும்? மருத்துவர் தரும் விளக்கம்! -
50 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வைத்திருந்த இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார அரசர் யார் தெரியுமா? -
வக்கிர சனியால் டிசம்பர் 11 வரை இந்த 5 ராசிக்கு மிகவும் ஆபத்தான காலகட்டம்.. உஷார்.. -
கோதுமை தோசையும், பூண்டு கார சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 10, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்டசெலவுகள் தேடிவரப் போகுதாம் - பர்ஸ் பத்திரம் -
நவம்பர் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவதால் இந்த 3 ராசிகளை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா?
2027-க்கு முன் சுக்கிரன் இந்த 3 ராசிக்காரர்களை செல்வந்தராக்க போறாரு.. உங்க ராசி இதுல இருக்கா?
Venus Transit In Libra 2026: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன், தற்போது கன்னி ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த சுக்கிரன் நவம்பர் 14 ஆம் தேதி கன்னி ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார்.
அதன் பின் நவம்பர் 22 ஆம் தேதி தனது சொந்த ராசியான துலாம் ராசியில் நுழைந்து பயணிக்கவுள்ளார். இப்படி சொந்த ராசியில் சுக்கிரன் 2027 ஜனவரி 01 ஆம் தேதி வரை இருந்து, பின் விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். சுக்கிரன் சொந்த ராசியில் பயணிப்பதால் பஞ்சமகாபுருஷ ராஜயோகங்களின் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது.

இந்த ராஜயோகத்தினாலும், சுக்கிரனின் அருளாலும் சில ராசிக்காரர்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு செல்வந்தராகவுள்ளனர். அதுமட்டுமின்றி, தொழிலில் நல்ல வளர்ச்சியையும் காணவுள்ளனர். இப்போது நவம்பர் 22 ஆம் தேதி துலாம் ராசிக்கு செல்லும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்கள் வாழ்வில் நல்ல உயரத்தை அடையவுள்ளனர் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புக்களும் தேடி வரலாம். முக்கியமாக அலுவலகத்தில் உங்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும் மற்றும் உங்களின் திறமைகள் பணியிடத்தில் பாராட்டப்படும்.
வருகிற புத்தாண்டில் உங்களின் எதிரிகளை வென்று வீழ்த்துவீர்கள். உடன் பிறந்தவர்களுடனான உறவு வலுவடையும். பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மன அழுத்தத்தால் தள்ளிப் போட்டு வந்த வேலைகளும் வெற்றிகரமாக முடிவடையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். எனவே இந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதோடு, ஆடம்பர வாழ்க்கையை வாழ்வீர்கள்.
வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள்.
கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பொருள் வசதிகள் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க வேண்டுமென்ற கனவு நனவாகும். ரியல் எஸ்டேட் தொடர்பான வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தாயுடனான உறவு வலுவடையும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் நல்ல மரியாதை கிடைப்பதோடு, கடின உழைப்பு உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். இது உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் மற்றும் எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட உத்வேகம் அளிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
